உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரானில் சாபகார் துறைமுக மேம்பாட்டு திட்டம்: தடை விதிக்க அமெரிக்கா முடிவு

ஈரானில் சாபகார் துறைமுக மேம்பாட்டு திட்டம்: தடை விதிக்க அமெரிக்கா முடிவு

வாஷிங்டன்: ஈரான் சாபகார் துறைமுகத்தில் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கான பொருளாதார தடை விலக்குகளை ரத்து செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது, இந்தியாவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அணு ஆயுதத்தடை ஒப்பந்தத்தை மீறியதற்காக ஈரான் மீது கடந்த 2018ம் ஆண்டு அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. கடந்த 2024ல் சாபகார் துறைமுகத்தை இயக்குவது தொடர்பாக இந்தியா, ஈரானுடன் 10 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் காரணமாக, ரூ.1,000 கோடி முதலீடு செய்ததுடன், ரூ.2,000 கோடிக்கு அதிகமான செலவில் துறைமுகத்தை சுற்றிலும் கட்டமைப்புகளை இந்தியா உருவாக்கியுள்ளது. திட்டம் தொடங்கிய காலத்தில் இந்தியா- அமெரிக்கா இடையே நல்லுறவு இருந்தது. இதனால் ஈரான் துறைமுகத்தை மேம்படுத்தும் திட்டத்தை அமெரிக்கா தடுக்கவில்லை. ஈரானுக்கு எதிரான தடையில் இருந்து இந்தியாவுக்கு அமெரிக்கா முழு விலக்கு அளித்திருந்தது.இந்த நிலையில், ஈரானுக்கு எதிரான தடை விலக்குகளை ரத்து செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது. வரும் செப்.,29ம் தேதி முதல் இந்தத் தடை விலக்குகளை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவினால், இந்தியாவின் முதலீடு மற்றும் துறைமுகத்துடன் தொடர்புடைய நிறுவனங்களைப் பாதிக்கும்.சாபகார் துறைமுகமானது பாகிஸ்தானைத் தவிர்த்து ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான வர்த்தக வழியை வழங்குகிறது. இது இந்தியா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் சர்வதேச வழித்தடமாகும். இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஈரான் அரசை தனிமைப்படுத்தும் அதிபர் டிரம்பின் அதிகப்படியான அழுத்தக் கொள்கைக்கு இணங்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த விலக்கு நடைமுறைக்கு வந்த பிறகு, சாபகார் துறைமுகத்தை இயக்குபவர்கள் ஈரான் சுதந்திரம் மற்றும் எதிர் பரவல் சட்டத்தின் கீழ் தடைகளுக்கு உட்படுத்தப்படலாம். ஈரான் அரசு மற்றும் அதன் ராணுவ நடவடிக்கைகளைத் தக்கவைக்கும் சட்டவிரோத நிதி வலையமைப்புகளைச் சீர்குலைப்பதற்கான நடவடிக்கையாகும்,' என்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவு இந்தியாவின் வர்த்தக திட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயத்தை உண்டாக்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Nathan
செப் 19, 2025 14:29

உனக்கு அறிவை வளர்த்துக் கொண்டு பின் தேர்தலில் போட்டியிட வேண்டும் இல்லை என்றால் உனக்கு ஓட்டு போட்டு தேர்வு செய்த மக்களின் வாக்குகள் வீண் தான். சர்வதேச அரசியல் அறிவற்ற அறிவிலி இந்த ட்ரம்ப். இவரை புறந்தள்ளி தொடர்ந்து சபகர் துறைமுக வளர்ச்சியில் இந்தியா முதலீடு செய்ய வேண்டும்.


மாபாதகன்
செப் 19, 2025 14:18

அப்படிங்களா?? ரொம்ப சந்தாேஷமுங்க.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 19, 2025 10:47

உலகப்போருக்கு வழிவகுக்கும் .........


Anand
செப் 19, 2025 10:42

கோமாளி...


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 19, 2025 10:14

ட்ரம்ப்பிற்கு ஆலோசனை வழங்குபவர்கள் பலர் காங்கிரஸ் கட்சி ராகுல் கானோடு தொடர்பில் இருப்பார்கள் போல தெரிகிறது.


Mecca Shivan
செப் 19, 2025 10:13

அமெரிக்க எந்த நாடுகளுக்கெல்லாம் பொருளாதார தடை விதித்துள்ளது அவர்களெல்லாம் சேர்ந்து அமெரிக்க நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கவேண்டும்.


Gnana Subramani
செப் 19, 2025 09:54

ஜீ இதற்காகவாவது வாயை திறப்பாரா


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 19, 2025 10:48

அவரு தொறக்கவேண்டியதைத் தொறந்தா, செய்ய வேண்டியதை ஒழுங்கா செஞ்சா கிம்ச்சை மன்னரின் கதறல் அதிகமாகும்.... கம்பி என்ன வேண்டியிருக்கும்.. பரவால்லியா


Anvar
செப் 19, 2025 11:17

நீங்கள் என்ன எதிர் பார்க்கிறீர்கள். வாயை திறந்து தான் எல்லாமே செய்ய வேண்டியது இல்லை நமக்கு தேவை இயல்பாடுகளே.. வாயில எதிர்ப்பு காட்டுவது இல்லை .. 50 சதவீதம் வரி போட்டும் நாம் றைய கிட்ட ஆயில் வாங்குவதை நிறுத்தவில்லையே


Informed Critic, Kongunadu, Bharat, Hindustan
செப் 19, 2025 09:53

அமெரிக்காவின் ஒவ்வொரு முடிவும் ரஷ்யா, சீனா, இந்தியா, ஈரான் உறவை வலுப்படுத்துகிறது. இந்த உறவை சீர்குலைக்க நடுவில் நிற்பது பாகிஸ்தான். அதே போல அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, இங்கிலாந்து உறவை சீர்குலைக்க நடுவில் நிற்பது இஸ்ரேல். இஸ்ரேல் இந்தியாவின் நண்பன், ஈரானின் எதிரி. பாகிஸ்தான் அமெரிக்காவின் நண்பன், இந்தியாவின் எதிரி. இந்த சர்வதேச விளையாட்டை முடிவுக்கு கொண்டுவர ஈரானும், பாகிஸ்தானும் அழிக்கப்பட வேண்டும். அதற்கு இந்தியாவும், சீனாவும் தங்களின் எல்லைப் பிரச்சனைகளுக்கு முடிவு கண்டு, ரஷ்யா–இந்தியா போல சிறந்த நட்பு நாடுகளாக உருவாக வேண்டும்.


djivagane
செப் 19, 2025 11:58

இஸ்ரேலும் பாகிஸ்தானும் அழிக்கப்பட வேண்டும் உலக அமைதிக்கு


Subburamu K
செப் 19, 2025 09:41

The worst enemy to India is Trump He is trying to back stsb Modiji But Mois a Karma, Gnana and Bhakthi Yogi too. Bad kof Trump not only destroy his family but also his country USA


ஆரூர் ரங்
செப் 19, 2025 09:33

தான் முதலீடு செய்து வரும் பாகிஸ்தான் நலனுக்காக அதிகாரத்தை தவறாக பயன்படுத்த முயற்சி. சவுதியை பாக்குடன் ராணுவ ஒப்பந்தம் போட வைத்ததும் இதே தீய சக்திதான்.