உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாதுகாப்புத்துறையில் ஒத்துழைப்பு; இந்தியா - அமெரிக்கா இடையே ஒப்பந்தம்

பாதுகாப்புத்துறையில் ஒத்துழைப்பு; இந்தியா - அமெரிக்கா இடையே ஒப்பந்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அடுத்த 10 ஆண்டுக்கு பாதுகாப்புத்துறையில் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தியா - அமெரிக்கா இடையே வரிவிதிப்பு விவகாரத்தில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பது அதிக கவனம் பெற்றுள்ளது. ஆசியான் நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்களின் மாநாடு கோலாலம்பூரில் நடந்தது. இந்த மாநாட்டில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் சந்தித்துப் பேசினர். முடிவில், 10 ஆண்டுக்கான ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் வெளியிட்டுள்ள அறிக்கை; இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினேன். அப்போது, 10 ஆண்டுகளுக்கு பாதுகாப்புத்துறையில் ஒத்துழைப்பது தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளிடையே கையெழுத்தானது. இது, பிராந்திய நிலைப்பாடு மற்றும் போர் தடுப்பு விவகாரத்தில் இருநாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு கூட்டுறவை மேலும் மேம்படுத்துகிறது. நமது ஒருங்கிணைப்பு, தகவல் பகிர்வு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகிறோம். இந்தியா - அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு உறவுகள் முன்னெப்போதும் இருந்ததை விட வலிமையாக உள்ளன.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
நவ 01, 2025 05:30

இவிங்க எது செஞ்சாலும் தேஷ்பக்தி ஹைன். அடிபணிய மாட்டாங்க ஹை. அப்படியே அடிபணிஞ்சாலும்


ஜெய்ஹிந்த்புரம்
அக் 31, 2025 19:57

தேவையே இல்லாதவற்றை அமெரிக்கா விற்கும், இந்தியா வாங்கும். அதுக்கு பேரு ஒத்துழைப்பு இல்லை, வியாபாரம். வரிப்பணத்தை வீண்டிப்பது.


cpv s
அக் 31, 2025 16:55

Do not belive america keep always eye on america


bharathi
அக் 31, 2025 15:03

Yes and they provide Pakistan all weapons to keep us hot


Barakat Ali
அக் 31, 2025 13:48

பாஜகவின் சுயச்சார்பு கொள்கை என்னாச்சு ????


Kumar Kumzi
அக் 31, 2025 14:28

தெரிஞ்சிட்டு என்ன செய்ய போற


Tetra
நவ 01, 2025 02:27

நேரு ஆரம்பிச்ச ஹால் என்னிக்கு சும்மா வாங்கற சம்பளத்துக்கு வேலை செய்றாங்களோ அன்றைக்குத்தான் சுய சார்பு முடியும். தமிழ்நாடு ? கேக்கவே வேண்டாம். டாஸ்மாக் சரக்கடிச்சு பாய் ப்ர்யாணி சாப்பிட்டு மதச்சார்பின்மைன்னுவான்.


சமீபத்திய செய்தி