உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேல் தாக்குதலில் அமெரிக்கா பங்கு இல்லை; ஈரானுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

இஸ்ரேல் தாக்குதலில் அமெரிக்கா பங்கு இல்லை; ஈரானுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: ''இஸ்ரேல் தாக்குதலில் அமெரிக்கா பங்கு இல்லை. அமெரிக்காவை ஈரான் குறிவைத்து தாக்குதல் நடத்தினால் கடும் பதிலடி கொடுப்போம்'' என அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.இஸ்ரேல்-ஈரான் இடையே மோதல் தீவிரமடைந்த நிலையில், இரு நாடுகளும் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. ஈரானில் 80 பேரும், இஸ்ரேலில் 4 பேரும் உயிரிழந்தனர். இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் தெஹ்ரானில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=i05avvjc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், ''இஸ்ரேல் தாக்குதலில் அமெரிக்கா பங்கு இல்லை. அமெரிக்காவை ஈரான் குறிவைத்து தாக்குதல் நடத்தினால் கடும் பதிலடி கொடுப்போம்'' என அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார். இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரான் மீதான தாக்குதலுக்கும், அமெரிக்காவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஈரானால் நாம் எந்த வகையிலும் தாக்கப்பட்டால், அமெரிக்க ஆயுதப் படைகளின் முழு பலமும் வலிமையும் இதற்கு முன் கண்டிராத அளவில் பதிலடி கொடுக்கும். இருப்பினும், ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தத்தை எளிதாகச் செய்து, இந்த ரத்தக்களரி மோதலை முடிவுக்குக் கொண்டுவர முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

NAVANEETHAKRISHNAN
ஜூன் 15, 2025 14:43

அய்யா வளைகுடாவில் ஒரு போக்கிரி தேசத்தை உருவாக்கிய அமெரிக்கா அதர்க்கு இசுரேல் எனப்பெயரிட்டு பாலத்தீனநாட்டை கைப்பற்றி அந்த நாட்டின் குடிமக்களை ஈவுஇரக்கமின்றி கொன்று குடியிருப்புகள். மருத்துவமனைகள். எல்லாகட்டமைப்புகளையும் அழித்து வருகிறது. இந்த கொடுமைக்கு அமெரிக்கா உடந்தை. போதாக்குறைக்கு இப்போ ஈரான் நாட்டையும் மேற்படி போக்கிரி நாடு வம்புக்கு இழுக்கிறது. மத்திய கிழக்கில் ஒரு இசுலாமிய நாடு வல்லரசாகக்கூடாது. இது அமெரிக்காவின் எழுதப்படாத விதி. இவர்கள் அணுஆயுதம் வைத்துக்கொள்ளலாம்.அவர்கள் வைக்கக் கூடாது. இசுரேலுக்கு அனைத்து உதவிகளும் செய்யும் அமெரிக்கா இந்த போருக்கு காரணம் இல்லையாம்


ஆரூர் ரங்
ஜூன் 15, 2025 16:01

வரலாற்றில் பாலஸ்தீன நாட்டு அரசு என எதாவது இருந்ததா? அதற்கு யார் அரசர்களாக இருந்தனர்? இல்லவேயில்லை. ஆனால் 3000 ஆண்டுகளாக இஸ்ரேல் எனும் நாடு இருந்தது. (Palestine in the ancient world was part of the region known as CANAAN where the Kingdoms of ISRAEL and Judah were located). கற்பனைகளை அடிச்சு விடுறீங்க.


SUBBU,MADURAI
ஜூன் 15, 2025 12:39

1 Iran supported Pakistan and supplied weapons to Pak Army in wars against India 2 Iran supported Pakistan on Kashmir many times 3 Iran targeted India on CAA and Abrogation of Article 370 in J&K 4 Iran's supreme leader Ayatollah Khamenei blamed Hindus for Delhi riots in 2020. Iran will never be Indias friend. Its just a business partner for energy needs. So Bharat stands with Israel.


Murthy
ஜூன் 15, 2025 12:31

அப்புறம் என்ன காரணத்துக்கு இசுரேலை தாக்கும் ஏவுகணைகளை தடுக்கிறது அமேரிக்கா?? அமெரிக்காவின் அடியாள் இசுரேல் என்பது ஊருக்கே தெரியும் . .....


பேசும் தமிழன்
ஜூன் 15, 2025 12:22

போலி பெயரில் வந்துள்ளார்கள் என்பதை.... அவர்களின் கருத்து மூலமே தெரிந்து கொள்ள முடிகிறது.


Ramesh Sargam
ஜூன் 15, 2025 11:59

தன்னுடைய நாட்டுக்குள் தினம் தினம் நடக்கும் அந்த துப்பாக்கி சூட்டு பிரச்சினைக்கு ஒரு முடிவு எடுக்க தெரியாமல், மற்ற நாட்டு பிரச்சினைகளில் மூக்கை நுழைப்பதில் இவர் கெட்டிக்காரர்.


M Ramachandran
ஜூன் 15, 2025 11:40

நுணலும் தன் வாயல் கெடும். சிறு புத்தி பெரியண்ணன் - எங்கப்பன் குதிருக்குள் இல்லே.


Narasimhan
ஜூன் 15, 2025 10:59

அண்டப்புளுகன் வந்துட்டான். காலாகாலமாக அமைதியாக இருக்கும் நாடுகளுக்குள் சண்டை மூட்டி தங்கள் நாட்டின் காலாவதியான ராணுவ ஆயுதங்கள் வெடிபொருட்களை விற்பதே இவர்கள் வேலை. அப்பாவிகளை கொல்வதே இவன் கொள்கை


Sudha
ஜூன் 15, 2025 10:48

இந்த ஆள் எப்போ ஒழிவான், ஜோசியம் தெரிஞ்சா சொல்லுங்க


புதிய வீடியோ