உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / விரைவில் வர்த்தக ஒப்பந்தம்; டிரம்ப்- பிரதமர் மோடி இடையே வலுவான உறவு; அமெரிக்கா உறுதி

விரைவில் வர்த்தக ஒப்பந்தம்; டிரம்ப்- பிரதமர் மோடி இடையே வலுவான உறவு; அமெரிக்கா உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ''அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்- பிரதமர் மோடி இடையே வலுவான உறவு உள்ளது. விரைவில் அமெரிக்கா- இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்படும்'' என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.இது குறித்து, வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறியதாவது: ஆசிய பசிபிக் பகுதியில் இந்தியா மிகவும் நட்பு நாடாக திகழ்ந்து வருகிறது. வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்- பிரதமர் மோடி இடையே வலுவான உறவு உள்ளது. பிரதமர் மோடி உடன் அதிபர் டிரம்ப் கொண்டிருக்கும் உறவு தொடர்ந்து நீடிக்கும். விரைவில் அமெரிக்கா- இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்படும். அதிபர் டிரம்ப் மற்றும் வர்த்தக குழு ஒப்பந்தத்தை இறுதி செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார். சமீப காலமாக, இந்தியாவுடனான பணிகளில் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து, அதிபர் டிரம்ப் பலமுறை சூசகமாக குறிப்பிட்டு பேசி வருகிறார். ''இந்தியாவுடன் மிகப்பெரிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளோம்'' என அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். இந்தியா- அமெரிக்கா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இது குறித்து ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு உள்ளது என வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்பாவி
ஜூலை 01, 2025 09:55

வாரி விட ரெடியா இருக்காங்க.


SUBBU,MADURAI
ஜூலை 01, 2025 12:03

அப்புசாமி வழக்கம் போல அந்த பாஞ்சி லட்சத்தை கேட்க வேண்டியதுதானே?


guna
ஜூலை 01, 2025 16:30

வீடு வாசல் இல்லாத இந்த அப்பாவிகள் எதுக்கு பஞ்சு லட்சம்...


Nathan
ஜூலை 01, 2025 08:16

இந்த வர்த்தக ஒப்பந்தம் எந்த வகையிலும் இந்திய விவசாயிகள் நலன்களை பாதுகாக்கும் ஒன்றாக மட்டுமே இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அது பாஜகவின் வீழ்த்தும் ஒப்பந்தமாக மாறிவிடும். இந்திய விவசாயிகள் பெரும் புரட்சியை ஏற்படுத்துவர். பிறகு இந்த ஒப்பந்தம் காற்றில் கிழித்து வீசப்படும். எனவே விவசாயிகள் நலன் எவ்வகையிலும் பாதிப்பு அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்


ஆரூர் ரங்
ஜூலை 01, 2025 12:07

ஏற்றுமதிக்காக தானிய உற்பத்தி செய்யும் விவசாயம் அழிவில் விடும். நிலவளம் பாதிக்கப்படும்.


மூர்க்கன்
ஜூலை 01, 2025 13:02

வரவு நல்ல உறவு...


முக்கிய வீடியோ