உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / துருக்கி அதிபர் உதவியுடன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்: அதிபர் டிரம்ப் சபதம்!

துருக்கி அதிபர் உதவியுடன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்: அதிபர் டிரம்ப் சபதம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: துருக்கி அதிபர் ரெசெப் எர்டோகன் உதவியுடன் உக்ரைன்- ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதி அளித்துள்ளார்.உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்த உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், போர் நிறுத்தம் தொடர்பாக இரு தரப்பிலும் தீவிர பேச்சு நடத்தினார். இந்நிலையில், துருக்கி அதிபர் ரெசெப் எர்டோகன் உதவியுடன் உக்ரைன்- ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என டிரம்ப் தெரிவித்தார்.இது குறித்து அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ரஷ்யா- உக்ரைன் போர் உட்பட பல விஷயங்கள் குறித்து துருக்கி அதிபர் ரெசெப் எர்டோகன் உடன் தொலைபேசியில் பேசினேன். இருவரும் சிறப்பான பேச்சுவார்த்தை நடத்தினோம். எதிர்காலத்தில் துருக்கிக்கு வருமாறு ரெசெப் எர்டோகன் எனக்கு அழைப்பு விடுத்தார். நானும் அமெரிக்காவுக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தேன். நான் அதிபராக இருந்த போது, துருக்கி உடன் உறவு சிறப்பாக இருந்தது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாதிரியார் ஆண்ட்ரூ பிரன்சனை அமெரிக்காவிற்குத் திருப்பி அனுப்ப அவர் உதவினார். பல விஷயங்களில் நாங்கள் நெருக்கமாக இணைந்து பணியாற்றினோம். துருக்கி அதிபர் ரெசெப் எர்டோகன் உதவியுடன் உக்ரைன்- ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர ஆவலுடன் காத்திருக்கிறேன். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Sivasankara Raman.
மே 13, 2025 08:51

Turkey played Double Game but Goal is always will get by Our mother India - VSR


Sivasankara Raman.
மே 13, 2025 08:46

Turkey played Double. Game .


India our pride
மே 06, 2025 11:01

அவனே மிக பெரிய ஜிஹாதி. மைனாரிட்டிகளை அடக்கி தீவிரவாதத்தை பரப்புபவன். அவன் இந்த கோமாளியோடு சேர்ந்தால் படு ஜோரு


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 06, 2025 10:53

இதுல உன் சேத்தாளியே பாகிஸ்தானுக்கு போர் விஷயத்தில் உதவுற ஆளு ..... அவன் எப்படி இன்னொரு போரை நிறுத்த வருவான் ??


Kasimani Baskaran
மே 06, 2025 10:45

அவரே ஒரு தீவிரவாதி…


Raja
மே 06, 2025 10:20

Turkeys PM is one of the worst fanatics of Religion in recent times. The guy is always against India. This guy wants to establish one particular religious rule in the world. I do not know how Trump believes the Turkish PM?


Ganesh
மே 06, 2025 10:15

ஹா ஹா ரெண்டு பேருக்குமே ஒரே மாதிரியான கெட்ட எண்ணங்கள்...


முக்கிய வீடியோ