உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / குடியுரிமை சான்றிதழ் கட்டாயம்; தேர்தலில் பெரிய மாற்றத்தை அறிவித்தார் டிரம்ப்!

குடியுரிமை சான்றிதழ் கட்டாயம்; தேர்தலில் பெரிய மாற்றத்தை அறிவித்தார் டிரம்ப்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: வாக்காளர் பதிவுக்கு குடியுரிமைக்கான ஆவணச் சான்று கட்டாயம் இருக்க வேண்டும் உள்ளிட்ட தேர்தல் நடைமுறையில் மாற்றங்களை கட்டாயமாக்கும் நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார்.அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். தினமும் அவர் வெளியிடும் புது புது அறிவிப்புகள் பரபரப்பை கிளப்பி வருகிறது. சட்டவிரோதமாக குடியேறி உள்ளவர்களை கண்டறிந்து நாடு கடத்தும் பணியில் மும்முரமாக செயல்பட்டார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kg4nl8jv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், வாக்காளர் பதிவுக்கு குடியுரிமைக்கான ஆவணச் சான்று கட்டாயம் இருக்க வேண்டும். தேர்தல் நாளுக்குள் வாக்குச்சீட்டுகளை அனைவரும் பெறுவதை உறுதி செய்தல் உள்ளிட்ட அமெரிக்க தேர்தல் நடைமுறையில் மாற்றங்களை கட்டாயமாக்கும் நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார். அதேபோல், 'கூட்டாட்சி தேர்தல்களில் வாக்களிக்கும் தகுதிக்கு பாஸ்போர்ட் போன்ற குடியுரிமை சான்றிதழ் கட்டாயம் இருக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது. உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, சமூகப் பாதுகாப்பு நிர்வாகம் மற்றும் வெளியுறவுத்துறை உள்ளிட்ட கூட்டாட்சி நிறுவனங்களை பணியில் உள்ளவர்களில் குடியுரிமை சான்றிதழ் அல்லாதவர்களை அடையாளம் காண உதவும் தரவுகளை தேர்தல் அதிகாரிகளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. கையெழுத்திட்ட பிறகு வரும் வாரங்களில் தேர்தல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என டிரம்ப் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Jay
மார் 26, 2025 13:26

வெளிநாட்டு குடி உரிமை பெற்றவர்கள் இங்கு தேர்தலில் போட்டியிட கூடாது என்று சட்டம் கொண்டு வரலாம்.


சண்முகம்
மார் 26, 2025 12:17

அமெரிக்க சட்டப்படி தேர்தல் விதி முறைகளை மாற்ற குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் கிடையாது. அமெரிக்க காங்கிரசுக்கு (சட்ட சபை) மட்டுமே அதிகாரம் உண்டு. அதை அறியாமல் சிலர் கருத்து போடுகிறார்கள்.


Srinivasan Krishnamoorthy
மார் 26, 2025 13:36

he is making executive orders related to identity check


Keshavan.J
மார் 26, 2025 11:43

All the imported voters cannot vote. Joe Biden allowed 10 million illegals inside USA but still he couldnt win because imported people illegals were busy looting, raping, selling drugs instead of voting for Biden. But in India imported voters spread across many states and voted for oppositions.


naranam
மார் 26, 2025 10:35

இங்கும் கட்டாயமாக்கி விட்டால் ராஹல் காந்தி தேர்தலில் நிற்கவும் முடியாது, வாக்கும் செலுத்த முடியாது.


தஞ்சை மன்னர்
மார் 26, 2025 10:35

இவரு ஒரு காமெடி பீசு ஏற்கனவே நடைமுறையில் உள்ளதேயே மீண்டும் மீண்டும் பேசுவார்


Natarajan Ramanathan
மார் 26, 2025 11:26

இங்கும் இந்த நடைமுறை வந்தால் பாதி பேரு ஒட்டு போடவே முடியாது.


Ganapathy
மார் 26, 2025 11:55

சரி தற்குறியே.


Columbus
மார் 26, 2025 10:00

Trump has quoted Indian and Brazilian election ID systems in his Executive Orders.


பேசும் தமிழன்
மார் 26, 2025 08:22

சரியான நடவடிக்கை.. இங்கேயும் இது போன்ற நடவடிக்கை தேவை.. கள்ளத்தனமாக நாட்டிற்கு உள்ளே வாறவன்.. போறவன் எல்லாம் ஓட்டு போட அனுமதிக்க கூடாது.. நாட்டின் உண்மையான பிரஜைகள் மட்டுமெ ஓட்டு போட அனுமதிக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை