உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போரில் இஸ்ரேலுக்கு உதவும் அமெரிக்கா; ஈரானை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் டிரம்ப்

போரில் இஸ்ரேலுக்கு உதவும் அமெரிக்கா; ஈரானை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஈரான் முன்வர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆபரேஷன் ரைஸிங் லையன் என்ற பெயரில் ஈரானில் உள்ள அணுசக்தி தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரானும், இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது. இது உலக நாடுகளை கவலையடையச் செய்தது. இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு உதவியாக, ஈரானின் ஏவுகணைகளை அமெரிக்க படைகள் இடைமறித்து அழித்து வருகிறது. இந்த நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தப்போவது குறித்து தங்களுக்கு முன்பே தெரியும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: மரணத்தில் இருந்தும், அவமானத்தில் இருந்தும் ஈரானை காப்பாற்ற மிகவும் கடினமாக முயற்சித்தேன். ஏனெனில் ஒரு ஒப்பந்தம் நிறைவேறுவதைப் பார்க்க நான் விரும்பினேன். நாங்கள் இஸ்ரேலுக்கு நெருங்கிய முதன்மையான கூட்டாளி. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இப்போது ஒன்றும் தாமதமாகி விடவில்லை. அணுசக்தி ஒப்பந்தம் குறித்து தற்போதும் பேச்சுவார்த்தை நடத்தலாம், எனக் கூறினார். ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால், மத்திய கிழக்கு நாடுகளிடையே போர் பதற்றம் நிலவி வருவதை, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்க மறுத்திருந்தார். இந்த சூழலில், நாங்கள் இஸ்ரேலுக்கு ஆதரவு அளிப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Saai Sundharamurthy AVK
ஜூன் 14, 2025 15:20

அமெரிக்காவின் டபுள் கேம் !!!!


நிவேதா
ஜூன் 14, 2025 14:42

அணு ஆயுத ஒப்பந்தங்களை அமெரிக்கா, ரஷ்யா, சீனா, வடகொரியா போன்ற நாடுகளே மதிப்பதில்லை. இந்தியா மதிக்காததால் இந்தியாவுக்கும் ஒரு கால கட்டத்தில் பொருளாதார தடை விதிக்கப்பட்டது. ஆகவே, ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்து போடவில்லை என ஈரானை தாக்குவது சரியற்ற செயல். இஸ்ரேலின் நிலைப்பாடை பார்க்கும் போது ஹிட்லர் எடுத்த முடிவு சரியோ என தோன்றுகிறது.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 14, 2025 14:10

டிரம்ப் வியாபார பருப்பு இங்கு வேகாது.


Palanisamy Sekar
ஜூன் 14, 2025 09:54

அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டால் இதுபோன்ற பிரச்சினைகள் எப்பவோ முடிவுக்கு வந்திருக்கும். அது ஏன் இவர்களுக்கு மட்டும் தீவிரவாத சிந்தனையோ தெரியவில்லை. இந்தப்பக்கம் பாகிஸ்தானின் புத்தியும் இப்படித்தான் இருக்கிறது. மதங்கள் எல்லாமே அன்பையே போதிக்கின்றன. ஆனாலும் ஏன் இவர்களுக்கு மட்டும் அழிவு சிந்தனையோ தெரியவே இல்லை. இந்த போரினால் உலகம் முழுவதுமே எண்ணெய் விலையும் அதனால் உயரும் பொருளாட்களின் விலையும் பாவம் அப்பாவி ஜனங்கள். இதன் மூல காரணத்தை ஆராய்ந்தால் மதமே பிரதானம் என்றிருக்கும். சில தலைவர்களின் சிந்தனை மனித குலமே தத்தளிக்கின்றது.


குத்தூசி
ஜூன் 14, 2025 09:36

ஈரானை அடிக்க இஸ்ரேல் கிட்ட தூண்டி விட்டது அமெரிக்கா தான். நல்ல கேம் விளையாடுராங்க.


Thravisham
ஜூன் 14, 2025 13:02

அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவமாட்டான்.


Sekar
ஜூன் 14, 2025 08:53

உலக பயங்கரவாதத்திற்கு ஊற்றுக்கண்ணாக இருக்கும் அமெரிக்கா இப்பொழுது ரஷ்ய ஆதரவு நாடுகளை மூன்றாம் உலகப்போருக்கு தூண்டுவது போல் தெரிகிறது. நாம் சர்வதேச பிரச்சனைகளை சாதுர்யமாக கையாள வேண்டும். நமக்கு இப்பொழுது தேவை அனைத்து துறைகளிலும் துரிதமான வளர்ச்சி மற்றும் அதற்கு ஏதுவான கட்டமைப்பு.


Thravisham
ஜூன் 14, 2025 10:39

அதற்கு ஒரே வழி தமிழகத்தில்குடும்ப கம்பெனி ஆட்சியையும் திருட்டு த்ரவிஷன்களின் முதுகெலும்பை ஒடிக்கும் அண்ணாமலையை அரியணை ஏற்க வைப்பதுதான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை