உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா குறித்து பிலாவல் பூட்டோ உளறல்: ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த பத்திரிகையாளர்

இந்தியா குறித்து பிலாவல் பூட்டோ உளறல்: ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த பத்திரிகையாளர்

வாஷிங்டன்: ஐ.நா.,வில் இந்தியா குறித்து ஆதாரமற்ற வகையில் பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ பேட்டி கொடுக்க, அதனை அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவர் ஆதாரத்துடன் பதிலடி கொடுத்துள்ளார்.'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடர்ந்து, பயங்கரவாதிகளை வளர்த்தெடுக்கும் பாகிஸ்தானின் முகத்தை தோலுரித்து காட்டவும், இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதை புரிய வைக்கவும் 33 நாடுகளுக்கு அனைத்து கட்சி எம்பிக்கள் குழுக்களை இந்தியா அனுப்பி வைத்தது. இந்தியாவை ' காப்பியடித்து' பாகிஸ்தானும் குழு ஒன்றை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து உள்ளது. அந்த வகையில், அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும். பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவருமான பிலாவல் பூட்டோ அமெரிக்கா சென்ற அவர், ஐக்கிய நாடுகள் சபையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது, இந்தியா மீது ஆதாரமற்ற வகையில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.மேலும், இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களை மோசமாக சித்தரிக்க வேண்டும் என்பதற்காக பஹல்காம் தாக்குதல் அரசியல் கருவியாக பயன்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டினார்.அப்போது அங்கிருந்த அஹமது பாத்தி என்ற மூத்த பத்திரிகையாளர் அவருக்கு பதிலளித்து கூறும் போது, இரு நாடுகள் சார்பிலும் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பை பார்த்தேன். அதில் இந்திய தரப்பில் முஸ்லிம் ராணுவ அதிகாரிகள், தாக்குதல் குறித்து விளக்கமளித்தனர் என பதிலடி கொடுத்தார். அவர் ராணுவ அதிகாரி சோபியா குரேஷியின் பேட்டி கொடுத்ததை எடுத்துக் காட்டினார்.இதற்கு என்ன பதில் சொல்வது என தெரியாத பிலாவல் பூட்டோ, உங்கள் பதில் சரி என்றார். தொடர்ந்து அஹமது பாத்தி அடுத்த கேள்வி கேட்க துவங்குவதற்கு முன்னர், அவரை இடைமறித்த பிலாவல் பூட்டோ, இந்தியா மீது குற்றச்சாட்டுகளை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Varuvel Devadas
ஜூன் 05, 2025 17:13

It seems his fellow Bhooto is mentally retarded. The Pakistan Government should send him to the mental asylum for better treatment.


Yaro Oruvan
ஜூன் 04, 2025 22:59

பாகிஸ்தான் பப்பு


chennai sivakumar
ஜூன் 04, 2025 22:01

அந்த ஊரு பப்புவா இவர்??


Ramesh Sargam
ஜூன் 04, 2025 20:08

அவன் பிலாவல் புட்டோ அல்ல, உளறுவாயன் புட்டோ.


Yaro Oruvan
ஜூன் 04, 2025 20:08

இதற்கு திரு ஒவைசி , குலாம் நபி ஆசாத் போன்று அனைத்து இஸ்லாமியரும் குரல் கொடுக்கவேண்டும் .. செய்வார்களா?


N Sasikumar Yadhav
ஜூன் 04, 2025 19:19

பாகிஸ்தான் அரசியல்வியாதிகள் திருந்த மாட்டானுக... பிச்சையெடுத்தாலும் மதவெRYயை விட மாட்டானுங்க


SUBBU,MADURAI
ஜூன் 04, 2025 20:46

பாகிஸ்தானியர்கள் இவருக்கு வைத்துள்ள பெயர் பிலாவல் ராணி...


சமீபத்திய செய்தி