உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நாளை மாலைக்குள் முடிவெடுங்க இல்லையேல் நரகத்தை பார்ப்பீங்க ஹமாசுக்கு டிரம்ப் எச்சரிக்கை

நாளை மாலைக்குள் முடிவெடுங்க இல்லையேல் நரகத்தை பார்ப்பீங்க ஹமாசுக்கு டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: ''நாளை மாலை 6:00 மணி வரை அவகாசம் தருகிறேன். அமைதி திட்டத்தை ஏற்காவிட்டால், நரகத்தை பார்க்க நேரிடும்,'' என, ஹமாஸ் அமைப்புக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார். மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே போர் நடக்கிறது. கடந்த 2023, அக்., 7ல் துவங்கிய இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர, 20 அம்ச அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார். இதை ஏற்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். ஆனால், ஹமாஸ் தரப்பில் யோசிக்க நேரம் கேட்கப்பட்டது. இந்நிலையில், டிரம்ப் நேற்று கூறியதாவது: நாளை மாலை 6:00 மணி வரை ஹமாஸ் அமைப்புக்கு அவகாசம் தரப்படும். அதற்குள், அமைதி திட்டத்துக்கு உடன்பட வேண்டும். இது அவர்களுக்கு வழங்கப்படும் கடைசி வாய்ப்பு. இல்லாவிட்டால், நரகம் எப்படி இருக்கும் என்பதை அவர்களுக்கு நாங்கள் காட்ட நேரிடும். எது எப்படி இருந்தாலும், மேற்காசியாவில் அமைதி உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி