உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போரை நிறுத்துங்கள் புடின்: ரஷ்ய அதிபருக்கு டிரம்ப் வேண்டுகோள்

போரை நிறுத்துங்கள் புடின்: ரஷ்ய அதிபருக்கு டிரம்ப் வேண்டுகோள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: உக்ரைன் போரை நிறுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. இனி ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக் கூடாது. போரை நிறுத்துங்கள் என ரஷ்ய அதிபருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் நேரடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:நான் ரஷ்யாவை காயப்படுத்த விரும்பவில்லை. நான் ரஷ்ய மக்களை நேசிக்கிறேன். ரஷ்ய அதிபர் புடின் உடன் எப்போதும் நல்ல உறவையே கொண்டிருந்தேன். தீவிர இடதுசாரி நாடாக இருந்த போதும் ரஷ்யாவுடன் நல்லுறவையே வைத்திருந்தேன். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=02v3kj0q&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இரண்டாம் உலகப்போரை வெற்றி கொள்வதற்கு ரஷ்யா பேருதவியாக இருந்தது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அந்த போரில் ரஷ்யாவைச் சேர்ந்த 6 கோடி பேர் உயிரிழந்தனர் என்பதையும் மறந்துவிடக்கூடாது. இப்போது ரஷ்ய பொருளாதாரம் தோல்வி அடைந்து கொண்டிருக்கிறது. நான் ரஷ்ய அதிபருக்கு சொல்வது எல்லாம் இந்த கேலிக்கூத்தான போரை நிறுத்துங்கள் என்பதுதான். இந்த போர் நாளுக்கு நாள் மோசமாகி கொண்டேதான் போகும். இப்போது நாம் ஒரு உடன்பாடு ஏற்படுத்தவில்லை என்றால், எனக்கு வேறு வழியில்லை. விரைவில் ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவுக்கு விற்பனையாகும் ஒவ்வொன்றுக்கும் கூடுதல் வரி விதிக்க வேண்டியிருக்கும். தடைகளையும் அதிகப்படுத்த வேண்டி இருக்கும். வேறு சில நாடுகளையும் இதில் ஈடுபடுத்த வேண்டி இருக்கும். நான் அதிபராக இருந்திருந்தால் இந்தப் போரே நடந்திருக்காது. இந்தப் போரை இப்போதே முடித்துக் கொள்ளலாம். எளிதான வழி, கடினமான வழி என இரண்டு வழிகள் நமது முன் உள்ளன. அவற்றில் நாம் எப்போதும் எளிதான வழியே தேர்வு செய்ய வேண்டும். இப்போது நாம் உடன்பாடு ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய நேரம் வந்திருக்கிறது. இனி ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக் கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ganesh
ஜன 23, 2025 09:58

சார், நீங்க உக்ரயின் க்கு ஆயுதங்கள் குடுக்காமல் இருந்தால் நாளையே போர் முடிவுக்கு வந்து விடும்...


Balasubramanian UnitedStates
ஜன 23, 2025 04:41

ரெண்டு தடி மாட்டு பசங்களுக்கும் வேற வேலையே இல்லை


தாமரை மலர்கிறது
ஜன 23, 2025 01:24

உக்ரைனில் உள்ள ரசிய மக்கள் வாழும்பகுதிகளை ரசியா கைப்பற்றுவரை, இந்த போர் நிற்காது. பிறகு தானாகவே இந்த போர் நிற்கும். அதன் பிறகு உக்ரைன் என்ற நாடு சிரியா அல்லது காசா போன்று வீணாபோன நாடாக இருக்கும். மாஸ்டர் சொல்வதையெல்லாம் அடிமை கேட்டால், கடைசியில் இது தான் கதி .


முக்கிய வீடியோ