உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா உடனான உறவை அழிக்க அனுமதிக்க முடியாது: டிரம்புக்கு அமெரிக்க எம்பி சுளீர்

இந்தியா உடனான உறவை அழிக்க அனுமதிக்க முடியாது: டிரம்புக்கு அமெரிக்க எம்பி சுளீர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 'டிரம்பின் ஈகோ காரணமாக இந்தியா உடனான உறவை அழிக்க அனுமதிக்க முடியாது' என அமெரிக்க எம்பி ரோ கன்னா திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.அமெரிக்க எம்பியும், இந்தியா-அமெரிக்க கூட்டமைப்பின் இணை தலைவருமான ரோ கன்னா கூறியதாவது: அமெரிக்கா - இந்தியா உறவை அழிக்கும் நடவடிக்கையில் அதிபர் டிரம்ப் ஈடுபடுகிறார். அமெரிக்க- இந்தியா உறவை வலுப்படுத்த 30 ஆண்டுகளாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அதிபர் டிரம்ப் பாதிப்புக்கு உட்படுத்துகிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yxlhttql&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

ஏற்றுமதி

இந்தியா மீது அவர் 50 சதவீத வரியை விதித்து இருக்கிறார். இது, பிரேசிலை தவிர வேறு எந்த நாடு மீது விதிக்கப்படாத உயர்ந்த வரி விகிதம். சீனா மீது விதிக்கப்பட்ட வரியை விடவும் அதிகமானது. இது, அமெரிக்காவுக்கான இந்தியாவின் தோல், ஜவுளி உள்ளிட்ட ஏற்றுமதியை பாதிக்கிறது. அமெரிக்க உற்பத்தியாளர்களையும், இந்தியாவுக்கான அமெரிக்க ஏற்றுமதியையும் பாதிக்கிறது. அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கை, இந்தியாவை சீனா மற்றும் ரஷ்யாவை நோக்கியும் தள்ளுகிறது. இதற்கான காரணங்கள் மிகவும் எளிமையானவை.

டிரம்பின் ஈகோ

அதிபர் டிரம்பின் ஈகோ, இந்தியா- அமெரிக்கா உறவை அழித்துவிட அனுமதிக்க முடியாது. உலகை அமெரிக்காதான் வழிநடத்துகிறது. சீனா அல்ல என்பதை உறுதி செய்ய இது மிகவும் முக்கியம். இந்தியா உடனான உறவு அழிக்கப்படுகிறபோது, அதிபர் டிரம்புக்கு ஓட்டு போட்ட இந்திய அமெரிக்கர்களே எங்கே இருக்கிறீர்கள்? இவ்வாறு ரோ கன்னா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ragupathi
செப் 04, 2025 10:01

அடேய் கொத்தடிமை வாங்குன காசுக்கு மேல கூவுறியே. கொஞ்சமாவது சுய புத்யோட யோசி ஊ பிறப்பே.


Ramesh Sargam
செப் 04, 2025 02:48

அமெரிக்க-இந்தியா உறவு புத்துயிர் பெறவேண்டுமென்றால், அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ஈகோவை உடனே விட்டொழிக்கவேண்டும். Trumps ego should immediately go.


Tamilan
செப் 03, 2025 21:02

அனைத்துக்கும் மோடிதான் காரணம்


Shivakumar
செப் 04, 2025 03:46

ஆமாம். மோடிதான் காரணம். ஏனென்றால் அவர் உங்களை போல கொத்தடிமை இல்லை. நாட்டுக்காக உழைக்கும் ஒரு அற்புத மனிதர். உலக தலைவர்கள் இடத்தில் தனித்துவமாக தெரிபவர். எதற்காகவும் சரசம் செய்து கொள்ளாத மனிதர். இந்த இக்கட்டான சமயத்தில் கூட விவசாய மக்களுக்காக கூட நிற்பவர். எனவே இந்த அனைத்துக்கும் மோடி என்ற மாமனிதர் தான் காரணம்


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 04, 2025 07:58

ஆமாம் ஆமாம் நன்றாக சொன்னீர்கள் மோடி இல்லை என்றால் இந்தியா எப்படி உலக பொருளாதாரத்தில் ஐந்தாமிடம் வந்திருக்கும். இந்தியாவை அடக்கிஆண்ட இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னேறியுள்ளது. இது சுதந்திரத்தின் போது உண்மையான சுதந்திர போராட்ட வீரர்கள் எடுத்த இலட்சியம். இடையில் நேரு அவர்களுடைய குடும்பத்தார்களால் இந்த இலட்சியம் நிறைவேறாமல் இருந்தது. தற்போது மோடி என்னும் மாமனிதனால் இந்த இலட்சியம் நிறைவேறியுள்ளது. இது தொடரும் 2047ல் அமெரிக்காவை விட இந்திய பொருளாதாரம் உயர்ந்து நிற்கும் இதுவே இப்போதைய புதிய இலட்சியம்.


M Ramachandran
செப் 03, 2025 20:42

ரவுசு தான் முனீராகமது உடன் சேர்ந்ததாள் ஈன புத்தி ட்ரம்பிற்கும் வந்துடிச்சி.இப்போர் முனகி செய்வது.


Moorthy
செப் 03, 2025 20:15

அமெரிக்க எதிர்கட்சி எம்பி இவர்


Artist
செப் 03, 2025 20:33

நம்ம இன்னா நாற்பது மாதிரி ?


Barakat Ali
செப் 03, 2025 22:49

இருந்தாலும் எதிர்க்கருத்துக்கள் அங்கே முக்கியத்துவம் பெறுகின்றன .....


சமீபத்திய செய்தி