உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்த 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை விதிப்பு; இதோ முழு பட்டியல்!

இந்த 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை விதிப்பு; இதோ முழு பட்டியல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தான், பர்மா, காங்கோ குடியரசு உள்ளிட்ட 12 நாட்டினர் அமெரிக்காவிற்கு பயணம் செய்ய, அதிபர் டிரம்ப் தடை விதித்துள்ளார். அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து, அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=x00b395z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனால் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. தற்போது பர்மா, காங்கோ குடியரசு உள்ளிட்ட 12 நாட்டினர் அமெரிக்காவிற்கு பயணம் செய்ய, அதிபர் டிரம்ப் தடை விதித்துள்ளார். அமெரிக்காவிற்கு செல்ல தடை விதிக்கப்பட்ட நாடுகள் பின்வருமாறு:1. ஆப்கானிஸ்தான்,2. மியான்மர்3.சாட்4. காங்கோ5.எக்குவடோரியல் கினியா6.எரித்திரியா7.ஹைட்டி8.ஈரான்9.லிபியா10.சோமாலியா11.சூடான்12. ஏமன்அமெரிக்காவிற்கு செல்ல அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நாடுகள்:1.புருண்டி,2.கியூபா,3.லாவோஸ்,4.சியரா லியோன்,5. டோகோ,6. துர்க்மெனிஸ்தான்,7. வெனிசுலாஇது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது: பாதுகாப்பாக சில நாட்டினரை நாங்கள் குடியேற அனுமதிக்க முடியாது. இதனால் தான் இன்று ஏமன், சோமாலியா, ஹைட்டி, லிபியா மற்றும் பல நாடுகளுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் புதிய நிர்வாக உத்தரவில் நான் கையெழுத்திடுகிறேன்.சமீபத்தில் கொலராடோவில் நடந்த பயங்கரவாத தாக்குதலால், வெளிநாட்டினர் சிலர் அமெரிக்காவிற்குள் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. வெளிநாட்டினர் நமது நாட்டிற்குள் நுழைந்து அமெரிக்கர்களுக்கு தீங்கு விளைவிப்பதை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

subramanian
ஜூன் 05, 2025 18:15

டிரம்ப், உமது தலையில் குல்லா போட்டு அதன் மேல் உட்கார்ந்து இருக்கும் பாகிஸ்தானை மறந்து விட வேண்டாம்.


Sevegamy Suntheresan
ஜூன் 05, 2025 15:49

அமெரிக்காவிற்கு இப்பொழுது ஒரு கஷ்ட காலம்


Naga Subramanian
ஜூன் 05, 2025 14:12

அமெரிக்காவே இப்பொழுது மோசமாகிவிட்டது.


Rathna
ஜூன் 05, 2025 13:06

அட அமெரிக்க பசங்களா என்ன லிஸ்ட் போட்டு என்ன பிரயோசனம்? பாகிஸ்தானையும், பங்களாதேஷியையும் விட்டுட்டு எப்படி தீவிரவாதத்தை ஒழிக்க போறீங்க?


Barakat Ali
ஜூன் 05, 2025 08:42

அமெரிக்காவைப்போல ஆபத்தான நாடு வேறு உண்டா ????


SUBBU,MADURAI
ஜூன் 05, 2025 09:11

இந்த பட்டியலில் முதலில் இருக்க வேண்டிய நாடு பாகிஸ்தான்.


sundarsvpr
ஜூன் 05, 2025 08:00

அமெரிக்க அதிபர் முடிவு ஆனால் உள்நாட்டில் தேச விரோதிகள் உள்ளனர். அவர்களை வெளியேற்றாதவரை அமைதியின்மைதான். நம் பாரத நாட்டில் குடியிருக்கும் வெளிநாட்டினர்களால் பயம் இல்லை. உள்நாட்டில்தான் பல அரசியில் கட்சிகளில் தேசிய உணர்வுஇல்லாத தலைவர்கள் உள்ளனர். இவர்களை இனம் காட்டுவது பொதுமக்கள் பொறுப்பு. இதில் மக்கள் தவறினால் உங்கள் வாரிசுகள்உங்கள் நினைவாக திவசம் போன்ற ஆன்மிக கைங்கரியங்கள் செய்யமாட்டார்கள்.


sankaranarayanan
ஜூன் 05, 2025 07:56

இந்த லிஸ்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பு ஏன் பாகிஸ்தானையும் சேர்க்கவில்லை மறதியில் விட்டுவிட்டார்களா உடனே சேர்க்கவும் அமெரிக்காவிற்கு முதல் எதிரி இரட்டைக்கோபுரம் தகர்த்தப்பட்டதிலிருந்தே பின் லேடனிலிருந்து பாகிஸ்தான்தான் உலகிலேயே ல் எதிரி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை