உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / முன்னாள் அதிபர் படுகொலை ஆவணங்களை வெளியிட இந்நாள் அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு

முன்னாள் அதிபர் படுகொலை ஆவணங்களை வெளியிட இந்நாள் அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு

வாஷிங்டன்: முன்னாள் அதிபர் ஜான் கென்னடி, இவரது சகோதரர் ராபர்ட் கென்னடி, மார்ட்டின் லூதர் கிங் படுகொலை தொடர்பான ஆவணங்களை வெளியிட அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.அமெரிக்காவின், 35வது அதிபராக பதவி வகித்தவர், ஜான் எப் கென்னடி. இவரது குடும்பத்தை சேர்ந்த பலர், தொடர்ந்து மர்மமான முறையிலேயே மரணம் அடையும் துரதிர்ஷ்டம் தொடர்ந்து நடந்தது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் கென்னடி, 1963ல், டல்லாசில், லீ ஹார்வி என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அரசியல் காரணங்களுக்காக இந்த கொலை நடந்ததாக கூறப்பட்டாலும், இந்த கொலைக்கான மர்மம், இன்னும் நீடிக்கிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=c2kg06wy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவரது சகோதரர், ராபர்ட் கென்னடி, 1968ல், லாஸ் ஏஞ்சல்சில் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த, 1999ல், ஜான் கென்னடியின் மகன், ஜூனியர் கென்னடியும், அவரது மனைவியும், விமான விபத்தில் உயிரிழந்தனர். ஜான் கென்னடியின் மற்றொரு சகோதரர், டெட் கென்னடியும், 1964ல் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். ஜான் கென்னடியின் சகோதரி, கேதலின், 1948ல் நடந்த விமான விபத்தில் மரணமடைந்தார். ராபர்ட் கென்னடியின் மகன், டேவிட் கென்னடி, 1984ல், அளவுக்கு அதிமான மருந்துகளை சாப்பிட்டால், உயிரிழந்தார். ராபர்ட் கென்னடியின் மற்றொரு மகன், மைக்கேல், 1997ல் நடந்த விபத்தில் உயிரிழந்தார். கென்னடி குடும்பத்தில், மர்ம மரணங்கள் தொடர்ந்து வந்தது. இதில் உள்ள மர்மங்களை கொண்டு வர, தற்போது அதிபராக பதவியேற்றுள்ள டிரம்ப் திட்டமிட்டு உள்ளார். இதற்காக, அவர் உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளார். முன்னாள் அதிபர் ஜான் கென்னடி, இவரது சகோதரர் ராபர்ட் கென்னடி, மார்ட்டின் லூதர் கிங் படுகொலை தொடர்பான ஆவணங்களை வெளியிட வேண்டும் என டிரம்ப் அதிரடி உத்தரவிட்டுள்ளார். படுகொலை பற்றிய முழு ஆவணங்களை வெளியிடுவதற்கு 15 நாட்களுக்குள் ஒரு திட்டத்தை உருவாக்குமாறு தேசிய புலனாய்வு இயக்குனருக்கு அறிவுறுத்தும் ஒரு நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார். அவர் கூறி இருப்பதாவது: முன்னாள் அதிபர் ஜான் கென்னடி, ராபர்ட் கென்னடி, மார்ட்டின் லூதர் கிங் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேலாகியும் மர்மங்கள் நீடிக்கிறது. படுகொலை தொடர்பான ஆவணங்களை வெளியிட வேண்டும். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramesh Sargam
ஜன 24, 2025 22:32

அடிக்கடி அரங்கேறும் துப்பாக்கி சூடு பிரச்சினைக்கு ஒரு நிரந்தர முடிவு காண எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. லாஸ் ஏஞ்சலஸ் நகரில் தொடர்ந்து பற்றி எரியும் தீயிலிருந்து அங்குள்ள மக்களை காப்பாற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்க துப்பில்லை. தேவையில்லாத பழைய விஷயங்களை கிளறிக்கொண்டிருக்கிறார் இந்த அதிபர் டிரம்ப்.


Perumal Pillai
ஜன 24, 2025 13:45

The Indian government too should make public the secrecy behind the mysterious deaths of Netaji, Sastri, Sanjay Gandhi, Madhavrao Scindia and Rajesh Pilot.


SANKAR
ஜன 24, 2025 15:02

Netaji was alive after reported date of death and with pasumpon devar.Devar himself stated so.As for this not openly stated the reason is indirectly stated in THIRUMBI PAAR movie. Allied wanted him at Nuremberg trial.It was Nehru who protected Netaji saying Netaji died n plane crash.Ebery one knows Devars FORWARD BLOCK was firm supporter of Netaji and everyone wanted to protect him and succeeded.


Columbus
ஜன 24, 2025 12:13

If the assassination details are indeed published, it may bring out the roles of CIA, Israeli lobby, Military Industrial Complex and the then Deep State in the open.


Anantharaman Srinivasan
ஜன 24, 2025 11:32

This attempt is waste over 60 years.. Only waste of time energy and money of government.


SANKAR
ஜன 24, 2025 12:40

please read what columbus has posted. you still think this is a WASTE?


veera
ஜன 24, 2025 11:20

அண்ணாமலை ஸ்டைல் அமெரிக்காவில்.....சூப்பர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை