உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடா, மெக்சிகோவுக்கு விதித்த புதிய இறக்குமதி வரி இடைநிறுத்தம்; டிரம்ப் திடீர் மனமாற்றம்

கனடா, மெக்சிகோவுக்கு விதித்த புதிய இறக்குமதி வரி இடைநிறுத்தம்; டிரம்ப் திடீர் மனமாற்றம்

வாஷிங்டன்: கனடா, மெக்சிகோ நாடுகளுக்கு புதிதாக விதித்த இறக்குமதி வரியை ஒரு மாதத்திற்கு, இடைநிறுத்தம் செய்வதாக, அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் 47வது அதிபராக, ஜன., 20ல் பதவியேற்ற குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், அதிபர் டிரம்ப், 'மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 25 சதவீத வரி விதிக்கப்படும்.சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, கூடுதலாக, 10 சதவீத வரி விதிக்கப்படும்' என்றார். கூடுதல் வரி விதிப்பால் மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் கடும் அதிருப்தி அடைந்தன. அமெரிக்க பொருட்களுக்கு, 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். அதேபோல் மெக்சிகோ நாடுகளும் அமெரிக்க பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படும் என தெரிவித்தது. இந்நிலையில் வரி விலக்கு அளிக்க கோரி, டிரம்புக்கு கனடா பிரதமர், மெக்சிகோ அதிபர் தொலை பேசியில் தொடர்பு கொண்டு வலியுறுத்தினர். இதன் பிறகு, கனடா, மெக்சிகோ நாடுகளுக்கு புதிதாக விதித்த இறக்குமதி வரியை ஒரு மாதத்திற்கு, இடைநிறுத்தம் செய்வதாக, அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து சமூகவலைதளத்தில் டிரம்ப் வெளியிட்ட அறிக்கை: மெக்சிகோவின் அதிபர் கிளாடியா ஷீன்பாமுடன் நான் தொலைபேசியில் பேசினேன். இது மிகவும் நட்புரீதியான உரையாடலாக இருந்தது. மெக்சிகோவுக்கு புதிதாக விதித்த இறக்குமதி வரியை ஒரு மாத காலத்திற்கு உடனடியாக இடைநிறுத்தவும் நான் ஒப்புக்கொண்டேன். பாதுகாப்பான வடக்கு எல்லையை உறுதி செய்வதற்கும், நமது நாட்டிற்குள் வந்து குவிந்து வரும் பென்டானில் போன்ற கொடிய போதைப்பொருட்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் கனடா ஒப்புக்கொண்டுள்ளது. இவை லட்சக்கணக்கான அமெரிக்கர்களைக் கொன்று, நம் நாடு முழுவதும் அவர்களின் குடும்பங்களையும் சமூகங்களையும் அழித்து வருகின்றன. அதிபராக அனைத்து அமெரிக்கர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வது எனது பொறுப்பு. நான் அதைத்தான் செய்கிறேன். இந்த ஆரம்ப முடிவில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கனடாவுக்கு புதிதாக விதித்த இறக்குமதி வரி ஒரு மாதத்திற்கு, இடைநிறுத்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

SUBRAMANIAN P
பிப் 04, 2025 13:59

பயந்துட்டியான் டிரம்பு.. கனடா இறக்குமதியை அமெரிக்க நிறுத்திட்டா அமெரிக்கா சாயம் வெளுத்துப்போகும்.. அதனாலேயே இதற்கு முந்தைய அதிபர்கள் கனடாவுக்கு சப்போர்ட்டாகவே இருந்திருக்கிறார்கள். ஓவர் ஸீன் உடம்புக்கு ஆகாது.. இங்க ஓட ஒருத்தரு ஓவரா ஸீன் போட்டாரு. இப்போ சப்பை ஆயிட்டாரு.. அடுத்த தேர்தல் முடிஞ்சவுடனே குடும்பத்தோட துபாய் போயிடுவார்..


Haja Kuthubdeen
பிப் 04, 2025 11:08

இங்குள்ள ட்ரம்ப் வெறியர்களுக்கு அவரைப்பற்றி என்ன தெரியுமோ? வேறு ஒரு நாட்டையோ அல்லது வேற்று நாட்டின் ஒரு பகுதியையோ அமெரிக்காவில் இனைக்க நினைப்பதெல்லாம் நடக்க போவதே இல்லை.


RAJ
பிப் 04, 2025 08:08

இந்தியா போதை மருந்தை ஒழிக்க வேண்டும். கயவர்களை கருவறுக்கவேண்டும் இளைய தலைமுறையை காப்பாற்ற வேண்டும்..


Kasimani Baskaran
பிப் 04, 2025 07:44

கனடா ஒரு மாதத்துக்குள் அமெரிக்காவுடன் இணைத்தால் தப்பிக்க முடியும். இறக்குமதி வரியை கூட்டவில்லை என்றாலும் கூட அழுத்தம் தொடரும். வெளியே போகும் பொழுது கூட ட்ரூடோவால் நிம்மதியாக போகமுடியவில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை