உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / செலவு கட்டுப்படியாகலை: அகதிகளை அனுப்ப ராணுவ விமான பயன்பாட்டை நிறுத்தியது அமெரிக்கா

செலவு கட்டுப்படியாகலை: அகதிகளை அனுப்ப ராணுவ விமான பயன்பாட்டை நிறுத்தியது அமெரிக்கா

வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அனுப்புவதற்கு ராணுவ விமானங்களை பயன்படுத்தப்பட்டது. இதற்கு செலவு அதிகம் ஆவதால், அந்த விமானத்தை பயன்படுத்துவதை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அமெரிக்கா அதிபராக கடந்த ஜன., மாதம் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். இதன் பிறகு, அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்து சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்காக அவர்கள் அந்நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான சி 17 விமானத்தில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். சட்டவிரோதமாக குடியேறினால், அதனை சகித்துக் கொள்ள மாட்டோம் என்பதை அவர்களுக்கு தெரிவிக்கும் வகையில், ராணுவ விமானம் பயன்படுத்தப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. அமெரிக்காவின் இந்த செயலுக்கு மெக்சிகோ, கொலம்பியா மற்றும் வெனிசுலா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. அந்த விமானத்தை தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம் எனக் கூறின. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கைது செய்யப்பட்டு இந்தியா, பெரு, கவுதமாலா, ஹோண்டுராஸ், பனாமா, ஈக்வடார் உள்ளிட்ட நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். 12க்கும் மேற்பட்ட முறை சி12 விமானமும், 30க்கும் மேற்பட்ட அகதிகளை அழைத்துச் செல்வதற்கு என்றே உள்ள பயணிகள் விமானமும் பயன்படுத்தப்பட்டன.ஆனால், ராணுவ விமானத்தை பயன்படுத்த அதிக செலவு ஏற்பட்டது. இந்த விமானத்தில் குறைந்த நபர்களே ஏற்ற முடிவதுடன், அவை நீண்ட தூரம் செல்வதால் செலவும் அதிகமாக இருந்தது.அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு 3 முறை சி17 விமானம் மூலம் அகதிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்காக ஒவ்வொரு முறையும் 30 லட்சம் அமெரிக்க டாலர்( இந்திய மதிப்பில் சுமார் ரூ.26 கோடி) செலவானது. கவுதமாலாவுக்கு சிலரை மட்டும் அழைத்துச் செல்வதற்கு சுமார் 20 ஆயிரம் டாலர் ( இந்திய மதிப்பில் ரூ.17 லட்சம்) செலவு செய்யப்பட்டு உள்ளது.அரசு தகவல்களின்படி, அமெரிக்க அகதிகள் மற்றும் சுங்க அமலாக்கத்துறை வசம் உள்ள அகதிகளுக்கு என்றே உள்ள விமானத்தை இயக்க ஒரு மணி நேரத்திற்கு 8,500 டாலர் செலாகும் . ஆனால், சி 17 விமானத்தை இயக்க ஒரு மணி நேரத்திற்கு 28,500 டாலர் செலவானது எனக்கூறப்பட்டு உள்ளது.இந்நிலையில், அதிக செலவு காரணமாக அகதிகளை அனுப்புவதற்கு சி17 விமானத்தை பயன்படுத்துவதை மார்ச் 1 முதல் அமெரிக்க அரசு நிறுத்தி வைத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது நீட்டிக்கப்படலாம் அல்லது நிரந்தரமாக்கப்படலாம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Astrologer MSG Aiyangar
மார் 08, 2025 17:30

வெரி good


சண்முகம்
மார் 07, 2025 09:05

அமெரிக்க ராணுவ விமானங்கள் - அமெரிக்க நாட்டின் பாதுகாப்பு கருதி - பயணிகள் விமான ஆகாய தடத்தை பயன்படுத்த முடியாது. சுற்றி செல்ல வேண்டும். செலவு அதிகம்.


Anbuselvan
மார் 06, 2025 22:13

எவ்வுளவு பேரை விமானத்தில் கொண்டு விட முடியும். அதற்குள் திரு டிரம்ப் அவர்களின் பதவிக்காலம் முடிந்த விடும். நண்பர் தமிழ் கூறியது போல கப்பலில் கொண்டு விடலாம். ஒரு கப்பலில் 2500 முதல் 3000 பேர் வரை ஏற்றி அனுப்பலாம்.


தமிழ்வேள்
மார் 06, 2025 20:50

அகதிகளுக்கு சோறு போடும் வேலை வேஸ்ட்... அவர்கள் வந்தது போலவே ஏதாவது கன்டெய்னர் கப்பல் அல்லது லாரியில் ஏற்றி அனுப்பி விடலாம்.. செத்தாலும் நஷ்டம் இல்லை


आपपावी அப்பாவி
மார் 06, 2025 20:30

हमारा मोदी एक विमान भेजें और मुझे सुरक्षित ले आएं.. இந்தி தெரிஞ்சவன் படிச்சு புரிஞ்சுக்கோங்க.


Suppan
மார் 06, 2025 22:34

நீங்களும் திருட்டுத்தனமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தீர்களா? मुझे सुरक्षित ले आएं என்கிறீர்களே ?


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 06, 2025 19:51

எஞ்சியவர்களுடன் பன்னூன் ஐயும் சேர்த்து விரைவில் அனுப்பிவிடுங்கள் ....


Tetra
மார் 06, 2025 20:41

எதற்கு? துஷ்டன் அங்கேயே இருக்கட்டும்


Appa V
மார் 06, 2025 19:19

திருட்டுத்தனமாக நுழைந்தவர்கள் பயணிகள் விமானத்தில் வன்முறையை கையாள்பவர்களாக இருக்க வாய்ப்பு அதிகம் ..வீட்டு வேலை தோட்ட வேலை செய்ய ஆட்கள் கிடைப்பது அரிது ..குடியுரிமை தராமல் தொழிலாளர்களாக பட்டன் படுத்த வாய்ப்பு இருக்கிறதா ?


Easwar Kamal
மார் 06, 2025 18:36

சும்மா கண் துடைப்பு எலேக்ஷன் வாய் விட்டாச்சு அதுக்கு ஏதாவது பண்ணணுமே அது பண்ணியாச்சு. இன்னும் 4 வருஷம் வாய திறக்கமாட்டானுவ. இந்தியாவுக்கு எல்லாம் எதுக்கு அனுப்பனும் விமானம். மோடியை ஒரு போன் போட்டு உங்க ஆட்களை கூடிட்டு போங்கன்னு சொன்ன உடனே அனுப்பிருவாரு.மத்த நாடு கிட்ட எல்லாம் இந்த பாச்சா பலிக்காது. இது trumpukae நல்ல தெரியும்.


ஆரூர் ரங்
மார் 06, 2025 17:48

ஏழரை லட்சம் பேரை விமானத்தில் திருப்பியனுப்பப்.போகிறேன் என்ற போதே இது தெரிந்ததுதானே? அமெரிக்காவே வந்தேறிகளின் தேசம் என்பதை அடிபட்டுத்தெரிந்து கொண்டுள்ளார்கள். கள்ளக் குடியேறியவர்களின் உழைப்பில்தான் நாடே பிழைத்துக் கொண்டுள்ளது.


Sudha
மார் 06, 2025 17:41

டாய்லெட் கூட இல்லாத விமானத்திற்கு 26 கோடி செலவாம் ,நம்ப முடியவில்லை கோமாளிகள் desam


Suppan
மார் 06, 2025 22:41

தவறான கருத்து, C17 ல் அதிக பட்சம் 134 பேர் பயணிக்கலாம். இரண்டு கழிப்பறைகள் உள்ளன.


புதிய வீடியோ