உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை; ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் பற்றி அமெரிக்கா விளக்கம்

எங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை; ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் பற்றி அமெரிக்கா விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.காசாவைச் சேர்ந்த ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக தாக்குதல் நடத்தி வந்த ஈரான் மீது 'ஆபரேசன் ரைஸிங் லயன்' என்ற பெயரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக அணுசக்தி நிலையங்களை குறிவைத்து சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதலில் ஈரான் துணை ராணுவப் படை தளபதி ஹுசைன் சலாமி உயிரிழந்தார். இதனால், மத்திய கிழக்கு நாடுகளிடையே பதற்றம் நிலவி வருகிறது. ஈரானின் அணுசக்தி திட்டத்தின் மையப் பகுதியை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும், இஸ்ரேலுக்கு ஈரான் விடுத்த அச்சுறுத்தல் நீங்கும் வரை தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இதனிடையே, ஈரான் மீது இஸ்ரேல் நடத்தும் இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியதாவது; ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ளது. இந்த தாக்குதலுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க படைகளின் பாதுகாப்பு பற்றியே எங்களின் கவலை உள்ளது. அமெரிக்க நிலைகளையோ, அமெரிக்க படைகளையோ ஈரான் இலக்காக வைக்கக் கூடாது. தங்களின் பாதுகாப்புக்காகவே இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவிடம் இஸ்ரேல் தெரிவித்துள்ளது, இவ்வாறு கூறினார். அதேபோல, ஐ.நா., கூறியிருப்பதாவது; மத்திய கிழக்கு நாடுகளில் ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கு ஐ.நா.,பொதுச்செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்கா - ஈரான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருப்பது கவலையளிக்கிறது. ஐ.நா.,வின் சர்வதேச சட்டதிட்டங்களை உறுப்பு நாடுகள் கடைபிடிக்க வேண்டும். இருதரப்பினரும் தீவிர தாக்குதலை கைவிட வேண்டும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

RAJ
ஜூன் 13, 2025 13:43

என்னமா புளுகரன்.. ... உனக்கு சிப்பு வர்ல சிப்புபு.. ..


Ramesh Sargam
ஜூன் 13, 2025 12:56

நாங்கள் கேட்டோமா...? தொடர்பு இருக்கிறதா இல்லையா என்று நாங்கள் கேட்டோமா...?


மீனவ நண்பன்
ஜூன் 13, 2025 12:53

ஈரானில் ஆட்சி மாற்றம் வரவேண்டும் .


Elango
ஜூன் 15, 2025 10:20

நீங்கள் முயற்சி செய்யவும்


Nagarajan D
ஜூன் 13, 2025 12:01

ஐ நா ஒரு உருப்படாத அமைப்பு.. ஏண்டா இஸ்லாமிய தீவிரவாதம் உலகம் முழுவதும் அட்டகாசம் செய்து வருகிறதே அதை என்றாவது நீங்க எதிர்த்து குரல் குடுத்திருக்கீங்களா? பாகிஸ்தான் உலகின் தீவிரவாத தலைநகரமாக உள்ளது அவனுங்க பாரதத்தின் மேல் மீண்டும் மீண்டும் தீவிரவாதிகளை ஏவி கொலை செய்து வரானுங்க அதை என்றாவது கண்டித்திருக்கீங்களாடா? அதே பாகிஸ்தானுக்கு IMF கடன் வழங்குவதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? அதையும் உங்க அமெரிக்கா கைக்கூலி கூட்டம் தடக்கமுடியல அப்பறமா எதுக்கு ஒரு தாண்ட அமைப்பு... இராணியனுங்களும் இஸ்லாமியனுங்களும் கொலை செய்வதை தடுக்கமுடியாது ஒரு டப்பா கோஷ்ட்டி உங்களது... எவனும் அதற்க்கு மதிப்பளிப்பதில்லை. அதை அழித்துவிட்டு வேறு ஒரு அமைப்பை நிறுவவேண்டிய காலம் வந்துவிட்டது...


M Ramachandran
ஜூன் 13, 2025 11:51

அப்பன் குதிருக்குள் இல்லெ என்ற கதை தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை