உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தீபாவளி வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்கள்

தீபாவளி வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரிட்டன் பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. புத்தாடை உடுத்தியும், நண்பர்களுக்கு இனிப்புகளை வழங்கி வீடுகளில் விளக்கு ஏற்றி மக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகத் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்:

பிரிட்டனில் வசிக்கும் ஹிந்துக்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் அமைதியான தீபாவளி வாழ்த்துகள். இம்மாத துவக்கத்தில் நான் மும்பையில் பக்தி, மகிழ்ச்சி மற்றும் புதுப்பிக்கப்பட்ட பிணைப்புகளின் அடையாளமாக தீபம் ஏற்றினேன். இந்த தீபத் திருநாளை கொண்டாடும் வேளையில், அனைவரும் நம்பிக்கையுடன் முன்னோக்கிப் பார்க்கக்கூடிய பிரிட்டனை கட்டமைப்போம்.https://x.com/Keir_Starmer/status/1980201980392792166

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்

இருளின் மீது ஒளி மேலோங்குகிறது. பயத்தின் மீது நம்பிக்கை மேலோங்குகிறது. தீபாவளியைக் கொண்டாடும் வேளையில், நம் வீடுகளை நிரப்பும் ஒளியை மட்டுமின்றி நம் இதயங்களில் அது கொண்டுள்ள பொருளையும் நாம் கொண்டாடுகிறோம். அனைவருக்கும் ஒளிமயமான மற்றும் அர்த்தமுள்ள ஒளித்திருவிழா வாழ்த்துகள்https://x.com/LawrenceWongST/status/1979868332905160988

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ்

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். ஒளிக்கான விழாவை கொண்டாட ஒன்று சேரும் நேரத்தில் உங்களின் எதிர்காலம் சிறப்பாக அமைவதற்கான நம்பிக்கை மேலோங்கட்டும். இந்த பண்டிகை மிகச்சிறப்பான பண்டிகை .https://x.com/AlboMP/status/1980020987480650176

மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம்

ஒளித்திருநாளான தீபாவளி திருநாள், வாழ்க்கையில் இருள் என்னும் தீமைகள் யாவும் நீங்கி நன்மைகள் சூழும் ஒளித் திருநாளாகவும் அமைந்துள்ளது. பல்வேறு கலாச்சாரப் பண்பாடுகளையும் நம்பிக்கைகளையும் கொண்ட வளமான குடிமக்கள் எனும் அடிப்படையில், ஒருவரை ஒருவர் மதிக்கும் மனப்பாங்கு, பரஸ்பரப் புரிதல், மிதமான போக்கு அனைத்தையும் மேலும் வலுப்படுத்துவதை நாம் அனைவரும் உறுதிச் செய்ய வேண்டும். இத்தருணத்தில், இன ஒற்றுமையை வளர்த்து, பொதுவான நிலைப்பாட்டைக் கண்டறிந்து, துன்பத்தில் வாழ்பவர்களுக்கு உதவும் மனப்பான்மையை மேலோங்கச் செய்ய வேண்டும்.எனவே, இந்தத் தீபாவளி திருநாள் புத்துணர்வுடனும் தூய சிந்தனையுடனும் கொண்டாடப்படுவதோடு, அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரமும் நாட்டின் வளமும் தொடர்ந்து உயர வேண்டும்.அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்து!!!https://x.com/anwaribrahim/status/1980062106650382651

இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க

இந்த தீபாவளி நன்னாளில், இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் ஹிந்துக்களுக்கு வாழ்த்துகள். நமது வீடுகளில் விளக்கு ஏற்றும் இந்நேரத்தில், நமது மனங்களில் உள்ள இருளை, நமது கூட்டு முயற்சியை ஒளிரச் செய்யும். தீமையை நன்மை வென்றதன் இந்த கொண்டாட்டம் போதைப்பொருள் துஷ்பிரயோகம் முதல் பயங்கரவாதம் வரை நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு எதிரான அச்சுறுத்தல்களைத் தோற்கடிப்பதற்கான நமது அரசின் உறுதியை பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு குடிமகனும் பாதுகாப்புடனும் மற்றும் கண்ணியத்துடனும் வாழ்வதை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பான செழிப்பான தேசத்தை கட்டியெழுப்புவோம்.https://x.com/anuradisanayake/status/1980061115997638751

டெக்சாஸ் கவர்னர் கிரேக் அபோட்

டெக்சாஸ் கவர்னர் கிரேக் அபோட், கவர்னர் மாளிகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். இதில் இந்திய தூதரக அதிகாரி டி.சி. மஞ்சுநாத், இந்திய அமெரிக்கா வம்சாவளியினர் பங்கேற்றனர்.இவ்விழாவில், இருளை ஒளி வெற்றி கொள்வதை குறிக்கும் வகையில், கவர்னர் அபோட், அவரது மனைவி செசிலியா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் விளக்கேற்றினர். அப்போது தீபாவளி வாழ்த்து தெரிவித்த கவர்னர், அமெரிக்காவில் வசிக்கும் வம்சாவளியினர், நாட்டின் முன்னேற்றம், வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளை பட்டியலிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Venkat esh
அக் 20, 2025 22:13

மாடலின் தீபாவளி வாழ்த்துக்கள் வேண்டாம்


D.Ambujavalli
அக் 20, 2025 20:22

உலகெங்கிலும் பரவியுள்ள ஹிந்துக்களின் மத நம்பிக்கைக்கு மதிப்பளித்து வாழ்த்துக்கூற இத்தனை தலைவர்கள் உள்ள நிலையில், தன் சொந்த மாநிலம், சகோதரர்களை வாழ்த்தக்கூட மனம் வராதவர் வீசியெறியும், நம்மிடம் கொள்ளையடித்த பணத்தில் சிறு கடுகளவுதான் 200/ 500, சில்லறை பரிசுகளுக்காக அவரை ஆட்சியில் அமர்த்த எண்ணலாமா மக்களே


T.Senthilsigamani
அக் 20, 2025 19:49

நல்ல செய்தி . யோசித்து பாருங்கள் நடுநிலையார்களே ஒரு கடவுள் மறுப்பு இயக்கம் -திக இயக்கத்தின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு ,ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் சொல்லாது மறுக்க திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முழுதுரிமை உண்டு .மறுப்பதற்கு இல்லை .ஆனால் தமிழக அரசின் முதலமைச்சராக ஹிந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்துக்கள் இல்லை என்று சொல்லுவது பிறழ்முரண். சிறுபான்மை மதத்தை சேர்ந்த எனது நண்பரிடம் இது குறித்து கேட்ட போது அவர் சொன்ன பதில் என்னை சிந்திக்க வைத்தது .அவர் சொன்னது இது தான் - என் மதக்கோட்பாடுகளை ,என் மத கடவுளரை ,என் மத பண்பாடுகளை ,என் மத கலாச்சாரங்களை மூட நம்பிக்கைகள் என்றும் பொய்மைகள் என்றும் வாதிடுவோருக்கு நான் வாக்களித்தால் ,அவர்களின் நிலைப்பாட்டை நான் ஆதரித்தது போல ஆகாதா என்றார் .உண்மை .இதன் பொருள் ஒரு மதத்தினர் அவர்களின் மதத்தினருக்கு மட்டும் வாக்களிக்க வேண்டும் என்பது பொருளல்ல .என் மத கொள்கைகளை ,என் மத நம்பிக்கைகளை மதிப்பவருக்கு எனது வாக்குகள் என்பதாகும் .இதனை தமிழக ஹிந்துக்கள் புரியும் காலம் வரும் .அப்போது திராவிட மாயை அகலும் .இது உறுதி


ஆரூர் ரங்
அக் 20, 2025 19:43

பாகிஸ்தான் அதிபர், பிரதமரும் கூட தீபாவளி வாழ்த்து கூ‌றியு‌ள்ளன‌ர். நம்ம ஓட்டை வாங்கிய ஸ்டாலின் குடும்பம் மட்டும் மவுனம்.


GMM
அக் 20, 2025 18:44

உலக நாடுகளின் தலைவர்கள் தீபாவளி வாழ்த்துகள். மகிழ்ச்சி. உள்ளூர் ஸ்டாலின், ராகுல் , கார்கே வாழ்த்துகள் சொன்னார்களா?


சூர்யா
அக் 20, 2025 18:40

மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர்.அன்வார் இப்ராஹிம் முந்தைய பிரதமர் மகாதீர் முகம்மது போல் இல்லாமல் இந்தியா மீதும் இந்தியர்கள் மீதும் பாசம் உள்ளவர். தங்களது நாடாளுமன்றத்தில் திருக்குறளை என்றைக்கும் மறக்காமல் மேற்கோள் காட்டுபவர். தங்களது இஸ்லாமிய மதத்தின் கோட்பாடுகளை முழுமையாக அவர் கடைபிடித்தாலும் ,இந்துக்களின் பண்டிகைகளுக்கும் அவர்களது நம்பிக்கை கருதி என்றும் வாழ்த்து சொல்ல மறக்காதவர். இந்து மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொன்னால் எங்கே தனக்கு பெரும்பான்மை இஸ்லாமியர்கள் வாக்குகள் கிடைக்காமல் போய் விடுமோ? என எண்ணாதவர். இந்துக்களுக்கு ,இந்து மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் விசயத்தில் இங்குள்ள சிலர் அவரிடம் பாடம் கற்க வேண்டும்.


தென்காசி ராஜா ராஜா
அக் 20, 2025 18:36

ஒரு மனிதனின் அடையாளம் இனம் மதம் அதற்கு முரண்பாடுகள் உள்ள எவருக்கும் உங்கள் ஆதரவு வேண்டாம்


N. Ramachandran
அக் 20, 2025 18:22

தீபாவளி வாழ்த்து தெரிவித்த உலக தலைவர்கள் எல்லோருக்கும் மிக்க நன்றி. நம்ம திராவிட மாடல் முதல்வர், துணை முதல்வர் , தலைவர்களின் தீபாவளி வாழ்த்து இதுவரை வரவில்லை. மானமுள்ள ஹிந்து மக்களே விழித்துகொள்ளுங்கள் 2026இல் உங்கள் வாக்கு பொய் முடிக்கு அளிக்க வேண்டாம் ... நன்றி. ஹிந்துக்கள் அனைவர்க்கும் இனிய தீபாவளி நல்லவாழ்த்துக்கள். மக்களே நீங்கள் வாழ்க வளமுடன்....


duruvasar
அக் 20, 2025 17:59

"இருளின் மீது ஒளி மேலோங்குகிறது. பயத்தின் மீது நம்பிக்கை மேலோங்குகிறது சிங்கப்பூராரே என்னாங்க இப்படி பொசுக்குன்னு சொல்லிடீங்க.


duruvasar
அக் 20, 2025 17:56

மலேசியா அன்வர் அய்யா உச்சந்தலையில் ஒரே போடாக போட்டுவிட்டார் .


சமீபத்திய செய்தி