உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சட்டவிரோதமாக குடியேறுவதை எதிர்க்கிறோம்: ஜெய்சங்கர் உறுதி

சட்டவிரோதமாக குடியேறுவதை எதிர்க்கிறோம்: ஜெய்சங்கர் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: '' சட்டவிரோத குடியேற்றத்தை நாங்கள் மிகவும் கடுமையாக எதிர்க்கிறோம்,'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.வாஷிங்டனில் நிருபர்களைச் சந்தித்த ஜெய்சங்கர் கூறியதாவது: அமெரிக்காவில் சட்டவிரோதமாக இந்தியர்கள் குடியிருந்தால், அவர்கள் இந்தியர்கள் என்பது உறுதியானால், அவர்கள் சட்டப்பூர்வமாக இந்தியா திரும்புவதற்கு எங்களின் கதவுகள் திறந்தே உள்ளன. இந்தக் கருத்தில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இந்த நிலைப்பாடு அமெரிக்காவிற்கு மட்டும் பிரேத்யகமானது அல்ல.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y9t5vs1f&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஒரு நாட்டில் சட்டவிரோதமாக குடியேறுவதை இந்தியா எதிர்க்கிறது. இது நல்லது அல்ல. இது பல விதமான சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு உதவும். ஒரு அரசாக உலகளாவிய பணி சூழலை ஆதரிக்கிறோம். இதனால், சட்டப்படி குடியேறுவதை நாங்கள் ஆதரிக்கிறோம். சர்வதேச அளவில் இந்தியர்களின் திறன்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.அதேநேரத்தில், சட்டவிரோத குடியேற்றத்தை நாங்கள் மிகவும் கடுமையாக எதிர்க்கிறோம். சட்டவிரோதமாக ஒன்று நடக்கும் போது, அதில், பல சட்ட விரோத நடவடிக்கைகள் இணைகின்றன. இது ஏற்புடையது அல்ல. இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
ஜன 23, 2025 17:59

ஹி..ஹி.. 1600 களில் 13 மில்லியன் அமெரிக்க இந்தியர்களை அதான் பழங்குடிகளை கொன்று குவிச்சு உருவானதுதான் இன்றைய அமெரிக்கா. அவிங்கதான் இந்தியாவில் மீண்டும் பிறந்து அங்கே குடியேறுகிறார்களோ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை