உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மேலும் 7 நாட்டினர் அமெரிக்காவுக்குள் நுழைய தடை; அதிபர் டிரம்ப் உத்தரவு

மேலும் 7 நாட்டினர் அமெரிக்காவுக்குள் நுழைய தடை; அதிபர் டிரம்ப் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: சிரியா, மாலி உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் வர தடை விதித்து அந்நாட்டு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அதிகமாக குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக அமெரிக்கா அதிபர் குற்றம் சாட்டி வருகிறார். இதனால் பல்வேறு நாடுகளுக்கு வரி விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை காரணம் காட்டி, மேலும் 7 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினருக்கு நுழைய தடை விதிக்கும் பிரகடனத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.தற்போது அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகள்:1. சிரியா2. புர்கினா பாசோ3. மாலி4. நைஜர்5.தெற்கு சூடான்6. லாவோஸ்7. சியரா லியோன்இந்த 7 நாடுகளுக்கு தடை உத்தரவு வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.அமெரிக்காவுக்குள் நுழைய, ஏற்கனவே தடைசெய்யப்பட்ட நாடுகளின் பட்டியலில் இருப்பது எவை?* ஆப்கானிஸ்தான்,* பர்மா,* சாட்,* காங்கோ குடியரசு,* ஈக்குவடோரியல் கினியா,* எரித்திரியா,* ஹைட்டி,* ஈரான்,* லிபியா,* சோமாலியா,* சூடான்,* ஏமன்,* புருண்டி,* கியூபா,* லாவோஸ்,* சியரா லியோன்,* டோகோ,* துர்க்மெனிஸ்தான்,* வெனிசுலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

KOVAIKARAN
டிச 17, 2025 17:17

தடைசெய்யப்பட்ட இந்த நாடுகளில் வன்முறை தீவிரவாதம், பயங்கரவாதம் அனைத்தும் மிகவும் மோசமாக உள்ளது. இதே போன்று உள்ள பாகிஸ்தானிலும் தீவிரவாதம், மற்றும் பயங்கரவாதிகளை உருவாக்குவது போன்ற செயல்கள் நிறைய உள்ளன. டிரம்ப் அவர்களே, நீங்கள் ஏன் பாகிஸ்தானுக்கு உங்கள் நாட்டில் நுழைய தடை செய்யப்படவில்லை? ஒருவேளை, உங்கள் மகன், மருமகன்கள் crypto சுர்ரெனசி போன்ற முதலீடுகள் பாதிக்கப்படும் என்றா?


HoneyBee
டிச 17, 2025 12:30

பாக்கிஸ்தான் ஏன் இந்த லிஸ்டில் இல்ல ‌.


Anand
டிச 17, 2025 13:05

பாகிஸ்தானை இயக்குவதே இவனுங்க தான், பிறகெப்படி தடை செய்வாங்க?


Ramesh Sargam
டிச 17, 2025 12:22

பாகிஸ்தான் நாட்டினர் முதலில் தடைசெய்யப்பட்டிருக்கவேண்டும். டிரம்ப் இதுவரை அவர்களை தடை செய்யவில்லை. காரணம் என்னவாக இருக்கலாம்?


thonipuramVijay
டிச 17, 2025 12:16

பாகிஸ்தானை முதலில் தடை செய்யுங்கள் ....முழுதும் மூர்க்கர்கள் நாடாக இருக்கு


Rathna
டிச 17, 2025 11:57

அவங்க மொத்த நாடுகளையும் தடை செய்தாலும் பிரச்சனை ஓயாது. உலகம் அழிவதற்கே சில அழிவு சக்திகள் உருவாகிறது. இதற்கு நல்ல, ஆக்க சக்திகளை விட கெடுதல் விளைவிக்கும் பலம் அதிகம்.


visu
டிச 17, 2025 12:18

அவங்க மறைமுகமா ஒரு மதத்தை சார்ந்தவர்கள் அமெரிக்கா வர தடை செய்கிறார்கள் அது சரியான நடவடிக்கையும் கூட


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 17, 2025 09:36

பெரும்பாலும் இஸ்லாமிய நாடுகள் அல்லது இஸ்லாம் வளர்ந்து வரும் நாடுகள் ....... மோடிக்கு விசா மறுப்பு என்ற செய்திக்கு மகிழ்ந்த உள்ளூர் பச்சைஸ் கவனிக்கவும் ........


N Srinivasan
டிச 17, 2025 09:33

இவரே தான் சிரியா சென்று வந்து அந்த நாட்டிற்கு சலுகைகளை எல்லாம் வழங்கி வந்தார்


Kumar Kumzi
டிச 17, 2025 09:24

பயங்கரவாதிகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் போர்கிஸ்தான் டொனால்ட் டிரம்ப்பின் செல்ல பிள்ளை தடை செய்ய மாட்டார்


shyamnats
டிச 17, 2025 09:18

பாகிஸ்தான் என்ற ஒரு தீவிரவாத நாட்டை இந்தியாவிற்கு எதிராக செயல் பட வைப்பதே, அமெரிக்காதான். இதில் பாக்கியை அமெரிக்கா கண்டிப்பதா ? F16 விமானங்கள் வழங்கியதோடு அதிக படியாக டாலர்களை வழங்கியது . அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் பாகிஸ்தானின் மலைப்பகுதிகளில் சேமித்து வைத்திருப்பதாக செய்திகள் வந்தனவே?


ram
டிச 17, 2025 11:00

அதற்கு டிரம்ப் விலை கொடுப்பாரு, அடுத்த தேர்தலில் இவர் கட்சி துடைத்து ஏறிய படும்


shyamnats
டிச 17, 2025 09:13

பாகிஸ்தான் என்ற ஒரு தீவிரவாத நாட்டை உருவாக்கி, இந்தியாவிற்கு எதிராக வளர்ப்பதே அமெரிக்காதான். பாக்கிஸ்தானை, பங்களா தேசை கண்டிப்பதா, ஹா, ஹா. பாகிஸ்தான் மலைப்பகுதிகளில் அமெரிக்காவின் அணுஆயுதங்கள் சேமித்து வைக்க பட்டிருந்தன, இருக்கிறது என்று செய்திகள் வந்தனவே. .


முக்கிய வீடியோ