உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எச்1பி விசாவுக்கு ஒரு லட்சம் டாலர் கட்டணம்; அமெரிக்க நிறுவனங்கள் தலையில் விழுந்த பேரிடி!

எச்1பி விசாவுக்கு ஒரு லட்சம் டாலர் கட்டணம்; அமெரிக்க நிறுவனங்கள் தலையில் விழுந்த பேரிடி!

வாஷிங்டன்: எச்1பி விசாவுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை அமெரிக்கா அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ளார். ''தற்போது 'எச்1பி' விசா வைத்திருக்கும் யாருக்கும் பாதிப்பு இல்லை. ஒரு லட்சம் டாலர் கட்டணம் என்பது புதிய விசா கோரும் விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும்'' என்று அமெரிக்கா தெளிவுபடுத்தி உள்ளது.அமெரிக்க அதிபராக, இரண்டாவது முறையாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரியில் பதவியேற்றதில் இருந்து விசா வழங்குவதில் பல நிபந்தனைகளையும், கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்துள்ளார். அந்த வகையில் தற்போது எச் 1 பி விசா விண்ணப்ப கட்டணத்தை உயர்த்தி டிரம்ப் அறிவித்து இருக்கிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=szhu8ebw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0புதிய விதிகள் படி, எச் - 1 பி விசாவில் ஒருவருக்கு பணி அளிக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட நிறுவனம் அவருக்காக 1 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் 88 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்) கட்டணத்தை செலுத்த வேண்டும். இந்த உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். தற்போது 'எச்1பி' விசா வைத்திருக்கும் யாருக்கும் பாதிப்பு இல்லை. ஒரு லட்சம் டாலர் கட்டணம் என்பது புதிய விசா கோரும் விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும். சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்திட வேண்டி இந்த திட்டத்தை டிரம்ப் அறிமுகப்படுத்த உள்ளார்.டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவு செப்.,21 முதல் அமலுக்கு வருகிறது. இதனால் மைக்ரோசாப்ட், ஜேபி மார்கன், அமேசான் நிறுவனங்கள், தங்களது எச்1பி விசா ஊழியர்களை அமெரிக்காவில் இருக்கும்படி உத்தரவிட்டுள்ளது. வெளிநாடுகளில் இருக்கும் ஊழியர்கள், உத்தரவு அமலுக்கு வருவதற்கு முன்னதாக உடனடியாக அமெரிக்காவுக்கு வந்து விட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.2025ம் ஆண்டின் முதல் அரையாண்டில் அமேசான் நிறுவனம், 12 ஆயிரம் ஊழியர்களுக்கு எச்1 பி விசா பெற்றுள்ளது. பேஸ்புக் உரிமையாளரான மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் தலா 5 ஆயிரம் ஊழியர்களுக்கு எச்1 பி விசா பெற்றுள்ளன.டிரம்ப் விதித்துள்ள ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் காரணமாக, அமெரிக்காவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.எச்1பி விசாவை சார்ந்திருக்கும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறுவனம் - ஊழியர் எண்ணிக்கை* அமேசான் - 10,044* டிசிஎஸ் - 5,505* மைக்ரோசாப்ட் - 5,189* மெட்டா - 5123* ஆப்பிள் - 4202* கூகுள் - 4181* சிடிஎஸ் - 2493* ஜேபிமார்கன் - 2440* வால்மார்ட் - 2390* டெலாய்ட் - 2353* அமேசான் வெப் - 2347* ஆரக்கிள் - 2092 இந்த விசாவால் அதிகம் இந்தியர்கள் பயனடைந்து வருகின்றனர். ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விசாக்களில் கடந்தாண்டு 70 சதவீதம் விசாக்களை இந்திய வல்லுனர்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஹெச் 1 பி விசா, க்ரீன்கார்டு முறையை மாற்றுவோம் என அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் ஹோவார்டு லுட்னிக்கடந்த ஆகஸ்ட் மாதம் கூறியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 59 )

மாபாதகன்
செப் 22, 2025 11:38

அதெப்படி திமிங்கலம் கூட்டுறவன் பெருக்குறவன் துவைக்குறவன் சம்பளமும் அமெரிக்க கம்பெனிக்கு கூஜா தூக்கிகிட்டு அமெரிக்காவையே எதிர்த்து பேசிகிட்டு திரியிறவன் சம்பளமும் ஒண்ணா?? இல்லியே?? பொதுவான வேலை செய்றவனுக்கு எப்போதுமே அந்த வேலையிலும் கூலியிலயும் எந்த மாற்றமும் இல்லை.


naranam
செப் 21, 2025 05:08

சி என் என் செய்திப் படி, இந்த சட்டம் ஒரு வருடத்திற்கு மட்டுமே. 2026 இல் இது நீட்டிக்கப் பட வேண்டும். இல்லையேல் இந்தச் சட்டம் காலாவதியாகி விடும். மேலும் இது புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த ஒரு லட்சம் டாலர் கட்டணம் ஒரு முறை மட்டுமே. இப்படி பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.


Raja
செப் 21, 2025 01:10

இங்கு பல பேர் it காரன் வேலை போய்விட்டது என்று சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார்கள், IT யில் வேலை செய்பவர்களை நம்பி பல பேர் வீட்டு வேலை காரர்கள், உணவகங்கள் , டிரைவர்கள், ரியல் எஸ்டேட் தொழில், கார்கள் விற்பனை, பல தனியார் பள்ளிகள் என பல தொழிலாளர்கள், நிறுவனங்கள் உள்ளன. இட் ஊழியர்கள் நடு தெருவிற்கு வந்தால் இவர்கள் அனைவரும் வருவர்


தாமரை மலர்கிறது
செப் 21, 2025 00:06

புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு தான் இந்த கட்டணம். ஏற்கனவே இருப்பவர்கள் இதனால் மேலும் இருக்கவைக்கப்படுவார்கள். அவர்களின் சம்பளம் ஏற்றப்படும். ப்ரோமோஷன் கொடுக்கப்படும். ஏனனில் அவர்களின் ரெனீவலுக்கு இந்த கட்டணம் கிடையாது. ஆனால் அவர்கள் வேறொரு நிறுவனத்திற்கு செல்ல முடியாது. அப்படி சென்றால், ஒரு லட்சம் டாலர் கட்டணம் விதிக்கப்படும். புதிதாக அமெரிக்காவிற்கு இந்தியாவிலிருந்து இனி போக மாட்டார்கள். மேலும் பல தொழில்கள் இந்தியாவிற்கு இதனால் வரும். இந்தியாவிற்கு புதிய வரி வருமானம் கிட்டும். இந்திய தொழிலாளிகள் இந்தியாவிற்கு உழைப்பார்கள். இந்தியா வேகமாக வளரும். அமெரிக்கா வேகமாக தேயும்.


Indian
செப் 20, 2025 23:42

நம் நாட்டு மாணவர்கள் வெளி நாடுகளில் சென்று படித்து நல்ல நிறுவனங்களில் பணியில் சேர்ந்து கைநிறைய சம்பளம் பெறலாம் என்ற எண்ணத்தில் உள்ளார்கள். ஆனால் அந்த நாட்டினர், தங்கள் நாட்டு மாணவர்கள் வேலை வாய்ப்பு பெறுவதில் கடினமாக உள்ளதாக கருதி வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் நாட்டிற்கு வருவதை விரும்பவில்லை. குறிப்பாக, அமெரிக்காவில் மேற்படிப்பு பயில வரும் மாணவர்களுக்கான விசா வழங்குவதில் அமெரிக்கா பல கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. தற்போது H1B விசாவுக்கு சம்மந்தப்பட்ட நிறுவனம் ஒரு லட்சம் டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அமெரிக்கா உத்திரவு பிறப்பித்துள்ளது. இவ்வளவு, கடுமையான உத்திரவு பிறப்பித்தும், இனி எந்த மாணவரும் வெளிநாடு செல்லமாட்டார்கள் என கருத முடியாது. ஏன்னென்றால், தங்கத்தித்தின் விலை எவ்வளவு உயர்ந்தாலும், வாங்குபவர்கள் வாங்கிக்கொண்டுதான் இருப்பார்கள். அதேபோன்று விசா கட்டணம் எவ்வளவு இருந்தாலும் அதை செலுத்தும் கூட்டம் இருந்து கொண்டிருக்கும்.


vijai hindu
செப் 20, 2025 22:25

அமெரிக்கால வேலை வேலைக்கு போனா ஆட்டம் பாட்டம் இங்க இருக்கிற லேண்ட் வேல்யூ எல்லாம் ஏத்திவிட்டது அவங்க தான் அங்க சம்பாதிக்கிற பணத்தை எங்க லேண்ட் லைன் இன்வெஸ்ட் பண்ணி வைத்துவிடுகிறார்கள் இதுக்கு ட்ரம்ப் வச்ச ஆப்பு


Anbarasu Masilamani
செப் 20, 2025 22:22

Hello Friends and brothers and sisters. Respect our Education first. I am not insulting any one. Around world without Indian Doctors, Nurses no hospital. I am just my Education in India. I am a Health Care person worked in Saudi Arabia, Maldives, Nigeria. Final one word nearly 10 years ago I read message in news paper most of the software engineer from Andhra Pradesh fake certificate and false experience catch and send back to India from America.


தாமரை மலர்கிறது
செப் 20, 2025 22:20

இந்தியாவில் ஐடி கம்பெனிகள் வேலைக்கு ஆள் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். நன்றாக வேலை தெரிந்தவர்கள் அனைவரும் அமெரிக்கா சென்றுவிட்டால், இந்தியா எப்படி வளர முடியும்? இது இந்தியாவிற்கு மிக நல்ல செய்தியே. இனி இந்திய ஐடி கம்பெனிகள் கம்மியான சம்பளத்தில் நல்ல ஆட்களை வேலைக்கு எடுக்க முடியும். இந்தியா வேகமாக வளரும். அதிக சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதால், அங்கு உற்பத்தி குறைந்து அமெரிக்கா வேகமாக தேயும்.


அப்பாவி
செப் 20, 2025 20:56

இங்கேருந்து ஹெச்1 விசாவில் ஆளுங்களை அனுப்பி கொழுத்த இன்ஃபோசிஸ், டி.சி.எஸ் போன்றவர்கள் ஒரு லட்சம் என்ன, ஒரு கோடி டாலர் கட்டினாலும் கட்டுப்படியாகும்


அப்பாவி
செப் 20, 2025 20:52

அங்கே மார்க் ஸக்கர்பர்கின் சொத்து 27000 கோடி அமெரிக்க டாலர்கள். அதுக்கு ஒரு கோடி ஹெச்1 விசாக்களை வாங்கினாலும் பெரிய பாதிப்பிருக்காது.


புதிய வீடியோ