உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கால்பந்து போட்டி வெற்றி கொண்டாட்டத்தில் வன்முறை: பிரான்சில் இருவர் பலி; 500 பேர் கைது

கால்பந்து போட்டி வெற்றி கொண்டாட்டத்தில் வன்முறை: பிரான்சில் இருவர் பலி; 500 பேர் கைது

பாரீஸ்: பிரான்சில் நடந்த சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் வெற்றி கொண்டாட்டங்களின் போது, ஏற்பட்ட மோதலில் , இருவர் பலியானார்கள், மேலும் 192 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.பிரான்ஸ் பாரீஸ் நகரில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதி போட்டியில் பாரீஸ் செயிண்ட் ஜெர்மைன் அணியும், இத்தாலியின் இன்டர் மிலன் அணியும் மோதின. இதில் முதல்முறையாக பாரீஸ் செயிண்ட் ஜெர்மைன் அணி வெற்றிபெற்று சாம்பியன் ஆனது. நேற்று இரவு முழுவதும் வெற்றிக்கொண்டாட்டங்கள் நடைபெற்றது. வன்முறை வெடித்தன. ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருவர் கொல்லப்பட்டனர். 192 பேர் காயமடைந்தனர்.வன்முறை தொடர்பாக இன்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:வன்முறையால் நூற்றுக்கணக்கான தீ விபத்துகள் ஏற்பட்டது, இதில் 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன. பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சுமார் 22 பேரும், 7 தீயணைப்பு வீரர்களும் காயமடைந்தனர்.சாம்ப்ஸ் எலிசீஸில், பஸ் நிறுத்துமிடங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. போலீசார் மீது கற்களை வீசினர், ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள், தடைகளை தாண்டி, குதித்ததால், அவர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் அடித்து போலீசார் முயற்சித்தனர். இந்த வன்முறையில்,இதுவரை 559 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், இதன் விளைவாக 320 பேர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர்.இவ்வாறு உள்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

SUBBU,MADURAI
ஜூன் 01, 2025 20:16

Israels response to the Paris riots: France cannot expect peace while denying independence and a state to its Muslim citizens. Its time for a two state solution: One French and one Islamic.


SUBBU,MADURAI
ஜூன் 01, 2025 19:40

How many more times will this happen before Europe finally wakes up?


SENTHIL NATHAN
ஜூன் 01, 2025 19:40

லண்டன், பாரீஸ் நகரங்கள் விழுந்து விட்டண. கர்மா தன் வேலையை செவ்வனே செய்கிறது.


SUBBU,MADURAI
ஜூன் 01, 2025 19:43

PARIS: Islamist rioters climb the statue of Joan of Arc and wave the Palestinian flag. They are using their teams victory as an excuse to wreak havoc. But had they lost, they would've done the same! From Joan of Arc to Islamists taking over, what a tragic downgrade for France.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை