உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயார்; இப்போது சொல்கிறார் உக்ரைன் அதிபர்

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயார்; இப்போது சொல்கிறார் உக்ரைன் அதிபர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கீவ்: மேற்கத்திய நாடுகளிடமிருந்து உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களை பெற்றால், நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக இருக்கிறோம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்து உள்ளார்.ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் தீர்வு இல்லாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது. இந்தசூழலில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அந்நாட்டு செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி: ஆரம்பத்தில் இருந்தே, உக்ரைனின் விருப்பம் நேட்டோவில் சேருவதாக இருந்தது; இவை உண்மையான பாதுகாப்பு உத்தரவாதங்கள். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த சில கூட்டாளிகள் இந்த முடிவை ஆதரிக்கவில்லை. மாற்று ஏற்பாடுகள் இன்னும் வலுவான பாதுகாப்பை வழங்க முடியும். இன்று, உக்ரைனுக்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு உத்தரவாதங்கள் ரஷ்ய படையெடுப்பைத் தடுக்க முடியும்.அமைதியையும், ரஷ்யா மற்றொரு தாக்குதலை நடத்தாது என்பதற்கான உறுதியான உத்தரவாதங்களையும் உக்ரைன் விரும்புகிறது. உக்ரைன் நகரங்கள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் மூலம் ரஷ்யா வேண்டுமென்றே மோதலை நீடிக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் ஏற்பட்ட மிக மோசமான போர் இதுவாகும். ரஷ்யாவிடம் உக்ரைன் எந்த பிராந்தியத்தையும் விட்டுக்கொடுக்காது. இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Sengiriyaan
டிச 16, 2025 14:29

ஐரோப்பிய ஒன்றியத்திடம் இராணுவபலம் இல்லை …நவீன ஆயுதங்களும் இல்லை…போர்களை எதிர்கொள்ளத்தக்க மக்கள்பலமும் இல்லை…மறைமுக சோமாலியா கத்தியோப்பியா போன்றே உட்கட்டமைப்புக்கள் உள்ளன….தேசிய மக்கள் இனப்பரம்பல்அற்று வந்தேறு சமூகமே உலாவுகிறது …..ஆசிய ஆபிரிக்க மற்றும் ஐரோப்பிய அருகதிய நாட்டுமக்களும் பழைய யூக்கோசலாவிய நாட்டு மக்களுமே வந்துள்ளனர் . இந்த வந்தேறி இனக்குழுக்கள் இன்னமும் போதுத் தேசிய இணக்கமுள்ள இனமாக உருப்பெறவில்லை….பழைய வல்லரசு கதை வைதேகிகந்திருந்தாள் படத்தில் விஜயகாந்த் மாதிரி நிமிர்ந்து நிற்கிறது ….இதுதான் ஐரோப்பிய ஓன்றியத்தின் நிஜம் ….நையீரியா போர்தொடுத்தாலே எதிர்துப் போர்புரிய ஐரோப்பாவால் முடியுமா என்பதே பரிதாபநிலை


Nathan
டிச 16, 2025 11:56

உக்ரைன் முதலில் டான்பாஸ் பிராந்தியத்தில் இருந்து வெளியேற வேண்டும் பின்னர் எஞ்சிய பகுதியை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைத்துக்கொண்டு நேட்டோ விடம் இருந்து விலகி இருக்க வேண்டும் இதற்கு ரஷ்யாவுடன் நேர்மையான ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இது ஒன்றே தற்போது உள்ள உக்ரைன் ரஷ்யா மோதலுக்கு நிரந்தர தீர்வு தரும்


ஜெய்ஹிந்த்புரம்
டிச 16, 2025 08:37

இதை போர் ஆரம்பிச்ச அன்னிக்கே சொல்லியிருக்கலாமே என்று போர் வல்லுநர்கள் சொல்லி அழுகிறார்கள்.


visu
டிச 15, 2025 16:32

ஆக போர் முடிவுக்கு வராது என்று ஜெலென்ஸ்கய் தகவல்


சிட்டுக்குருவி
டிச 15, 2025 16:30

மண்குதிரையை நம்பி வெள்ளாற்றில் இறங்கிவிட்டார். சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவதுமேல் என்று அழகாக சொன்னார்கள் .அது நிசமாகிவிட்டது .இது எல்லா உலகுக்கு ஒரு நல்ல பாடம் .


தத்வமசி
டிச 15, 2025 16:25

இவரைப் போன்றவரை தலைவராக தேர்ந்தெடுத்தால் நாடு இப்படித் தான் சின்னாபின்னமாகி விடும். இப்போதும் இவர் எந்த பாடம் கற்கவில்லை.


R Dhasarathan
டிச 15, 2025 13:26

ரத்த வாடை இன்னும் யாரையும் திருப்தி படுத்தவில்லை போலும்...


Barakat Ali
டிச 15, 2025 12:22

இத்தனை உயிர்களைப் பலிகொடுத்த பிறகு ????


Santhakumar Srinivasalu
டிச 15, 2025 12:17

எங்கள் பாதுகாப்புக்கு உறுதி கொடுத்தால் நேட்டோவில் இணையமாட்டோம் என்று இந்த நடிகன் கூறியிருந்தால் இந்த 3 வருட போரே இருந்திருக்காதே? இவ்வளவு சேதமும் இல்லையே?


ஜெகதீசன்
டிச 15, 2025 12:05

இப்பவாவது அறிவு வந்ததே.