உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சூரிய குளியலின் போது டிரம்ப் கொல்லப்படலாம்; ஈரான் மிரட்டல்

சூரிய குளியலின் போது டிரம்ப் கொல்லப்படலாம்; ஈரான் மிரட்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அவரது வீட்டில் சூரிய குளியலில் ஈடுபடும் போது, டிரோன் தாக்குதலின் மூலம் கொல்லப்படுவது மிகவும் எளிதான ஒன்று என்று ஈரானின் மூத்த ஆலோசகர் ஜாவத் லரிஜானி கூறியிருப்பது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் அமெரிக்க தலையீட்டினால் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தப் போரின் போது, ஈரானின் அணுசக்தி நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது அந்நாட்டை ஜீரணிக்க முடியாத விஷயமாக மாறியுள்ளது. எனவே, அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிராக ஈரான் தலைவர்கள் வெளிப்படையான மிரட்டல்களையும், கருத்துக்களையும் கூறி வருகின்றனர். இந்த நிலையில், ஈரான் நாட்டு ஆட்சியாளரான அயதொல்லா அலி கமேனியின் மூத்த ஆலோசகர் ஜாவத் லரிஜானி, அமெரிக்க அதிபர் டிரம்ப் குறித்து பேசிய விஷயம் தற்போது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது; புளோரிடாவின் உள்ள அவரது வீட்டில் டிரம்ப் நீண்ட நேரம் சூரிய குளியல் போட முடியாது. ஏனெனில், அவர் மீது டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்படலாம். இது மிகவும் எளிமையான விஷயம்,' என்று கூறினார். கடந்த 2020ம் ஆண்டு ஈரான் தளபதி சுலைமாணியை டிரம்ப் உத்தரவின் பேரில் அமெரிக்கா கொன்றதற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதனிடையே, ஈரான் தரப்பில் சுமார் ரூ.225 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. ஈரான் ஆட்சியாளர் கமேனிக்கும், கடவுளுக்கும் எதிரானவர்களை அழிப்பதற்காக இந்த தொகை பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. ஈரான் மக்களும், வெளிநாடுகளில் வசிக்கும் ஈரானியர்களும் இதற்காக நிதியுதவி அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில், ஈரான் மிரட்டல் குறித்து அதிபர் டிரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. உண்மையில் அது ஒரு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று கூறிய அதிபர் டிரம்ப், தான் கடைசியாக 7 வயதில் சூரிய குளியல் போட்டதாகவும், தனக்கு அதன் மீது ஆர்வமில்லை என்றும் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

subramanian
ஜூலை 10, 2025 16:28

ஈரான் அழிவை நோக்கி செல்கிறது.


Rathna
ஜூலை 10, 2025 12:37

மூர்க்கன் இன்னொரு சூரனிடம் சண்டை போடுகிறான். அழிவுக்கே பிறந்தவனுங்க


Mecca Shivan
ஜூலை 10, 2025 10:21

அப்படையென்றால் சூரிய குளியல் மட்டுமில்லை குளிப்பதையே தவிர்த்துவிடுவோம்


K V Ramadoss
ஜூலை 10, 2025 11:55

இப்பமட்டும் குளிக்கிறார் என்று என்ன நிசசயம்.


Jack
ஜூலை 10, 2025 09:44

இனிமே குளிக்கிறது மட்டும் இல்ல ...


Indian
ஜூலை 10, 2025 08:55

ஈரானுக்கு அழிவு காலம் ஆரம்பித்துவிட்டது


djivagane
ஜூலை 10, 2025 13:10

சீனாவும் ரஷ்யாவும் இருக்கும்


சமீபத்திய செய்தி