உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆசியாவில் பனிப்போர் காலத்து உறவுக்கு அச்சாரம் போட்டுள்ள டிரம்ப்

ஆசியாவில் பனிப்போர் காலத்து உறவுக்கு அச்சாரம் போட்டுள்ள டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக அண்மையில் தடாலடியாக அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நம் இரு நாடுகளின் ராணுவ உறவுகளையும் விட்டு வைக்கவில்லை. குறிப்பாக, அமெரிக்கா - -பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு உறவுகள் மேம் படுவதாக அறிவித்ததன் மூலம், இந்த பிராந்தியத்தில் மீண்டும், பனிப்போர் காலத்திய முக்கோண உறவை புதுப்பிப்பதற்கு அச்சாரம் போட்டுள்ளார். பனிப்போர் காலம் எனப்படும் 1947 முதல் 1991 வரையிலான காலகட்டத்தில், இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானிற்கு அமெரிக்கா கொம்பு சீவியது. இதன் காரணமாகவே, இந்தியாவுடன் பேச்சுக்களை துவக்கும் போதோ அல்லது உறவை புதுப்பிக்கும் போதோ, பாகிஸ்தானின் கருத்திற்கு மட்டுமே மதிப்பு கொடுத்தது. இந்தியா- அமெரிக்கா உறவுகளில் அழையா விருந்தாளியாக பாகிஸ்தான் எப்போதுமே இருந்து வந்தது. ஆனால், பனிப்போருக்கு பின் இந்த நிலை மாற துவங்கியது. குறிப்பாக, அமெரிக்காவில் இரட்டை கோபுர பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாய் இருந்த ஒசாமா பின் லேடனை பாகிஸ்தான் ஒளித்து வைத்ததில் துவங்கி, அமெரிக்காவின் அணுகுமுறை மாற துவங்கியது. பாகிஸ்தானின் மானம் தற்போது திடுதிப்பென்று அதிபர் டிரம்ப், பாகிஸ்தானுடனான உறவை புதுப்பித்திருப்பதாக அறிவித்தது, அமெரிக்கா நம் நா ட்டின் முதுகில் குத்தியதற்கு சமம். இந்த விவகாரத்தில் நம் இரு நாடு உறவுகள் சீரடைவதற்கு பல காலம் பிடிக்கும். 'ஆப்பரேஷன் சிந்துாரை' தானே நிறுத்தியதாக, டிரம்ப் தொடர்ந்து மார்தட்டி வருவதற்கு பின்னணியிலும், பாகிஸ்தானே இருப்பதாக கருத வேண்டி உள்ளது. பாகிஸ்தான் கோரியதால் தான் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டதாக நம் அரசு அறிவித்ததற்கு மாறாக டிரம்ப் கூறியுள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் அவர் பாகிஸ்தானின் மானத்தை காப்பாற்ற முயற்சித்துள்ளார். சொல்லாமல் விட்டது இரண்டில் சொல்லாமல் விட்டதே அதிக முக்கியத்துவம் பெறுகிறது. ஆப்பரேஷன் சிந்துாரை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு சீனா எவ்வாறெல்லாம் போர் விமானங்களையும், ஏவுகணைகளையும் அளித்து வந்துள்ளது என்பதை, நம் அரசு பட்டியல் போடாத குறையாக வெளியிட்டது. இப்போது பாகிஸ்தானுடன் அமெரிக்கா கொஞ்சி குலாவுவதன் காரணமாக, அந்த நாடு சீனாவை பகைத்துக் கொள்ளும் என்று யாரும் கருத முடியாது. பாகிஸ்தான்- - சீனா உறவுகள் வலுப்படும் அதே வேளை, அந்த நாட்டுடன் அமெரிக்காவும் கைகோர்க்கப் போகிறது. நம் நாட்டை பொறுத்தவரையில், பனிப்போர் காலத்திய பிராந்திய அரசியலும் காய் நகர்த்தல்களும் மீண்டும் துவங்க வாய்ப்புள்ளது. செயலற்ற பொருளாதாரம் இந்த பின்னணியில், டிரம்ப் தெளிவாக சொல்லிச் சென்ற விஷயம் நமக்கு முக்கியமாகிறது. அமெரிக்காவின் உறவை புதுப்பித்ததன் மூலம் பாகிஸ்தானின் பொருளாதாரம் முன்னேறப் போகிறது என்று கொக்கரிக்கும் அதே நேரத்தில், அதிபர் டிரம்ப் நம் நாட்டை அவமதிப்பதற்காகவே, தன் அறிக்கையில் மற்றுமொரு கருத்தை தெரிவித்துள்ளார். 'நமது நாட்டின் பொருளாதாரம் செயலற்றது' என்பதே அது. அதோடும் விட்டுவிடவில்லை. இந்தியாவை போன்றே ரஷ்யாவின் பொருளாதாரமும் செயலிழந்து விட்டது. இருவரும் சேர்ந்து மூழ்க போகின்றனர் என்று மிகவும் கேவலமாக பேசியிருக்கிறார். இது நம் இறையாண்மைக்கும், நன்மதிப்பிற்கும், ஏன் ஒவ்வொரு இந்தியரின் நாட்டுப்பற்றுக்கும் விடப்பட்ட சவால். இதன் மூலம், அமெரிக்க அதிபர் பனிப்போர் காலத்திய சர்வதேச உறவுகள் குறித்த சர்ச்சையை மீண்டும் கிளப்பி உள்ளார். கள்ள மவுனம் நம் நாட்டில் பொது மக்களின் கருத்து, 1971-ம் ஆண்டு வங்கதேச போர் துவங்கி, ரஷ்யாவிற்கு ஆதரவாகவும், அமெரிக்காவிற்கு எதிராகவுமே இருந்து வந்துள்ளது. அதற்கு காரணமும் இருந்தது. இடைப்பட்ட காலத்தில், அதில் சிறிது மாற்றம் தோன்றியது. தற்போது, அமெரிக்க அதிபர் கூற்றின் தாக்கம் அடிமட்டம் வரை சென்றடையும் போது, பழைய எண்ணமே திரும்பும் வாய்ப்பு உள்ளது. ஆனால், தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மை குறித்த இந்த பிரச்னைகளுக்கு பதில் சொல்லாமல், டிரம்பின் 25 சதவீத வரி விதிப்பு குறித்து மட்டுமே பிரதமர் நரேந்திர மோடியும், அவரது அமைச்சரவை சகாக்களும், அதிகாரிகளும் கருத்து தெரிவித்து வருவது ஏன்? அவர்களின் கள்ள மவுனத்திற்கு காரணம் தான் என்ன? அதன் அர்த்தம் தான் என்ன? -என்.சத்தியமூர்த்திசர்வதேச அரசியல் ஆய்வாளர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

மூர்க்கன்
ஆக 05, 2025 13:38

வரி விதிப்பு குறித்து மட்டுமே பிரதமர் நரேந்திர மோடியும், அவரது அமைச்சரவை சகாக்களும், அதிகாரிகளும் கருத்து தெரிவித்து வருவது ஏன்? அவர்களின் கள்ள மவுனத்திற்கு காரணம் தான் என்ன? அதன் அர்த்தம் தான் என்ன? கஷ்டம்தான்??


vivek
ஆக 05, 2025 16:14

அறிவிலிகள் எல்லாம் பதில் சொல்லமுடியாது மூர்க்கன்....உன்னை சொல்லைன்னுனு தப்பா நினைக்காதே


N.Purushothaman
ஆக 05, 2025 11:55

ஆங்கிலத்தில் சைலன்ஸ் டாக்டிக்ஸ் என்று சொல்லுவார்கள் ...உலக அரங்கில் ட்ரம்ப்பின் தற்போதையகொழுப்பு பேச்சால், செயலால் அவரின் மதிப்பு மற்றும் செல்வாக்கு பெருமளவு சரிந்து உள்ளது ...இது தொடரும் ....அந்த ஆளோட லூசுத்தனமான பேச்சுக்கு பதில் கொடுத்துக்கிட்டு இருந்தால் அது சிறந்ததாக இருக்காது ...


V.Mohan
ஆக 05, 2025 11:37

இடது சாரி சித்தாந்தங்களும் , கமயூனிசமும் செத்து ஒழிந்து விட்டது. கமயூனிச சித்தாந்தங்கள் தோன்றிய நாடுகளிலேயே அதற்கு சமாதி கட்டியாகிவிட்டது. இந்தியாவில் நாட்டுக்கெதிரான எண்ணம் கொண்ட கான்கிராஸ் உடன் கேவலக்கூட்டணி வைத்துள்ள கம்யூனிச கட்சிகளின் உறுப்பினர்கள் தங்களுக்குத்தானே அரசியல் விமர்சகர் என பட்டம் சூட்டிக் கொண்டு அலைகின்றனர். அவர்களுக்கு 11 வருடங்களாக பதவியில் உள்ள பிரதமர் மோடியைப் பார்த்து வயிற்றெரிச்சல். அவரைப் பதவியிலிருந்து விலக்க 2024 ல் கிடைத்த வாய்ப்பு தற்குறித் தலைவரால் பறிபோனது. அந்த ஆதங்கத்தில் இம்மாதிரி விமரிசனம் செய்கின்றனர். நாட்டுப் பற்று உள்ளவர்கள் நாட்டின் இறையாண்மையை பாதிக்கும்படி பேசுபவர்களுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். அதை விட்டு, வெளிநாடுகளிடம் உள்ள வர்த்தகப் பேச்சு வார்த்தைகள் ஒரு திடமான நிலைக்கு வருவதற்கு முன்னர்- எல்லா ஊடகங்களையும் மேலாதிக்கம் செய்யும் வெளிநாட்டு மத முதலாளிகளுடைய இடது சாரி பத்திரிகைகளிடம் எந்த அரசாங்கமாவது அதைப்பற்றி பேசுவார்களா?, இது என்ன சினிமாவா அல்லது வெளிநாட்டு தற்குறித் தலைமை நடத்தும் ஆட்சியா??. அமெரிக்க அதிபர் வரி உயர்வு அறிவிச்ச உடனே அதன் விளைவுகள் என்ன என்பதுபற்றி உங்களிடம் தெரிவிக்கணுமா?. நல்லாயிருக்கு நாயம். ஜனம் அவங்களுக்குத்தான் மெஜாரிட்டி தந்துள்ளது. உங்களுக்கு இல்லை. அரசியல் விமர்சகர் என்ற பேரில புகார் சொல்றதை விட்டு ஏதாவது உருப்படியான யோசனை சொல்ல முயற்சி செய்யுங்க. பள்ளிப்படிப்பையே முடிக்காத ஒருவரை தலைவராக ஏற்றுக்கொண்ட கூட்டணிக்கு பல்லக்கு தூக்கற வேலையை விடுங்க. மதிப்பு உயரும்


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஆக 05, 2025 11:59

சபாஷ் திரு.மதன்... என் எண்ண ஓட்டங்களை அப்படியே பிரதிபலித்தீர்கள்....சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் என்ற பெயரில் இருக்கும் ஆன்டி இன்டியன்ஸ்..... இவர்களால் இந்தியாவிற்கு எள்ளளவிற்கும் பிரியோஜனம் இல்லை....!!!


swami premadananda
ஆக 05, 2025 10:57

USA is the "grea enemy of humanity" 


Raj Kumar
ஆக 05, 2025 10:50

நமது பாரத பிரதமரை பொறுத்த வரை தேசமே பெரிது. எதற்கும் இந்தியாவின் இறையாண்மையை விட்டு கொடுக்க மாட்டார் என்றே நம்புகிறேன்


Thirumal Kumaresan
ஆக 05, 2025 09:40

டிரம்ப் ஒரு சரியான ஆளாக படவில்லை, அதனால் நாம் வருவதை எதிர்கொள்ள தயாராக வேண்டியதுதான். அது இந்தியாவிற்கு சிறிது சுணக்கம் ஏற்படவே செய்யும், நாம் ஒற்றுமையாய் இருந்தால் நம்மை யாரும் ஒன்றும் செய்ய முடியாது, அதை பிரதமர் எடுத்தேன் கைவிட்டேன் என உடனடியாக சொல்லிவிட முடியாது. சமயம் வரும்பொழுது சரியான முடிவெடுப்பார்.நாம் அவருடன் நிற்போம்,வெற்றி நிச்சயம்


GMM
ஆக 05, 2025 08:59

தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மை வலுவாக உள்ளது. இந்திய பொருளாதாரம் உண்மை நிலை. அமெரிக்கா, சீனா பொருளாதாரம் வியாபார, பங்கு சந்தை நிலை. 1 லட்சம் கம்ப்யூட்டர் மறு நாள் மறு விற்பனை சில 1000 ரூபாய்க்கு விற்பது கடினம். அமெரிக்கா 25 சதவீத வரி விதிப்பு ஒரு thumbs rule. டாலர் மதிப்பு சரியும். இந்திய ரசியா உறவு அதிகரிக்கும். சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆப்கான் எப்போதும் இந்திய எதிரிகள். பொது சிவில் சட்டம், குடியுரிமை, ஒரே நாடு ஒரே தேர்தல், நீதிபதி நியமனம் மற்றும் தணிக்கை சட்டம் தற்போது போதும். பனிப்போர் புரிய 1971 கிடையாது. இந்தியா வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது.


vbs manian
ஆக 05, 2025 08:48

இந்த உலகையே தான் ஆள்வதாக நினைத்துக்கொண்டுவிட்டார். அமெரிக்கா தனிமைப்பட்டு நிற்கிறது. மற்ற நாடுகளின் பொருளாதார தார்மிக ஆதரவு இல்லாமல் அமெரிக்கா ஒன்றுமில்லை. அமெரிக்கா விரைவில் பதில் சொல்லும்.


maan
ஆக 05, 2025 08:27

கட்டுரையாளர் சர்வதேச அரசியல் ஆய்வாளராம். கள்ள மௌனம் என்ற வார்த்தை பிரயோகம் இவருடைய ஞானத்தை கேள்விக்குள்ளாக்குகிறது.


Varadhan R
ஆக 05, 2025 07:16

நம் இந்தியர்கள் அமெரிக்க பணத்திற்கும் சொகுசு வாழ்க்கையையும் அனுபவித்து வருகின்றனர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை