உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு நீங்களும் வரி விதிக்கணும்: ஜி7 நாடுகளை கூட்டுசேர்க்கும் அமெரிக்கா

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு நீங்களும் வரி விதிக்கணும்: ஜி7 நாடுகளை கூட்டுசேர்க்கும் அமெரிக்கா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரிகளை விதிக்குமாறு ஜி 7 கூட்டமைப்பு நாடுகளை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.உலகளவில் பொருளாதாரம், வர்த்தகம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை விவாதிக்க வளர்ச்சி அடைந்த நாடுகள் உருவாக்கிய அமைப்பு தான் ஜி 7 கூட்டமைப்பு. தற்போது இந்த கூட்டமைப்பில் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் உள்ளன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ewk273ct&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த கூட்டமைப்பில் உள்ள நாடுகள் ஆண்டுதோறும் கூடி பேசி, உலகளாவிய பிரச்னைகள் பற்றி முக்கிய முடிவுகள் எடுக்கின்றன. அமெரிக்காவின் வரி விதிப்பு விவகாரத்தில் இந்தியா அடிபணியாமல் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவவது நிறுத்தப்படாது என்று மத்திய அமைச்சர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந் நிலையில் நேரடியாக வரியை விதித்த அமெரிக்கா, இப்போது, ஜி 7 கூட்டமைப்பில் உள்ள நாடுகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளின் மீது வரிகளை விதிக்க வேண்டும் வலியுறுத்தி உள்ளது.வரிகளை விதிப்பதில் அமெரிக்காவுடன் ஜி 7 நாடுகள் இணைய வேண்டும் என்றும் அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து ஜி 7 நாடுகளின் நிதி அமைச்சர்களுடன் அமெரிக்காவின் கருவூல செயலாளர் ஸ்கார் பெசன்ட், வர்த்தக பிரநிநிதி ஜேமிசன் கிரீர் ஆகியோர் தொலைபேசியில் உரையாடி உள்ளனர்.தொலைபேசி உரையாடல் குறித்து இருவரும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறி உள்ளதாவது; உக்ரைனுக்கு எதிரான புடினின் போர் நடவடிக்கைகளுக்கு நிதியளிக்கும் வருவாயை (கச்சா எண்ணெய் வாங்குவது) ஒருங்கிணைந்த முயற்சியால் மட்டுமே முடிவுக்கு கொண்டு வர முடியும். அதற்கு போதுமான பொருளாதார அழுத்தத்தை தர வேண்டும். எனவே, சீனா மற்றும் இந்திய பொருட்களுக்கு வரி விதிக்க வேண்டும். ஜனாதிபதி டிரம்பின் துணிச்சலான தலைமைக்கு நன்றி. ரஷ்யா மற்றும் அதன் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது. நெருக்கடியான நேரங்களில் தீர்க்கமான நடவடிக்கை எடுப்பதில் அவர்கள் (ஜி 7 நாடுகள்) எங்களுடன் இணைவார்கள் என்று நம்புகிறோம்.இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

V.Mohan
செப் 14, 2025 21:16

ஆமாம் ஐக்கிய நாடுகள் சபையும் அதன் தலைவரும் ஏன் நீண்ட தூக்கத்தில் உள்ளன?. அப்படி என்ன அமெரிக்கா இன்னமும் அப்பா டக்கர் பவரா?.சரியான காரணமின்றி திமிருக்காக அமெரிக்கா சண்டை போட்ட வியட்நாம், கொரியா, ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளிடம் உதை வாங்கிய அவமானம் போதாதாமா?? இன்னமும் உலகத்தின் சண்டியர் என்ற நினைவு போகவில்லை. உங்களுக்கு தேவையான அளவு செல்வம் உள்ளது. மக்கள்தொகை குறைவாகவும் நாட்டின் விஸ்தீரணம் அதிகமாகவும் உள்ளது. உலகம் மதித்து போற்றும் பணபலம், நாட்டின் கரன்சி உலகத்தின் நம்பக செலாவணியாக உள்ளது. இதற்கு மேலும் என்ன தேவை- உலகின் சிறந்த ஜனநாயக நாடு என தன்னை அழைத்துக் கொள்ளும் அமெரிக்கா தனது நாட்டுக்கு தேவையான பணத்தை சம்பாதிக்க வழி தேடும் போது, இந்தியா தனது மக்களின் நலனுக்காக கம்மி விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தி, என்ன கூந்தலுக்குஅமெரிக்க கச்சா எண்ணெயை அதிக விலை கொடுத்து வாங்கணும்?. அமெரிக்கா லாபம் பார்க்கறத்துக்கு இந்திய மக்கள் மட்டும் ஏன் கஷ்டப்படணும்?


