உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலகை வெல்லுமா இந்தியா... தென் ஆப்ரிக்காவுடன் இன்று பைனல்

உலகை வெல்லுமா இந்தியா... தென் ஆப்ரிக்காவுடன் இன்று பைனல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிரிட்ஜ்டவுன்: 'டி-20' உலக கோப்பை பைனலில் இன்று(ஜூன் 29) இந்தியா, தென் ஆப்ரிக்கா மோதுகின்றன. இதில், இந்திய அணி அசத்தும் பட்சத்தில் இரண்டாவது முறையாக கோப்பை கைப்பற்றலாம்.வெஸ்ட் இண்டீசில் 9வது 'டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. 'நடப்பு சாம்பியன்' இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட முன்னணி அணிகள் வெளியேறின. இன்று பார்படாசின் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் பைனலில் இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ரோகித் தலைமை

இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வென்ற உற்சாகத்தில் களமிறங்குகிறது. கடந்த 12 மாதங்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2023), 50 ஓவர் உலக கோப்பை (2023), தற்போது 'டி-20' உலக கோப்பை என மூன்று 'உலக' பைனலில் அணியை வழிநடத்தும் முதல் இந்திய கேப்டன் என்ற பெருமை பெறுகிறார் ரோகித் சர்மா. 7 போட்டிகளில் 248 ரன் குவித்துள்ள இவர், நல்ல துவக்கம் தர வேண்டும். அனுபவ கோலி (7 போட்டி, 75 ரன்) தடுமாறுகிறார். இன்று விளாசினால் நல்லது. ரிஷாப் பன்ட் அவசரப்படக்கூடாது. சூர்யகுமார், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரவிந்திர ஜடேஜா என பேட்டிங் படை வலுவாக உள்ளது.'வேகத்தில்' பும்ரா (13 விக்கெட்), அர்ஷ்தீப் (15) மிரட்டுகின்றனர். பாண்ட்யா ரன்களை கட்டுப்படுத்த வேண்டும். 'சுழலில்' அக்சர், குல்தீப், ஜடேஜா கைகொடுக்கின்றனர்.

'வேகம்' பலம்

தென் ஆப்ரிக்காவும் அசைக்க முடியாத அணியாக திகழ்கிறது. ஐ.சி.சி., 'நாக்-அவுட்' போட்டிகளில் சொதப்புவதால், 'சோக்கர்ஸ்' என கேலி செய்தனர். இம்முறை அபாரமாக செயல்பட்டு, விமர்சனங்களை தகர்த்தது.குயின்டன், ஹென்ட்ரிக்ஸ், கேப்டன் மார்க்ரம், கிளாசன், மில்லர், ஸ்டப்ஸ் என சிறந்த பேட்டர்கள் உள்ளனர். 'வேகத்தில்' ரபாடா, யான்சென், நோர்க்யா மிரட்டலாம். மஹாராஜ், ஷம்சி 'சுழலை' இந்திய வீரர்கள் எளிதில் சமாளிப்பது உறுதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

rajkiran
ஜூன் 30, 2024 01:28

என்ன உலக யுத்தமா நடக்குது இது மாதிரி தலைப்பை தவிர்க்கவும் கோப்பை வெல்லுமா இது தலைப்பு


Vikram
ஜூன் 30, 2024 01:25

உலகை எப்படி வெல்ல முடியும் கிரிக்கெட்டில் வெல்லலாம் அவ்வளவுதான்


Narasimhan
ஜூன் 29, 2024 15:09

கோழி முட்டை போடுவார்


Murali Krishnan
ஜூன் 29, 2024 14:14

விளையாடுவதற்கு முன்னால் போட்டியின் முடிவுவை அருமையாக தெரிவித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள். நமது இந்திய அணி எப்பொழுதும் அனைத்து போட்டியில் வெற்றிக் கொண்டு, இறுதியில் தோற்று நமது மனதையும் கலங்கி விடுவார்கள், என்ன செய்ய இதை இன்று தவிர்ப்பார்களா


ديفيد رافائيل
ஜூன் 29, 2024 11:21

India ஜெயிக்க வாய்ப்பே இல்லை.


subramanian
ஜூன் 29, 2024 15:07

இந்தியர்களோடு வாழ முடியாது என்றுதானே நாட்டை பிரித்தீர்கள்? எதற்கு இங்கு இருக்கிறாய்?


Apposthalan samlin
ஜூன் 29, 2024 10:59

எல்லாம் ஜெயித்து பைனல் இல் தோர்பர்கள் இன்னைக்கு எப்படியோ ?


Sampath Kumar
ஜூன் 29, 2024 10:03

உலகை எல்லாம் வெல்லாது


Duruvesan
ஜூன் 29, 2024 09:38

கோலி அரை சதம் போடுவாரா?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை