உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / துணை முதல்வர் சிவக்குமாருக்கு வாழ்த்து; வஞ்சப்புகழ்ச்சியில் சொன்னார் அண்ணாமலை!

துணை முதல்வர் சிவக்குமாருக்கு வாழ்த்து; வஞ்சப்புகழ்ச்சியில் சொன்னார் அண்ணாமலை!

சென்னை: கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமாருக்கு, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, வஞ்சப்புகழ்ச்சியில் வாழ்த்து தெரிவித்தார்.தொகுதி மறு வரையறை தொடர்பாக தி.மு.க., இன்று (மார்ச் 22) சென்னையில் நடத்தும் கூட்டு நடவடிக்கை கூட்டத்தில் பங்கேற்க பஞ்சாப், கேரளா, தெலுங்கானா முதல்வர்கள் வந்தனர். கூட்டத்தில் பங்கேற்க கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமாரும் வந்திருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1rdyyvmc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

கூட்டாட்சி முறை

சென்னை விமான நிலையத்தில் கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார் கூறியதாவது: தொகுதி மறு வரையறை விவகாரத்தில், முதல் அடியை எடுத்து வைத்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினை பாராட்டுகிறேன். அவர், இந்திய நாட்டின் அரசியல் அமைப்பையும், கூட்டாட்சி முறையையும் பாதுகாக்க மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்காக பெருமைப்படுகிறேன்.இது ஒரு துவக்கம் மட்டுமே.

கருப்புக் கொடி

நமது தொகுதிகள் குறைக்கப்படுவதை என்ன விலை கொடுத்தேனும் தடுப்போம். பொருளாதார ரீதியாகவும், கல்வியிலும் நாம் வேகமாக முன்னேறி உள்ளோம். ஒற்றுமையாய் இருந்து நமது தொகுதிகள் எதுவும் குறைக்கப்படாமல் பாதுகாப்போம். பா.ஜ., கட்சியினர் கருப்புக் கொடி காட்டுவதை வரவேற்கிறேன். அவர்கள் என்னை திகார் சிறைக்கு அனுப்பினாலும் பயப்பட மாட்டேன். இவ்வாறு சிவகுமார் கூறினார்.சிவக்குமார் வருகை எதிர்த்து பா.ஜ., நடத்திய கருப்புக்கொடி போராட்டம் பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். ''அண்ணாமலைக்கு என் பலம் என்னவென்று தெரியும். அவர் கர்நாடகாவில் பணியாற்றியவர் தான். அவர், அவரது வேலையை செய்யட்டும். அவருக்கு என் வாழ்த்துக்கள்,'' என்று துணை முதல்வர் சிவக்குமார் கூறினார்.

அண்ணாமலை பதிலடி

இதற்கு பதில் அளிக்கும் வகையில் பதிவிட்ட பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ''எனக்கு வாழ்த்து கூறிய உங்களுக்கு மிகுந்த நன்றி. சித்தராமையாவை கவிழ்த்து விட்டு கர்நாடகா முதல்வராக முயற்சிக்கும் உங்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்,'' என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

Cyril Retchakar
மார் 23, 2025 12:12

ANNAMALAI, reply to Sivakumar, Shows his inmaturity


ராஜேஷ்
மார் 23, 2025 05:32

அண்ணாமலை அதிகாரியாக இருந்தபோது. இந்த சிவக்குமார் accused டாக இருந்தவர்


Venugopal, S
மார் 22, 2025 22:37

என்னது பலமா...? total வேஸ்ட். உன்னை ஆப்பு அடித்து துணை அப்டின்னு ஒக்காந்து இருக்க சொல்லிடாங்க. நீயும் இத்தாலி அடிமை. நீ கடைசி வரை இப்படி யே இருக்க வேண்டும்


Balasubramanian
மார் 22, 2025 17:52

சிவகுமாரின் பலம் பண பலம், அண்ணாமலை பலம் மக்கள் பலம்! மக்கள் துட்டுக்கு மயங்காத வரை ஜன நாயகம் வெல்லும்


Vijay
மார் 22, 2025 16:23

திமுக வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு. அதை விட கேடு அதற்கு முட்டு கொடுக்கும் மதத்தை தாண்டி சிறுபான்மையினர், தங்கள் குடும்ப நலனை மட்டுமே யோசிக்கும் அரசு ஊழியர்கள், சூடு சுரணை இல்லாத ஹிந்துக்கள், மற்றும் குடிக்கும் - இலவசத்துக்கும் தங்கள் ஓட்டை விற்கும் கும்பல்.


Mediagoons
மார் 22, 2025 15:13

பயத்தில் அண்ணாமலை கதறுகிறார்


Mediagoons
மார் 22, 2025 15:12

இணைக்கும் கோணைக்கும் முடிச்சு போடுவானேன்


Mediagoons
மார் 22, 2025 15:12

முன்னாள் கன்னடா பாஜா முதல்வருக்கு காவடி தூக்கிய அண்ணாமலை இப்படி அழுவது ஏன்?


பெரிய ராசு
மார் 22, 2025 13:33

உன்னைய எவர் கேட்டாங்க கூறுகெட்ட குக்கரு


Venkataraman
மார் 22, 2025 12:36

தொகுதிகளை பறிக்கப்போவதாக யார் சொன்னார்கள்? மத்திய அரசு எப்போதும் இதை பற்றி பேசவில்லை. அடுத்த ஆண்டு நடக்கப்போகும் மக்கள்தொகை கணிப்பு வேலை முடிந்த பிறகு இதுபற்றி ஆலோசிக்கப்படும் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்துக்கொண்டு வேண்டாத வீண் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். சுய விளம்பரத்துக்காக மக்களுடைய வரிப்பணத்தை வீணடித்து நாடகமாடுகிறார்கள்


புதிய வீடியோ