மேலும் செய்திகள்
மன்னிப்பு கேட்டது பி.பி.சி.,: நஷ்டஈடு கேட்கிறார் டிரம்ப்
3 hour(s) ago | 2
போதைப்பொருள் குற்றங்கள் ஒரே நாளில் 1,000 பேர் கைது
9 hour(s) ago
...
9 hour(s) ago
நியூயார்க்: காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது தொடர்பான வரைவு தீர்மானத்தை ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்ற அமெரிக்கா முயற்சித்து வரும் வேளையில், இதற்கு மாற்றாக மற்றொரு வரைவு தீர்மானத்தை ரஷ்யா முன்வைத்துள்ளது.மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே இரண்டு ஆண்டுகளாக போர் நடந்து வந்தது. இந்நிலையில், அமெரிக்காவின் 20 அம்ச அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில், போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, இஸ்ரேலும், ஹமாசும் பிணை கைதிகள் மற்றும் உடல்களை ஒப்படைத்து வருகின்றன.இந்நிலையில், காசாவில் மனிதாபிமான உதவிகளை செயல்படுத்துவது, காசாவின் பாதுகாப்பை உறுதி செய்வது, கூட்டு அமைதிப் படையை நிறுவுவது, அமெரிக்காவின் அமைதி திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்காக அமெரிக்காவின் மேற்பார்வையில் ஒரு நிர்வாகத்தை அமைப்பதும் அமைதி திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்கு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் அங்கீகாரத்தை பெறும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.இதற்கிடையே ரஷ்யா சார்பில் பாதுகாப்பு கவுன்சிலில் மற்றொரு வரைவு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அமெரிக்கா தலைமையிலான சர்வதேச நிர்வாக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைதிப்படை ஐ.நா.,வின் மேற்பார்வையின் கீழ் செயல்பட வேண்டும் எனவும், மேற்கு கரையையும், காசாவையும் பாலஸ்தீன அதிகாரத்தின் கீழ் ஒன்றிணைக்கப்பட வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் இரு வரைவு தீர்மானங்களும், நாளை ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் ஓட்டெடுப்புக்கு வர உள்ளன. மொத்தமுள்ள 15 உறுப்பு நாடுகளில், குறைந்தது 9 நாடுகள் ஆதரவளிக்க வேண்டும். மேலும், நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகியவை தங்களிடம் உள்ள 'வீட்டோ' அதிகாரத்தை பயன்படுத்தாமல் இருக்க வேண்டியது அவசியம்.வீட்டோ அதிகாரம் உள்ள அமெரிக்கா, ரஷ்யா, தனித்தனியாக வரைவு தீர்மானம் கொண்டு வந்துள்ளதால், இரண்டுமே நிராகரிக்கப்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இது காசா சீரமைப்பு முயற்சிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் சர்வதேச வல்லுநர்கள்.
3 hour(s) ago | 2
9 hour(s) ago
9 hour(s) ago