உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்புவதில் வருகிறது புதிய வசதி... விரைவில் அறிமுகம்

வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்புவதில் வருகிறது புதிய வசதி... விரைவில் அறிமுகம்

புதுடில்லி: குறிப்பிட்ட தேதி, நேரத்தில் தானாகவே மெசேஜ்களை அனுப்பும் புதிய வசதிகளை வாட்ஸ் அப் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் மெசேஜ் செயலிகளில் வாட்ஸ்அப் முதன்மையானது. இது பயனாளர்களின் தேவைக்கு ஏற்ப, ஒவ்வொரு அம்சங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது, பயனர்கள் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் செய்திகளை அனுப்பும் வகையில் புதிய அம்சத்தை வாட்ஸ்அப் பரிசோதித்து வருகிறது. இதன் மூலம் டெக்ஸ்ட், லிங்க்குகள், போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் அனுப்பாமல், தங்களுக்கு வேண்டிய நேரத்தில் திட்டமிட்டு அனுப்பிக் கொள்ளலாம்.வாட்ஸ்அப்பில் மெசேஜை தயார் செய்துவிட்டு, சென்ட் பட்டனை அழுத்திப் பிடிப்பதன் மூலம், டெலிவரி செய்யப்படும் தேதி மற்றும் நேரத்தைத் தேர்வு செய்யும் ஆப்சன் தோன்றும். பயனர்கள் ஒரு நேரத்தில் ஒரு போட்டோ அல்லது வீடியோவை மட்டுமே அனுப்ப முடியும். திட்டமிடுவதற்கு முன்பு டிராயிங் எடிட்டர் மூலம் படத்தைத் திருத்தவோ அல்லது தலைப்பை சேர்க்கவோ முடியும். மேலும், 10 நிமிடங்கள் முன்பு தொடங்கி இரண்டு வாரங்களுக்கு முன்கூட்டியே செய்திகளை அனுப்ப திட்டமிடலாம். மெசேஜ்களை அனுப்பப்படுவதற்கு முன்பு அவற்றை பயனர்கள் ஒருமுறை பார்த்து நீக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. அப்படி மெசேஜை நீக்கிவிட்டாலும், பெறுநருக்கு எந்த அறிவிப்பும் செல்லாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Perumal Pillai
அக் 14, 2026 16:15

ஏர்டெல், ஜியோ போன்றவைகள் மாதம்தோறும் தங்கள் ப்ரீபெய்ட் பேக்கஜ் ல் 100 அல்லது அன்லிமிடெட் SMS வழங்குவதாக மக்களை ஏமாற்றுகின்றன. இந்த காலத்தில் யாரும் SMS கள் உபயோகிப்பதில்லை.


Subramanian
அக் 14, 2026 20:17

OTP SMS ல் தான் வரும். ஆதலால் SMS -ம் தேவை


Ganesh
அக் 14, 2026 20:29

தங்களுக்கு வங்கிகள் அனுப்புகின்ற செய்திகள் அனைத்தும் எஸ்எம்எஸ் வழியாக தான் இன்றும் பரிமாறப்படுகின்றன, எவ்வாறு எஸ்எம்எஸ் பயன்பாடு இல்லை என்று நீங்கள் கூற முடியும்?


S Kalyanaraman
அக் 14, 2026 21:19

இன்னும் நிறைய பேர் பட்டன் போன் உபயோகிக்கிறார்கள். அதெப்படி யாருமே எஸ் ரம் எஸ் உபயோகிப்பது இல்லை என்று சொக்கிறீர்கள்?


ஆரூர் ரங்
அக் 15, 2026 11:26

OTP க்க‌ள் SMS இல் தான் வருகின்றன. அதனால்தான் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் SMS க்கு கட்டணம் வசூலிக்கின்றன.


bharathi
அக் 14, 2026 15:43

OMG dont know how many good morning message I receive everyday


SANKAR
அக் 14, 2026 15:04

Superb .And all over the world it is free.Only basic data pack from service provider needed.those seniors mostly spending time at home can use wifi.