உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரூ.40 லட்சம் மதிப்பிலான பிரான்ஸ் அதிபர் மேக்ரானின் மெழுகு சிலை திருட்டு

ரூ.40 லட்சம் மதிப்பிலான பிரான்ஸ் அதிபர் மேக்ரானின் மெழுகு சிலை திருட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாரிஸ்: பிரான்சில் அதிபர் மேக்ரானின் மெழுகு சிலையை போராட்டக்காரர்கள் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, ரஷ்யாவுடன் பிரான்ஸ் பொருளாதார உறவைக் கண்டித்து கிரீன்பீல் என்ற அமைப்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மேலும், ரஷ்யாவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை முழுமையாக துண்டிக்காத பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, கிரெவின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த பிரான்ஸ் அதிபர் மேக்ரானின் மெழுகு சிலையை போராட்டக்காரர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.40 லட்சமாகும். ரஷ்ய தூதரகத்திற்கு எதிரே அந்த மெழுகுசிலையை வைத்த அவர்கள், 'புடின் மற்றும் மேக்ரான் கதிரியக்கக் கூட்டாளிகள்', என்ற பெயர் பலகையையும் வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார், சிலையை மீட்டு மீண்டும் அருங்காட்சியகத்திடம் ஒப்படைத்தனர். உக்ரைன் உடனான போருக்குப் பிறகு, ரஷ்யாவில் இருந்து பிரான்ஸ் இறக்குமதியை அதிகரித்துள்ளது. குறிப்பாக, 2021ம் ஆண்டை காட்டிலும் 2023ல் உரங்களின் இறக்குமதி 80 சதவீதம் அதிகரித்துள்ளதாக கிரீன்பீஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

djivagane
ஜூன் 04, 2025 23:23

ரஷ்யா தூதருக்கு பிறகு அந்த சிலை EDF ஹெட் ஆபிஸில் வைக்கப்பட்டது


Anand
ஜூன் 04, 2025 18:06

ஒருவேளை, கோவத்தில் அந்த பாட்டி செய்த வேலையாக இருக்குமோ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை