உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பொருளாதாரத் தடையை எதிர்கொள்ள நேரிடும்; புடினுக்கு 12 நாள் காலக்கெடு விதித்தார் டிரம்ப்

பொருளாதாரத் தடையை எதிர்கொள்ள நேரிடும்; புடினுக்கு 12 நாள் காலக்கெடு விதித்தார் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 'உக்ரைன் போர் அமைதி ஒப்பந்தத்தில், கையெழுத்திட புடினுக்கு இன்னும் 10 முதல் 12 நாட்கள் மட்டுமே இருக்கின்றன. பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும்' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். ஆனால் உக்ரைனில் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. சமீபத்தில், உக்ரைன் போரை 50 நாட்களில் முடிவுக்கு கொண்டு வராவிட்டால் ரஷ்யா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்து இருந்தார்.இந்நிலையில் இன்று (ஜூலை 28) ரஷ்யா போர் நிறுத்தத்தை எட்டுவதற்கு விதித்த 50 நாள் காலக்கெடு குறித்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி இருப்பதாவது: உக்ரைன் போர் அமைதி ஒப்பந்தத்தில், கையெழுத்திட புடினுக்கு இன்னும் 10 முதல் 12 நாட்கள் மட்டுமே இருக்கின்றன. இல்லையெனில் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.உக்ரைன் மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும், ரஷ்ய அதிபர் புடின் மீதான தனது விரக்தியை வெளிப்படுத்திய டிரம்ப், என்ன நடக்கப் போகிறது என்பது தெரிந்திருந்தும் காத்திருப்பதில் அர்த்தமில்லை என்று கூறினார். மேலும் அவர் கூறியதாவது: அதிபர் புடினால் நான் ஏமாற்றம் அடைந்து உள்ளேன். நான் அவருக்கு வழங்கிய 50 நாட்கள் கெடுவை குறைக்கப் போகிறேன். ஏனென்றால் என்ன நடக்கப் போகிறது என்பதற்கான பதில் எனக்கு ஏற்கனவே தெரியும் என்று நினைக்கிறேன், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

சாமானியன்
ஜூலை 29, 2025 06:28

வேறு எந்த நாடுகளும் பொருளாதார தடை விதிக்கவில்லை.அமெரிக்காவின் ஆணவம் சிரிப்பாய் உள்ளது. அமெரிக்கப் பொருளை காப்பி அடிக்கும் தென் கொரியா மாதிரி நாடுகளிடமிருந்து வாங்கலாம்.


Subburamu Krishnasamy
ஜூலை 29, 2025 04:49

The best comedy actor in world politics is USA President Trump. He is a better actor than Comedian Vadivel.


ஆரூர் ரங்
ஜூலை 28, 2025 22:23

புடினு.நீ இதுக்கும் மேல அடம் பிடிச்சா? அழுதுடுவேன்.


ஆரூர் ரங்
ஜூலை 28, 2025 21:35

ரொம்ப நாளாக பொருளாதார தடை இருப்பதால் புடினுக்கு பயம்? . இன்னும் தடைகள் என்றால் கடும் பாதிப்பு யு எஸ் க்கா ரஷ்யாவுக்கா? இன்னும் அமெரிக்கா ரஷ்யாவிடமிருந்துதானே அணுவுலை கனிமங்களை வாங்குகிறது? யாருக்கும் வெட்கமில்லை.


SP
ஜூலை 28, 2025 21:17

குற்றவாளிகளுக்கு நீதிபதி கடுமையாக எச்சரிக்கை 12 நாட்களுக்குள் சரணடையாவிட்டால் தொடர்ந்து தேட வேண்டி வரும் என்று சொல்வது போல் இருக்கிறது ட்ரம்பரின் அறிக்கை


Ramesh Sargam
ஜூலை 28, 2025 20:01

பொருளாதாரதடை, அதிக வரிவிதிப்பு, நாடு கடத்துதல் என்று ஏதாவது செய்வதே இந்த டிரம்புக்கு முழுநேர பணியாக உள்ளது.


Ramesh Sargam
ஜூலை 28, 2025 19:59

வந்துட்டார்யா வந்துட்டார் நாட்டாமை ட்ரம்ப்.


புதிய வீடியோ