உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நாமெல்லாம் முஸ்லிம் நாடுகள் மலேஷியாவுக்கு வலை விரித்த பாக்., இந்திய குழு பயணத்தில் ருசிகரம்

நாமெல்லாம் முஸ்லிம் நாடுகள் மலேஷியாவுக்கு வலை விரித்த பாக்., இந்திய குழு பயணத்தில் ருசிகரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோலாலம்பூர்:'நாமெல்லாம் முஸ்லிம் நாடுகள்; இந்திய எம்.பி.,க்கள் குழுவை சந்திக்க வேண்டாம்' என்ற பாகிஸ்தான் கூறியதை, தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியா ஏற்கவில்லை. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் முயற்சிகளுக்கு துணை நிற்பதாக, நம் எம்.பி.,க்கள் குழுவிடம் மலேஷியா உறுதிபட கூறியுள்ளது.பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைகளைத் தொடர்ந்து, இது தொடர்பாக, உலக நாடுகளுக்கு விளக்குவதற்காக, ஏழு அனைத்துக் கட்சி எம்.பி.,க்கள் குழுவை பல நாடுகளுக்கும் மத்திய அரசு அனுப்பியுள்ளது.மத்திய அமெரிக்க நாடான பனாமா, பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து, காங்கிரசைச் சேர்ந்த மூத்த எம்.பி.,யான சசி தரூர் தலைமையிலான குழு, இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தது. அதை ஏற்றுக் கொண்டு, தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, இந்தியாவின் முயற்சிகளுக்கு பனாமா ஆதரவு தெரிவித்தது.'ஜம்மு -- காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு நேர்மையான, சர்வதேச அளவிலான விசாரணை தேவை' என மலேஷியா கூறியிருந்தது. தன்னுடன் தொலைபேசியில் பேசிய, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிடமும், இந்தக் கருத்தை, மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார்.இதற்கிடையே, மலேஷியாவுக்கு, ஐக்கிய ஜனதா தளத்தில் சஞ்சய் ஜா தலைமையிலான, எம்.பி.,க்கள் குழு பயணம் மேற்கொண்டது. இதற்கிடையே, மலேஷியாவிடம் பேசிய பாகிஸ்தான் தரப்பு, 'நாமெல்லாம் முஸ்லிம் நாடுகள்; இந்திய குழுவுடன் பேச வேண்டாம். அந்தப் பயணத்தை ரத்து செய்து விடுங்கள்' என்று கூறியது.மேலும், ஜம்மு - காஷ்மீர் விவகாரம், ஐ.நா., சபையில் உள்ளதால், இந்தியக் குழுவை சந்திக்க வேண்டாம் என்றும் பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டது.ஆனால், இந்தக் கோரிக்கையை, மலேஷியா ஏற்கவில்லை. இந்தியக் குழுவை, மலேஷிய உயர் அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். அப்போது இந்தியத் தரப்பில் கூறப்பட்டதை அவர்கள் ஆமோதித்தனர்.பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பதாக, மலேஷியா வெளிப்படையாக கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ராஜா
ஜூன் 05, 2025 23:38

சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கு பல நூற்றாண்டுகளாக தமிழ் மக்கள் ஆற்றிய தொண்டுகள் எண்ணிலடங்காதது , நடுவில் போய் பாய் விரித்தால் இந்த கொடுமையை எப்படி சொல்வது, பாவம் இந்த பாகிஸ்தான்,


Easwar Kamal
ஜூன் 05, 2025 17:30

எங்களுக்குள் உங்களை போன்று ஒற்றுமை எல்லாம் கிடையாது. நங்கள் மொழியால் பிறந்து இருக்கிறோம் ஆனால் எதிரி நாடான பாக்கிஸ்தான் மதம் மூலம் இணைக்க முயில்கிறார்கள்.


ஆரூர் ரங்
ஜூன் 05, 2025 11:13

இறைதூதரின் மறைவுக்குப் பின் அவரால் சுவர்கவாசிகள் என்ற அழைக்கப்பட்ட விசுவாசிகள் ஒருவருக்கொருவர் எதிரிகளாக ஆகி பதவிச்சண்டை போட்டுக் கொண்டதாக ஒரு உரையில் கேட்டேன். சுயநலம் மதம் கடந்தது. பாக் குக்கு உதவிய துருக்கிக்கும் சுயநலமுண்டு. அப்பாவி சாமானிய மக்களே குண்டுவைத்து அடித்துக்கொண்டு சாகிறார்கள்.


James Mani
ஜூன் 05, 2025 10:25

முஸ்லிம VS ஹிந்து பாக்கிஸ்தான் Creating War between முஸ்லீம் world Bad intention


A P
ஜூன் 05, 2025 08:20

பாகிஸ்தானைப் பார்த்துக் கேட்கவேண்டும். " நீயெல்லாம் முஸ்லீம் நாடு என்றால், அங்கிருக்கிற ஒரு முஸ்லீம் கூட்டத்தை இன்னொரு முஸ்லீம் கூட்டம் குண்டு போட்டு கொல்கிறதை பார்க்கிறாயே. இதில் உன் வார்த்தையை மீறுகிறாய் என்பது உனக்குத் தெரியவில்லையா. நீ முஸ்லீம் நாடுகளுக்கு மட்டும்தான் உனது விளைபொருட்களை ஏற்றுமதி செய்கிறாயா? முஸ்லீம் அல்லாத நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவே இல்லையா? உனது முஸ்லீம் நாட்டில் இருப்பதைவிட இந்தியா போன்ற முஸ்லீம் அல்லாத நாடுகளில் முஸ்லிம்கள் நிம்மதியாக இருக்கிறார்களே? முஸ்லீம் நாடு என்றால் உன்னைப்போல் பொய்களைச் சொல்லிக்கொண்டே அரசாங்கம் நடத்துவீர்களா? பஹல்கமில் மற்ற மத ஆண்களை சுட்டுக் கொன்றது போல, அன்பும் பண்பும் ஈவும் இரக்கமும் சற்றும் இல்லாதவர்களா முஸ்லிம்கள்? இதற்க்கெல்லாம் உட்கார்ந்து யோசித்து விட்டு பேச வேண்டும் பாக்கிஸ்தான். இந்தியாவைப் பார்த்து " சிவிலியன்களை தொந்தரவு செய்யாமல், தீவிரவாதிகளை மட்டும் கொன்றது எங்களுக்கு மிக்க சந்தோஷமே " என்று ஒரே ஒரு முறை சொல்லேன் பார்ப்போம். செய்ய மாட்டாய்


Bahurudeen Ali Ahamed
ஜூன் 05, 2025 11:03

மிகச்சரியான கருத்துக்கள்


RAJ
ஜூன் 05, 2025 07:42

அப்டினா.. நீயும் கொலைகாரங்களை ரெடிபண்ணுனு மலேஷிவுக்கு புத்திமதி சொல்றியா பாக்கிஸ்?


VENKATASUBRAMANIAN
ஜூன் 05, 2025 07:34

இங்கே முட்டு கொடுக்கும் கட்சிகள் மலேஷியா வை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள். மோடியை எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு நாட்டுக்கு விரோதமாக பேசாதீர்கள். இதே மாதிரி சிங்கப்பூர் மலேஷியாவில் பேசியிருந்தால் நாடு கடத்தி இருப்பார்கள்.


Sivasankaran Kannan
ஜூன் 05, 2025 11:51

இந்த 200 ரூபாய்கள் பற்றி ஒன்றும் சொல்ல வேண்டும்.. அவர்கள் தலைமுறை அடிமைகள்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை