உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எலான் மஸ்க்கின் வருத்தத்தை ஏற்றுக்கொண்டார் டிரம்ப்; போன வாரம் டூ இப்போது பழம்!

எலான் மஸ்க்கின் வருத்தத்தை ஏற்றுக்கொண்டார் டிரம்ப்; போன வாரம் டூ இப்போது பழம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ''தொழில் அதிபர் எலான் மஸ்கின் வருத்தத்தை டிரம்ப் ஏற்றுக்கொண்டதாகவும், அவர் நன்றி தெரிவிப்பதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நெருங்கிய நண்பராக இருந்தவர் தொழிலதிபர் எலான் மஸ்க். அரசின் செயல்திறன் மேம்பாட்டு துறையின் தலைவராகவும் இருந்தார். சமீபத்தில் அந்த பதவியில் இருந்து விலகினார். அதன் பின் டிரம்ப் அரசு புதிய செலவு மசோதாவை அறிமுகப்படுத்தியது. இந்த மசோதாவை எதிர்க்கட்சியை காட்டிலும் எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்தார். அருவருப்பானது என்றார்.இதனால் கோபமடைந்த டிரம்ப், எலான் மஸ்க் நிறுவனத்துக்கு செல்லும் மானியங்களை நிறுத்த போவதாக மிரட்டல் விடுத்தார். இந்நிலையில், டிரம்ப் குறித்த தன் சமூக வலைதள பதிவுகளுக்கு எலான் மஸ்க் நேற்று வருத்தம் தெரிவித்தார். அதில் தான் எல்லை மீறிவிட்டதாகவும் கூறியிருந்தார். இது குறித்து அதிபர் டிரம்ப் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், அவரை எதற்கும் குறை கூறவில்லை. நான் சற்று ஏமாற்றமடைந்தேன், என்றார்.இந்நிலையில், டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்கின் வருத்தத்தை டிரம்ப் ஏற்றுக்கொண்டார். இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறியதாவது: தொழில் அதிபர் எலான் மஸ்கின் அறிக்கையை அதிபர் டிரம்ப் ஏற்றுக்கொண்டார், அதைப் பாராட்டுகிறார். அவருக்கு நன்றி தெரிவித்தார். அமெரிக்க மக்களின் வணிகத்தில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். கடந்த வாரம் மாறி, மாறி விமர்சனம் செய்து சண்டை போட்டு கொண்ட டிரம்ப், மஸ்க் ஆகிய இருவரும் இந்த வாரம் நண்பராக மாறி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

புரொடஸ்டர்
ஜூன் 13, 2025 09:03

நண்பேன்டா என எலான் மஸ்க்குடன் டிரம்ப் உண்மையான சமரசமா?


Ramesh Sargam
ஜூன் 12, 2025 12:48

எலான் இடத்தில் அதிக பணம் இருக்கிறது. டிரம்ப் இடத்தில் அதிகாரம் இருக்கிறது. ஒருவர் உதவி மற்றொருவருக்கு தேவை என்பதால் மீண்டும் நண்பேன்டா...


Ramesh Sargam
ஜூன் 12, 2025 12:46

அப்ப மீண்டும் ஒரு தேனிலவுதான்... ஜாலிதான்...


M. PALANIAPPAN, KERALA
ஜூன் 12, 2025 11:33

இரண்டு கோமாளிகள்


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 12, 2025 10:21

போடா எல்லாம் விட்டுத் தள்ளு பழச எல்லாம் சுட்டுத் தள்ளு புதுசா இப்போ பொறந்தோமுன்னு எண்ணிக்கொள்ளடா... பயணம் எங்கே போனால் என்ன பாதை நூறு ஆனால் என்ன தோட்டம் வச்சவன் தண்ணீர் விடுவான் சும்மா நில்லடா... பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழ வைக்க அவனைத் தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே..


SUBRAMANIAN P
ஜூன் 12, 2025 13:19

பாட்டாவே பாடிட்டியா .. அப்ப ...நானும்.. மாசிலா உண்மைக்காதலே மாறுமோ செல்வம் வந்தபோதிலே பேசும் வார்த்தை உண்மைதானா பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா...


Chandru
ஜூன் 12, 2025 09:56

Kooditangayaaaaaaaa kooditangayaaaaaaa


Sekar
ஜூன் 12, 2025 09:51

இவர்கள் வார்த்தைகளில் நிலைத்த தன்மை இல்லாதவர்கள், நம்ப கூடாதவர்கள். இவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தரமில்லாதவர்களிடம் மிக பெரிய பதவியும், பணமும் இருக்கிறது என்றாலும் நம் நாட்டிற்கு அமெரிக்கா உறவு மிக முக்கியம்.


J.Isaac
ஜூன் 12, 2025 09:45

போன வாரம் டூ, இந்த வாரம் சேக்கா. மக்கள் கிருக்கர்கள். இதே நிலைமைதான் இந்தியாவில்


Muguntharajan
ஜூன் 12, 2025 09:23

சேந்து உக்காந்து ஒரு ரவுண்டு சரக்கு போட்டா எல்லாம் சரியா போகும். மப்பு அதிகமா போச்சினா மறுபடியும் சண்டை வந்தாலும் வரலாம்.


hariharan
ஜூன் 12, 2025 09:20

போன வாரம் அன்னியன், இந்த வாரம் ராமானுஜம் அம்பி.


புதிய வீடியோ