உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அனைத்து புகழுக்கும் தகுதியானவர் டிரம்ப்; பாராட்டி தள்ளும் அமெரிக்கா

அனைத்து புகழுக்கும் தகுதியானவர் டிரம்ப்; பாராட்டி தள்ளும் அமெரிக்கா

வாஷிங்டன்; ஈரான், இஸ்ரேல் நாடுகள் இடையேயான போர் நிறுத்தம் அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அந்நாட்டு பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, அந்நாடுகள் இடையே போர் மூண்டது. போரில் இரு நாடுகளும் தீவிரமாக இறங்க, உலக நாடுகள் மத்தியில் பதற்றமான சூழல் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களம் இறங்க ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இதை கண்டித்தன. போர் உக்கிரமான கட்டத்தை நோக்கி நகர்ந்த நிலையில், இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். அடுத்த 12 மணி நேரத்தில் போர் முடிந்ததாக கருதப்படும் என்றும் அவர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். டிரம்பின் போர் நிறுத்த அறிவிப்பை ஈரான், இஸ்ரேல் நாடுகள் உறுதிப்படுத்தவில்லை. இந் நிலையில், டிரம்புக்கு அந்நாட்டு பிரதிநிதிகள் சபை பாராட்டுகளை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சபாநாயகர் மைக் ஜான்சன் கூறி இருப்பதாவது; இது(போர் நிறுத்த அறிவிப்பு) உண்மையில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை. அனைத்து புகழுக்கும் தகுதியானவர் டிரம்ப். வலிமை மூலம் அமைதி எப்படி இருக்கும் என்பது இதுதான். உண்மையில் ஒரு பெரிய நிம்மதியான மூச்சு.இவ்வாறு அவர் பாராட்டி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
ஜூன் 24, 2025 12:25

எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே.... அதுபோல இந்த போரை நிறுத்த உதவிய அமெரிக்க அதிபர் டிரம்புக்கே என்று பாடலாமா?


Ramesh Sargam
ஜூன் 24, 2025 12:22

இந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் எப்படி என்றால், குழந்தையை கிள்ளி அழவிட்டுவிட்டு, பிறகு ஆராரோ ஆரிராரோ என்று பாடி குழந்தையின் அழுகையை நிறுத்தப்பார்ப்பார்.


Ramesh Sargam
ஜூன் 24, 2025 11:52

ஒரு பக்கம் இரான் மீது தாக்குதல் நடத்திவிட்டு மறுபக்கம் போர் நிறுத்தம் பற்றி பேசுகிறார் இந்த டிரம்ப். மீண்டும் அந்த நோபல் அமைதி பரிசு மீது மோகம் வந்துவிட்டது. இப்படிப்பட்ட ரெண்டும்கெட்டான் ஆட்களுக்கு அந்த நோபல் பரிசு கொடுக்கவே கூடாது. கொடுத்தால் அந்த நோபல் அமைப்பின் மரியாதையே போய்விடும்.


Nathan
ஜூன் 24, 2025 11:03

இவரெல்லாம் அதிபர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை