உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சரித்திரம் படைத்த சுனிதா.. இனி அடுத்தது என்ன; வெளியான சுவாரஸ்ய தகவல்

சரித்திரம் படைத்த சுனிதா.. இனி அடுத்தது என்ன; வெளியான சுவாரஸ்ய தகவல்

வாஷிங்டன்; விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பியுள்ள சுனிதா வில்லியம்சின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி உள்ளன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=02bm4fv5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் 9 மாதங்களாக இருந்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இந்திய நேரப்படி இன்று அதிகாலையில் பூமிக்கு திரும்பினர். அவர்களை சுமந்து வந்த டிராகன் விண்கலம், புளோரிடா அருகே கடலில் பாதுகாப்பாக தரையிறங்கியது. அவர்களின் விண்வெளி பயணம் வெற்றிக்கரமாக முடிந்து, பூமிக்கு திரும்பி உள்ளதை உலகமே கொண்டாடி வருகிறது. இந் நிலையில், 9 மாதங்கள் கழித்து பூமியில் கால் வைத்துள்ள சுனிதா வில்லியம்சின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது பற்றிய சுவாரசியமான தகவல்கள் வெளியாகி உள்ளன.முதல்கட்டமாக, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் முழுமையாக நடத்தப்படும். விண்வெளியில் இருந்து திரும்பியவர்களுக்கு பூமியில் நிமிர்ந்து நிற்கும் போது தலைசுற்றல், மயக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதே அதற்கு காரணம். எடை இழப்பு, கண் பார்வை, தோல் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், முழு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். அதற்காக அவர்கள் 45 நாட்கள் நாசா மையத்தில் சிகிச்சை அளிக்கப்படும்.உடலும், மனமும் புத்துணர்வு பெற இந்த சிகிச்சை உதவும். இந்த சிகிச்சைகள் சுனிதா வில்லியம்சுக்கும் பொருந்தும். இது குறித்து ஹுஸ்டன் விண்வெளி மையத்தின் ஜான்சன் கூறியதாவது: விண்வெளி வீரர்கள் நாசாவுக்கு முதலில் அனுப்பப்படுவார்கள். அங்கு சில நாட்கள் அவர்கள் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள். அதன் பிறகே குடும்பத்துடன் இணைவார்கள் என்றார்.மருத்துவக் கண்காணிப்புக்கு பின்னர், சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் தங்களின் விண்வெளி பயணம் எப்படி இருந்தது, சந்தித்த சவால்கள் என்ன என்பதை பற்றிய அனுபவங்களை விண்வெளி மையத்தில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்வார்கள். இந்த அனைத்து நடவடிக்கைகளுக்கு பின்னரே சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் தங்கள் குடும்பத்தினருடன் இணைவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Subramanian
மார் 19, 2025 15:59

வாழ்த்துகள்


sundarsvpr
மார் 19, 2025 11:36

சுனிதா அவர்கள் அறிக்கையை பொறுத்துதான் சாதனையை விமர்சிக்கவேண்டும். அவரின் மன உறுதியை பாராட்டவேண்டும். அவரின்தினசரி நடவடிக்கையை வைத்துதான் விமர்சனம் செய்வது சரியாய் இருக்கும். காட்டில் தவம் செய்வதை ஒப்பிட்டு இவர் செய்கையை ஆராயவேண்டும்.


Gopi
மார் 19, 2025 10:38

செவ்வாய் கிரகத்திற்கு செல்ல வேண்டுமானால் குறைந்தது பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் குறைந்த பட்ச தூரம் எட்டுவது 26 மாதங்களுக்கு ஒருமுறை ஆறுமாதம் முதல் ஒன்பது மாத பயண தூரம். இதற்காகவே இவர்கள் அங்கு கிடத்தப்பட்டார்களா என்பது பின்னர் வெளிவரும்


THOMAS LEO
மார் 19, 2025 10:12

THANK GOD. SHE LAND SAFELY.


vee srikanth
மார் 19, 2025 10:10

ஊழல்வாதிகளை - இது மாதிரி வான் வெளியில் விட்டு விட வேண்டும் -சாப்பாடு - தண்ணீர் எதுவும் தர வேண்டாம் - sapcex இதற்க்கு உதவவேண்டும்


Naga Subramanian
மார் 19, 2025 09:57

உக்ரேனிலேர்ந்து திராவிஷ மாடல் எப்படி மாணவர்களை அழைத்து வந்ததோ, சுனிதா வில்லியம்சயும் அழைத்து வந்து விட்டது. எல்லாம் பெரியாரினால்தான் நடந்தது. புரிந்தால் சரி


SP
மார் 19, 2025 09:44

எப்படியோ கடவுள் அருளால் நல்லபடியாக திரும்பி வந்து விட்டார்கள் கடவுளுக்கு நன்றி


M R Radha
மார் 19, 2025 09:42

முதல்ல உடல் பரிசோதனை அடுத்து பிசினஸ் அப்புறம் குடும்பம். ஆனால் த்ரவிஷ் முதல்ல குடும்பம் அப்புறம் ஊழலோ ஊழல் அடுத்து வாரிசுகளை நுழைப்பது பிறகு ஊழல் பணத்தை பாரினில் டூர் போவது போல் சென்று அங்கு பதுக்குவது


mohan v
மார் 19, 2025 09:42

எப்படியோ பத்திரமாக வந்து சேர்ந்துவிட்டார். இனி உடல் நலம் தேறி நல்ல ஆரோக்யத்துடன் நீண்ட நாட்கள் வாழ இறைவனை பிரார்த்திப்போம்.


W W
மார் 19, 2025 09:34

அனைவருக்கும் வாழ்த்துக்கள், எல்லோருக்கும் வாழ்த்துக்கள் , God is with you, Remarkable, Great Achievement for all the Team involved. Thank God .


முக்கிய வீடியோ