உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆளே மாறிப்போன கோலி; ஒருநாள் போட்டிகளில் இருந்தும் விரைவில் ஓய்வு?

ஆளே மாறிப்போன கோலி; ஒருநாள் போட்டிகளில் இருந்தும் விரைவில் ஓய்வு?

லண்டன்: கோலியின் புதிய 'லுக்' ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்திய அணியின் சீனியர் பேட்டர் கோலி 36. ஏற்கனவே சர்வதேச 'டி-20', டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். பிரிமியர் தொடரில் பெங்களூரு அணிக்கு முதல் கோப்பை வென்று தந்த கையோடு லண்டன் சென்றார். இங்கு பொழுதை கழிக்கிறார். இவரது 'லேட்டஸ்ட்' போட்டோவில் வெள்ளை தாடியுடன் மிகவும் சோர்வாக காணப்படுகிறார். அடையாளம் தெரியாத அளவுக்கு ஆளே மாறிப் போயுள்ளார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய கோலி, 'நான்கு நாளுக்கு ஒரு முறை தாடிக்கு 'டை' அடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பது அர்த்தம்,' என குறிப்பிட்டார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய இளம் வீரர்கள் முத்திரை பதித்தனர். இதனால் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் விரைவில் ஓய்வு பெற இருப்பதை தான் கோலியின் வெள்ளை தாடி உணர்த்துவதாக சில ரசிகர்கள் தெரிவித்தனர். இதை மறுக்கும் வகையில் நேற்று லண்டனில் வலை பயிற்சியை துவக்கினார் கோலி. வரும் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் (அக்.19-25) களமிறங்க வாய்ப்பு உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

naranam
ஆக 09, 2025 18:43

ஓய்வெடுக்க சென்றவர் திரும்ப வராமல் இருப்பதே நல்லது..இது ரோஹித் சர்மாவுக்கும் பொருந்தும்.


venugopal s
ஆக 09, 2025 16:52

ஒரு சிலர் ஓய்வு பெறுவது நாட்டுக்கு மிகுந்த நன்மை பயக்கும், அதில் இவர் இரண்டாம் இடத்தில் உள்ளார்! முதலிடத்தில் இருப்பவர் யார் என்று நான் சொல்லத் தேவையில்லை. அது எல்லோருக்கும் தெரியும்!


Thravisham
ஆக 11, 2025 07:35

கடந்த பல வருடங்களில் பட்டாயாவுக்கும் இத்தாலிக்கும் இன்னும் பல சுற்றுலா தளங்களுக்கும் குஜாலாக, பல வழக்குகளில் பைலில் இருக்கும் ஒரு பப்புவைதான் நீங்கள் பதிவு செய்கிறீர்கள் என நினைக்கிறேன்


RRR
ஆக 09, 2025 13:30

இவனையெல்லாம் ஒரு பெரிய கிரிக்கெட் ஜாம்பவான் என்று கொண்டாடுவதே கேவலம்... பெங்களூரில் RCB வெற்றிவிழாவில் 11பேர் உடல் நசுங்கி இறந்ததை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாதவன்... ரசிகர்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாதவன்... மிகக்கேவலமான பணப்பேய் மற்றும் விளம்பரப்பைத்தியம் இவன்....


angbu ganesh
ஆக 09, 2025 11:48

தோனிக்கு அடுத்த தலைவர்


Thravisham
ஆக 09, 2025 11:30

இவர் ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரர் என்பது தெரியும். த்யான சந்த் போன்ற பெருந்தன்மையான வீரர் அல்ல. சச்சின் போன்ற சுயநல ஆட்டக்காரர். அவ்வளவே. இந்திய இளைஞர்கள் இவரை காப்பியடித்து தாடியும் குடுமியும் வைத்துக் கொண்டு அலைகிறார்கள்


VENUGOPAL RASAIYA
ஆக 09, 2025 10:34

கிரேட் பிளேயர்


Vasan
ஆக 09, 2025 10:04

Virat Kohli should play at least till 50 years. His on field advice and sharing of strategy will be enough for the team to win, with the remaining 10 players itself, even if he fails to score with bat.


vijay
ஆக 09, 2025 08:57

Favorite for cricket lovers


vijay
ஆக 09, 2025 08:56

GOAT


புதிய வீடியோ