உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரானை தொடர்ந்து இஸ்ரேலில் ஏமன் ஏவுகணைகள் தாக்குதல்; சுட்டுவீழ்த்தியதாக இஸ்ரேல் ராணுவம் தகவல்

ஈரானை தொடர்ந்து இஸ்ரேலில் ஏமன் ஏவுகணைகள் தாக்குதல்; சுட்டுவீழ்த்தியதாக இஸ்ரேல் ராணுவம் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: இஸ்ரேலில் ஏமன் ஏவிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் வானில் இடைமறித்து சுட்டுவீழ்த்தப்பட்டது என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்த 2023 அக்டோபரில் போர் துவங்கியது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zkl6mjzr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்தப் போரில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு, அண்டை நாடான ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி பயங்கரவாத அமைப்பு ஆதரவு தெரிவித்தது. ஈரானின் ஆதரவு பெற்றது ஹவுதி பயங்கரவாத அமைப்பு. செங்கடல் உள்ளிட்ட கடல் பகுதிகளில், அமெரிக்காவின் சரக்கு கப்பல்கள் உள்ளிட்டவற்றின் மீது ஹவுதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், காசாவுக்கு ஆதரவாக ஹவுதி பயங்கரவாத அமைப்பினர் இஸ்ரேல் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர்.''அவர்கள் ஏவிய டஜன் கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வானில் இடைமறித்து சுட்டு வீழ்த்திட்டோம். ஏமன் மீது பதில் தாக்குதல் நடத்தி வருகிறோம்'' என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் ஈரான் இஸ்ரேலில் தாக்குதல் நடத்தியது. தற்போது போர் நிறுத்தம் அமலாகி உள்ளது. ஈரானை தொடர்ந்து, இஸ்ரேலில், ஏமன் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Balakrishnan karuppannan
ஜூன் 29, 2025 15:53

ஒருவேளை உலக மக்கள் எல்லோரும் உணமையில் சகோதரத்துவம், சகிப்புத்தன்மையுடன் வாழ்ந்தால் போர் என்பதே இருக்காது. ஆயுதங்கள் தேவை இல்லை. எல்லா வளமும் எல்லோருக்கும். உலகில் வறுமை என்பதே இருக்காது.


Syed
ஜூன் 29, 2025 19:12

தீவிரவாதி நாடு.இஸ்ரேல்


GMM
ஜூன் 28, 2025 17:34

உலகில் சிலருக்கு அடிமைகள் தேவை. உயரிய தொழில் நுட்பம் அனைத்து அசைவுகளையும் கண்காணிக்கிறது. அணு ஆயுத போரை சீனா ரஷ்யா, வடகொரியா போன்ற நாடுகள் விரும்பாது. அங்குள்ள அரசியல் தலைவர்கள் சுகபோக வாழ்வில் மிதந்து விட்டனர்? அநேக அரபு நாடுகள் ஒரு போதும் ஆதரிக்காது. பூலோக சொர்க்கம் உருவாகி விட்டது. பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகள் தோல்விக்கு முன் கடும் முடிவு எடுக்காது. சர்வதேச ஆதரவு குறைவு. அமைதியை விரும்பும் , ஆக்கிரமிப்பு தடுக்கும், பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள நாடுகள் ஆயுத முடிவு எடுக்கலாம். ஐ. நா. சபை யாரையும் பாதுகாக்க முடியாது. யானை படுத்தால்..?


Yasararafath
ஜூன் 28, 2025 16:10

ஏமன் ஒரு சிறிய நாடு


அசோகன்
ஜூன் 28, 2025 16:06

தவளை தன்வாயால் கெடும் என்பதுபோல்..... இஸ்ரேலிடம் போய் எங்களை மட்டும் ஏன் விட்டு வச்சியிருக்க என கேக்குது


kumarkv
ஜூன் 28, 2025 15:59

ஏமன் சோத்துக்கே வழியில்லாத நாடு.


JAINUTHEEN M.
ஜூன் 28, 2025 15:39

ஏண்டா மூதேவி.. இஸ்ரேல் மேற்காசிய நாடு..? ஹமாஸ் பயங்கரவாதி, ஹவுத்தி பயங்கரவாதி.? இந்த ஒலகத்துலயே நம்பர் ஒன் பயங்கரவாதி அமெரிக்காவும், இஸ்ரேலும் தாண்டா..? ஆக்கிரமிக்கப்பட்ட தங்கள் நாட்டை மீட்க போராடுபவன் பயங்கரவாதி.? ஆக்கிரமிப்பு செய்த இஸ்ரேல் மிதவாதி.? இதுதான் உங்க சங்கி மொழியா.?


KRISHNAVEL
ஜூன் 28, 2025 14:37

ஈரான் ஏவுகணைகள் ஏமன் மூலமாக தாக்குகின்றனவா ? ஏதாவது பேரழிவுக்கு பின்தான் இந்த போர் முடிவுக்கு வரும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை