பகவான் ரமண மகரிஷியின் 74வது ஆராதனை
பகவான் ரமண மகரிஷியின் 74வது ஆராதனை தினம் ஏப்ரல் 14 ஆம் தேதி மாலை டெல்லி லோதி ரோடில் அமைந்துள்ள ஸ்ரீ ரமண கேந்திராவில் அனுசரிக்கப்பட்டது. கணேச பூஜை, கலச பூஜை மற்றும் அஷ்டோத்திரம் ஆகியவற்றைத் தொடர்ந்து பகவானுக்கு பூர்ணகும்பம் செய்து மகாபூஜை நடத்தப்பட்டது மற்றும் பகவான் உபதேச சாரம் முழுமையாக வாசிக்கப்பட்டது. ராகவ் குமார், சைவ சித்தாந்தத்தின் பின்புலம் கொண்ட பகவானின் தீவிர பக்தர், பகவானின் சுய அறிவின் கொள்கைகளைப் பற்றி விரிவாகப் பேசினார். மேலும் எளிமை மற்றும் துறவறத்தை உயர்த்தி, ஞானி என்பது ஈஸ்வரனைத் தவிர வேறு யாருமில்லை என்பதை வெளிப்படுத்தினார். சிவப்பிரகாசம் பிள்ளை எழுதிய ரமணபாத பஞ்சரத்தினம், சுலோச்சனா நடராஜன் இசையமைத்து பகவானின் மற்றொரு சிறந்த பக்திமான் ஜெயந்தி அய்யர் பாடி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தார்.ஜி. ராகவேந்திரா பிரசாத் வயலின் வாசித்தார். பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க பகவானே எழுதிய அருணாசல அக்ஷரமணமாலா மற்றும் ரத்தின மாலை முழுவதுமாகப் பாடப்பட்டது 74வது ஆராதனை தினத்தை முன்னிட்டு சில நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு இறுதியாக ஆரத்தி செய்யப்பட்டது. அனைத்து பக்தர்களுக்கும் மகாபிரசாதம் விநியோகத்துடன் விழா நிறைவடைந்தது. - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்