உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: முதலிடத்தை தக்கவைத்த எலான் மஸ்க்; 2ம் இடத்தை இழந்தார் ஜெப் பெசோஸ்

உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: முதலிடத்தை தக்கவைத்த எலான் மஸ்க்; 2ம் இடத்தை இழந்தார் ஜெப் பெசோஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: போர்ப்ஸ் இதழின் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 2ம் இடத்தில் இருந்த அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் போர்ப்ஸ் நாளிதழ், உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ.,வும், எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 407.3 பில்லியன் டாலர்.இரண்டாவது இடத்திற்கு ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி எலிசன் முன்னேறி உள்ளார். அவரது நிறுவனத்தின் பங்குகள் விலை உயர்வு காரணமாக, கூடுதலாக 26 பில்லியன் டாலர் சொத்து கிடைத்தது. இதனால், அவரது மொத்த சொத்து மதிப்பு 243 பில்லியன் டாலர் ஆக அதிகரித்தது.3வது இடத்தில் மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் சக்கர்பெர்க் 239 பில்லியன் டாலர் சொத்துகளுடன் உள்ளார்.இதுவரை 2வது இடத்தில் இருந்த அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெசோஸ், இந்த முறை 4து இடத்துக்கு தள்ளப்பட்டார். அவரது சொத்து மதிப்பு 226 பில்லியல் டாலர் ஆக உள்ளது. ஜெப் பெசோஸ், உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், கடந்த 2017 ம் ஆண்டு முதல் 2வது இடத்தில் இருந்து வருகிறார். இடையில் 2024ம் ஆண்டு மட்டும் அக்., மாதம் மார்க் சக்கர்பெர்க்கிடம் 2வது இடத்தை பறிகொடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