ManiMurugan Murugan
செப் 14, 2025 00:23

ManiMurugan Murugan அமெரிக்காவின் குள்ளநரித்தனம் இது தான் ரஷ்யா விட ம் கச்சா எண்ணெய் மட்டும் தான் வாங்கப்படுகிறதா அதனால் மட்டும் தான் வருமானமா வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளும் அமெரிக்கா முதற் கொண்டு நிறுத்த வேண்டும் என்று ஏன் அமெரிக்கா சொல்லவில்லை அமெரிக்கா மட்டும் அலெஷ்காவில் வர்த்தக ஒப்பந்தம் போடலாமா அமெரிக்கா உக்ரைன் க்கு தளவாடங்கள் கொடுிப்பதையும் ரஷ்யா வுடன் செய்யும் வர்த்தகத்தை நிறுத்தவேண்டும் இதை இரண்டையும் அமெரிக்கா முதலில் செய்யட்டும்


M Ramachandran
செப் 13, 2025 23:36

கொல்லி கட்டையால் அவர்கலியை மண்டையாய்ய்ய சொறிய சொல்லு கிறீர்கள். முன்பு போல் யாரும் உங் குதர்க்க சேஸ்டைக்கு பதில் கூறுவதில்லை.


நிக்கோல்தாம்சன்
செப் 13, 2025 21:49

பிரான்ஸ் , ஜெர்மனி , ஜப்பான் இந்த கூட்டணியில் இருந்து வெளியேறினால் என்னாகும் யுவர் ஹானர்


Saai Sundharamurthy AVK
செப் 13, 2025 18:37

ஐரோப்பிய நாடுகள் ஏற்கனெவே பல வகைகளில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுநாள் வரை ஆப்பிரிக்க நாடுகளை ஏமாற்றி அவர்களின் ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருந்த ஐரோப்பிய நாடுகளுக்கு தற்போது பல ஆப்பிரிக்க நாடுகள் சுதாரித்துக் கொண்டு ஆப்பு வைத்துக் கொண்டிருக்கின்றன. டிரம்பின் பேச்சை கேட்டு ஆடினால் அதனால் ஏற்படும் பின்விளைவுகள் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தை ஆட்டம் காண வைக்கும். இந்த ஆட்டத்திற்கு முக்கியமாக இந்தியாவுடன் நட்பு பாராட்டும் கனடாவும், ஜப்பானும் கட்டாயமாக ஒப்புக் கொள்ளாது.


KOVAIKARAN
செப் 13, 2025 18:35

இந்த கூட்டமைப்பில் அமெரிக்கா தவிர உள்ள மற்ற நாடுகளான, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் தற்போது இந்தியாவுடன் கொண்டுள்ள நல்லுறவுகளை சிதைத்து, மற்றொரு டிரம்ப் ஆக மாற விரும்பமாட்டார்கள். எனவே, அமெரிக்கா என்ன கூவினாலும், அவர்கள் கேட்க மாட்டார்கள். இன்றைய நிலையில் பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் போன்ற G7 நாடுகள் இந்தியாவில் பெரும் முதலீடுகளை செய்துள்ளன,செய்தும் வருகின்றன. எனவே, அந்த நாடுகள் இந்தியா தான் முக்கியம் என்று அமெரிக்காவிடம் உறுதியாகச் சொல்லிவிடுவார்கள்.


Naga Subramanian
செப் 13, 2025 18:27

ஜி7 ல் உள்ள அனைத்து நாடுகளுமே ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளே. அவர்களை என்ன செய்ய?


Sankar Ramu
செப் 13, 2025 16:05

தீவிரவாத பாக்கிஸ்தானை ஆதரிக்குக் அமெரிக்காவை ஓரங்கட்ட இந்தியா முயற்சி எடுக்கனும்.


Subburamu K
செப் 13, 2025 15:26

His destroying world economy. We can expect severe recession in all the developed countries. Most of the developed countries citizens are not adapted to inflation and recession. Political turmoil and instability will prevail in many European countries, USA and countries depends on USA


Saai Sundharamurthy AVK
செப் 13, 2025 15:20

பதிலுக்கு ரஷ்யாவும் உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் மீது அனுகுண்டு போடுவோம் என்று மிரட்ட வேண்டும். அமெரிக்கா ஆட்டம் கண்டு விடும்.