உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் 5 லட்சம் பேர்: டிரம்ப்புக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் 5 லட்சம் பேர்: டிரம்ப்புக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: கியூபா, நிகரகுவா, ஹைதி மற்றும் வெனிசுலா நாடுகளை சேர்ந்த 5,32,000 பேருக்கு வழங்கப்பட்ட சட்டப்பூர்வ அகதிகள் அந்தஸ்தை ரத்து செய்ய டிரம்ப் அரசுக்கு அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உள்ளது. இதனால், அவர்கள் நாடு கடத்தப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இருந்த போது, மனிதாபிமான பரோல் திட்டத்தின் கீழ் கியூபா, ஹைதி, நிகரகுவா மற்றும் வெனிசுலாவை சேர்ந்த 5,32,000க்கும் மேற்பட்டோர் மனிதாபிமான பரோல் திட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தனர். ஆனால், அவர்கள் வெளியேற வேண்டும் என டிரம்ப் நிர்வாகம் விரும்பியது. அவர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக அகதிகள் அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும். அல்லது வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டனர்.ஆனால், டிரம்ப்பின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்தது. இதனால், அவர்களுக்கு சற்று நம்மதி அடைந்தனர். இதனை எதிர்த்து அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இதனை விசாரித்த நீதிமன்றம் டிரம்ப் நிர்வாகத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. இதன்படி, வெனிசுலா, கியூபா, ஹைதி மற்றும் நிகரகுவாவை சேர்ந்த 5,32,000 அகதிகளுக்கு வழங்கப்பட்ட சட்டப்பூர்வமான தற்காலிக அந்தஸ்தை ரத்து செய்வதற்கு அனுமதி வழங்கியது. இதனால், அவர்கள் நாடு கடத்தப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

பரேஷ்
மே 31, 2025 10:04

சென்றவரெல்லாம் தங்கிவிட்டால் அந்த மண்ணில் இருக்க இடமேது? அம்ரித் காலில் எல்லோரும் திரும்பி வாங்க.


Against traitors
மே 30, 2025 23:55

ஹீ ஹீ நம்ப சுப்ரீம் கோர்ட் அமெரிக்கா சுப்ரீம் கோர்ட் இல்லையே


kalyan
மே 30, 2025 23:16

ரோஹாங்கியாக்களை திருப்பி அனுப்ப வேண்டும் , இந்தியா என்ன தர்மச்சத்திரமா ? "" என்று ஏற்கனவே உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்து விட்டது . அதை நடப்பாக்குவதில் உள்ள தாமதம் தான் மம்தா நீதியின் கைவினை


உண்மை கசக்கும்
மே 30, 2025 21:34

ஒருத்தன் சட்ட பூர்வ அகதி என்பான் விசா கொடுப்பான். இன்னொருத்தன் வந்து இல்ல இல்ல நீ உன் நாட்டுக்கே போடா என்பான். அவிங்க உச்ச நீதிமன்றமும் கரீக்ட் , எங்க நாட்டை விட்டு போடா என்பான். திருட்டு தனமாக எங்க நாட்டில் நுழைந்த லட்சக்கணக்கான பங்களாதேஷ் திருடர்களை மட்டும் திருப்பி அனுப்ப கூடாதாம். என்னங்க உங்க உலக நியாயம்..


துர்வேஷ் சகாதேவன்
மே 30, 2025 22:31

அதே தான் அன்று கைபர் கணவாய் வழியே வந்த யூதர் ஆரியர் கூட்டம் கூட துரத்த வேண்டியது தான்


மீனவ நண்பன்
மே 30, 2025 21:33

இதில் என்ன அபாயம் ? அமெரிக்கா தர்மசத்திரமா ?


Raghavan
மே 30, 2025 21:31

சரியான தீர்ப்பு. அதே போல் இங்கேயும் வங்க தேசத்தில் இருந்து இங்கு வந்துள்ள ரோஹிங்காக்களையும் நாம் அவர்கள் தேசத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும். செய்யுமா மோடி அரசாங்கம்?


Srinivasan Krishnamoorthy
மே 30, 2025 23:48

courts will object state governments do not cooperate, ask stalin, mamta


சமீபத்திய செய்தி