உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்த சீனாவுடன் இணைந்து செயல்படுவோம்: ரஷ்ய அதிபர் புடின்

பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்த சீனாவுடன் இணைந்து செயல்படுவோம்: ரஷ்ய அதிபர் புடின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தியான்ஜின்: ''ரஷ்யாவும், சீனாவும் பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்துவதில் ஒன்றுபட்டுள்ளன'' என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்தார்.சீனாவின் தியான்ஜின் நகரில் 25வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு துவங்கியது. இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடின் பங்கேற்றுள்ளார். முன்னதாக, புடின் கூறியதாவது: பிரிக்ஸ் அமைப்பு உலகளாவிய அளவில் முக்கிய அமைப்பு வகிக்கிறது. உலகளாவிய நிதி நிறுவனங்களில் சீர்திருத்தங்களை ஆதரிப்பதிலும் பிரிக்ஸ் அமைப்பு செயல்பட்டு வருகிறது.சீனாவுடன் நாங்கள் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். ரஷ்யாவும், சீனாவும் பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்துவதில் ஒன்றுபட்டுள்ளன. உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளவும், சர்வதேச பாதுகாப்பு குறித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும், பொருளாதார வளர்ச்சியை தடுக்கும் பாரபட்சமான தடைகளுக்கு எதிராக பொதுவான நிலைப்பாட்டை எடுக்கவும், பிரிக்ஸ் நாடுகளின் திறனை வலுப்படுத்துவதில் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம். சீனாவுடன் இணைந்து சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் சீர்திருத்தத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். அனைத்து மனித குலத்தின் நலனுக்காகவும், முன்னேற்றத்தை நாங்கள் நாடுகிறோம். இவ்வாறு ரஷ்ய அதிபர் புடின் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ManiMurugan Murugan
ஆக 31, 2025 23:11

ManiMurugan Murugan அருமை வரவேற்கிறேன்


Ramesh Sargam
ஆக 31, 2025 10:23

இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா ஒன்றிணைந்தால், த்ரும்ப் தானாகவே வழிக்கு வருவார்.


Tamilan
ஆக 31, 2025 09:02

இந்தியாவுடன் இணைய மறுத்துவிட்டார்


vivek
ஆக 31, 2025 11:11

இருநூறு வாங்கிவிட்டார்


முக்கிய வீடியோ