உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / விமானத்தில் நாயை அழைத்து செல்ல அனுமதி மறுப்பு; விரக்தியில் பெண் செய்த கொடூர செயல்!

விமானத்தில் நாயை அழைத்து செல்ல அனுமதி மறுப்பு; விரக்தியில் பெண் செய்த கொடூர செயல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: புளோரிடா ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் குளியலறையில், இறந்த நாய் உடல் கண்டெடுக்கப்பட்டது. விசாரணை நடத்திய போலீசார், நாயை தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை செய்த பயணியை கைது செய்தனர்.புளோரிடாவில் உள்ள ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்திற்கு 57 வயதான அலிசன் லாரன்ஸ், தனது நாய் டைவின்னுடன் வந்தார். அவர் கொலம்பியாவுக்கு விமானத்தில் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தார். ஆனால் அவரது செல்லப்பிராணிக்கு (நாய்) உரிய பயண ஆவணங்கள் ஏதும் இல்லை. இதனால் விமானத்தில் செல்லப்பிராணியுடன் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இந்த சம்பவம் கடந்த டிசம்பர் 16ம் தேதி நடந்துள்ளது.பின்னர் அந்த பெண் நாயை விமான நிலைய குளியலறையில் தண்ணீரில் மூழ்கடித்து கொன்றுள்ளார். நாயின் உடலை பிளாஸ்டிக் பையில் போட்டுவிட்டு கிளம்பி உள்ளார். பின்னர் அவர், திட்டமிட்டப்படி கொலம்பியாவுக்கு விமானத்தில் சென்று விட்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு, விமான நிலைய ஊழியர் ஒருவர் பெண்கள் கழிப்பறையில் இறந்த நாயைக் கண்டுபிடித்தார். இந்த தகவல் விமான நிலைய உயர் அதிகாரிகள் வரை சென்றது. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். விசாரணையில் நாய் நீரில் மூழ்கி இறந்தது உறுதி செய்யப்பட்டது. நாயை மூழ்கடித்துக் கொன்ற அலிசன் லாரன்ஸை போலீசார் கைது செய்தனர். அவர் மீது விலங்குகளை கொடுமைப்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் 5,000 ஆயிரம் டாலர்கள் அபராதம் செலுத்திய பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.இந்த சம்பவம் குறித்த செய்தி சமூக ஊடகங்களில் பார்த்த மக்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். பல பயனர்கள் இந்த செயலை கொடூரமானது என்று கூறி கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kasimani Baskaran
மார் 22, 2025 10:44

தான் வளர்த்த நாயையே கொல்ல எப்படித்தான் மனது வந்ததோ தெரியவில்லை.


Rajathi Rajan
மார் 22, 2025 11:11

அவள் நமது மலரின் வாசகி, மனு வர்மத்தின் தாய், சனாதனின் தாய். அவள் அப்படி தான் இருப்பாள்??


வாய்மையே வெல்லும்
மார் 22, 2025 09:31

இந்த சம்பவம் குறித்த செய்தி சமூக ஊடகங்களில் பார்த்த மக்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். பல பயனர்கள் இந்த செயலை கொடூரமானது என்று கூறி கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்>> இப்படி சொல்லுபவர்கள் தான் தினமும் சிக்கன் மட்டன் பசுவதை செய்து உண்பவர்கள் என்றால் உங்களுக்கு விஜயகாந்த் சினிமாவில் சிவந்த கண்கள் இருக்குமே அதே மாதிரி ஆக்ரோஷமா வருமே.. ஹாஹாஹா.. எந்த ஜீவனை கொல்லவும் நமக்கு அதிகாரம் கிடையாது ..அது க்ரூர பிராணி நம்மை தாக்க வருவது என்றால் உயிரை காத்துக்கொள்ள தற்காப்பு எடுத்துக்கொள்ளலாம் , மற்றபடி தெரிஞ்சே தப்பு செய்வது ... மனித ஜாதி இல்லை .... உடனே கம்பு சுற்றி கொண்டு எழுதவேணாம் .. பதிவு பிடிக்கலையா. கடந்து போய்விடுங்கள்... அப்படியே பிரசுரிக்கவும்


R Ravikumar
மார் 22, 2025 11:44

அய்யா .. வாய்மை வெல்லும் ? அரிசி காய்கறி சாப்பிடுவீங்களா ? அது எல்லாம் உயிர் இல்லையா ? சோறு உருட்டி திங்கும்போது மட்டும் உங்க மூளை பின்னாடி போய்டுமா ? எதோ சைவ மக்கள் எதோ தெய்வ அம்சம் மாதிரியும் , அசைவ மக்கள் பாவிகள் மாதிரி எப்படி கூச்சம் இல்லாமல் உங்களால் நினைக்க முடிகிறது ? என் பசிக்கு போக மீதம் இருக்கும் மீனையும் , கோழியையும் இரக்கத்துடன் விட்டு விடுகிறேன் . அவ்வளவுதான் . இதற்கும் நாயை கொன்றதற்கு எப்படி முடிச்சு போடுகிறீர்கள் ? மூளையை மறுபடி எடுத்து துடைத்து தலையில் வைத்து கொள்ளுங்கள் .


sundarsvpr
மார் 22, 2025 08:38

பள்ளி கல்வி முறையில் மாற்றம் தேவை. முதலில் அரசு கட்டுப்பாட்டிலிருந்து கல்வித்துறை விடுவிக்கவேண்டும். பள்ளியில் இரண்டு வகுப்பு அவசியம். இதில் தேர்ச்சி தேவை. உடல் பயிற்சி moral வகுப்பு பாடம். இரண்டு பிரிவி ஆசிரியர்கள் நேர்மையானவர் திறமையானவர்களாக இருத்தல் அவசியம். moral வகுப்பில் காருண்ய வகுப்பு மிக முக்கியம்.


புதிய வீடியோ