உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / "கல்வி கற்க எங்கள் நாடு பாதுகாப்பானது": அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி

"கல்வி கற்க எங்கள் நாடு பாதுகாப்பானது": அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்கா படிப்பதற்கும் பாதுகாப்பாக இருப்பதற்கும் ஒரு அற்புதமான இடம் என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் பலரும் படித்து வருகிறார்கள். வளர்ந்த நாடான அமெரிக்காவில் நல்ல சம்பளம் மற்றும் பல்வேறு வசதிகள் கிடைப்பதால் அங்கேயே செட்டிலாகிவிடும் என்ற நம்பிக்கையில் பலரும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்வதை பார்க்க முடிகிறது. அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவுக்குச் செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது.

பாதுகாப்பானது

இந்நிலையில், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி கூறியிருப்பதாவது: எந்தவொரு சோகம் நிகழும் போதும் எங்களுக்கு மன வேதனை அளிக்கிறது. அமெரிக்கா படிப்பதற்கும், பாதுகாப்பாக இருப்பதற்கும், ஒரு அற்புதமான இடம். உலகில் உள்ள எந்த நாட்டையும் விட அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவில் படிக்கின்றனர். கடந்த ஆண்டு 2,00,000 விசாக்கள் வழங்கப்பட்டன. கல்வி கற்க எங்கள் நாடு பாதுகாப்பானது என்பதை இந்தியர்கள் புரிந்து கொள்வார்கள் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ramesh Sargam
பிப் 11, 2024 06:35

உலகில் உள்ள எந்த நாட்டையும் விட அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவில் படிக்கின்றனர். ஒப்புக்கொள்கிறோம். ஆனால் சமீபகாலங்களில் இந்திய மாணவர்கள் அதிக அளவில் வன்முறைக்கு ஆளாகிறார்கள், துப்பாக்கி சூட்டில் இறக்கிறார்கள். இந்தவருடம் 2014 துவங்கி இன்றுவரை ஏழு இந்தியர்கள் உங்கள் மண்ணில் துர்மரணம் அடைந்திருக்கிறார்கள். இது மிகவும் வேதனை அளிக்கும் விஷயம். இதுபோன்ற நிகழ்வுகளை நீங்கள் முற்றிலும் தடுத்து நிறுத்தவேண்டும். இந்தியர்களுக்கு, குறிப்பாக இந்திய மாணவர்களுக்கு, பாதுகாப்பு அளிக்கவேண்டியது உங்கள் கடமை. எங்கள் நாட்டில் ஒரு அமெரிக்கர் இறந்தாலும், நீங்கள் சும்மா இருப்பீர்களா? யோசியுங்கள்.


sankaranarayanan
பிப் 10, 2024 21:41

அமெரிக்கா படிப்பதற்கும் பாதுகாப்பாக இருப்பதற்கும் ஒரு அற்புதமான இடம் என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர எரிக் கார்செட்டி தெரிவித்துள்ளார் இவர் என்ன எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. தற்போது அமெரிக்காவில் இதுவரை இந்த ஆண்டில் நான்கு மாணவர்கள் மர்மமான முறையில் இறந்துள்ளனர் அவைகளை கண்டுபிடித்து இனி இதுபோன்று நடக்காமல் மாணர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டிய அரசு வாய் மூடி மவுனம் காத்துக்கொண்டிருக்கிறது. இவ்வளவு தொழில் முன்னற்றம் நவீனமான இந்த அரசின் மெத்தனப்போக்கை கண்டிக்க வேண்டும் இதே போன்று அவர்களுக்கு பிற நாட்டில் நடந்தால் சும்மா இருப்பார்களா?


Viswam
பிப் 10, 2024 20:40

அமெரிக்காவில் இந்திய லய்வ்ஸ் மேட்டர். ஹியூமன் ரைட்ஸ் வையலேஷன், ரேசிசம் உச்சத்தில் என்று ஜெய்சங்கர் சொன்னால் தேவலை , அதற்குள் இந்த ஆசாமி பீத்தல்


பெரிய ராசு
பிப் 10, 2024 15:31

இந்திய ஆயிரம் மடங்கு பாதுகாப்பானது ..இது என் சொந்த அனுபவம் ..ஒத்த புள்ளய வச்சிருக்கிறவன் தயவு செய்து அனுப்பாதீர்கள்


குமரி குருவி
பிப் 10, 2024 12:34

பள்ளிக்கு மாணவர்கள் துப்பாக்கிகொண்டு வந்து சக மாணவரைசுட்டு தள்ளுவது எத்தனைபெரிய பாதுகாப்பு குறை...


A1Suresh
பிப் 10, 2024 12:34

தொடர்ந்து பாரதத்தின் மாணவர்கள் கொல்லப்படுகின்றனர் . காலிஸ்தான் பயல்களை அடக்கும் வரை இந்த அவப்பெயர் தொடரும்


அருண் குமார்
பிப் 10, 2024 12:19

அமெரிக்காவில் அமெரிக்கனுக்கே பாதுகாப்பு கிடையாது இதில் வேற அடுத்தவனுக்கு பாதுகாப்பாம்


ஆரூர் ரங்
பிப் 10, 2024 12:03

ஆளுக்கு ஆள் துப்பாக்கி வைத்துக் கொண்டு அலைகிறார்கள் . லைசன்ஸ் தேவை இல்லை. ???? என்று யார்எப்போது சுடுவார்கள் என்பதே தெரியாது. இதெல்லாம் ஒரு பாதுகாப்பான நாடா?


அசோகன்
பிப் 10, 2024 11:50

ஆமா மாசத்துக்கு 4 ஸ்டுடென்ட்க்கு மேல் கொல்ல மாட்டோம்.... அவ்வளவு பாதுகாப்பு ????????????. இங்கிலாந்து கனடா அமெரிக்க வுக்கு அனுப்புவதும் பாதுகாப்பு கிடையாது


சுலைமான்
பிப் 10, 2024 11:32

இந்த டகால்ட்டி வேலதாற வேணாம்ன்றது! உங்க நாட்டுல நடக்குற துப்பாக்கி சூடு சமாபவங்கள டி வி யில் பாக்குறது இல்லயா


மேலும் செய்திகள்









புதிய வீடியோ