வர்ணம் வாய் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் வழங்கிய கர்நாடக இசை
வர்ணம் வாய் போட்டியில் (பதிப்பு 1) வெற்றி பெற்றவர்கள் கர்நாடக இசை நிகழ்ச்சி, நொய்டா செக்டர் 62 ல் உள்ள ஸ்ரீ விநாயகா ஸ்ரீ கார்த்திகேயா கோவிலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ராமகிருஷ்ணாபுரம் சவுத் இந்தியன் சொசைட்டி, புது தில்லி, மற்றும் வேதிக் பிரச்சார் சன்ஸ்தான், நொய்டா, இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். முதல் பரிசு பெற்ற பார்கவி சுவாமிநாதன், ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், பாபநாசம் சிவன், ஷ்யாமா சாஸ்திரி ஆகியோரின் கீர்த்தனைகளை வழங்கினார், ஸ்ரேஷ்டா ஹரிஹரன் (இரண்டாம் பரிசு), முத்துசுவாமி தீட்சிதர், மைசூர் வாசுதேவாச்சார், ஜி என் பாலசுப்ரமணியம் ஆகியோரின் கிருதிகளை பாடினார். ராதிகா ராமகிருஷ்ணன் (மூன்றாம் பரிசு) சுவாதி திருநாள், இ.எஸ்.சங்கரநாராயண ஐயர், பட்டணம் சுப்ரமணிய ஐயர், அருணாசல கவி பாடல்களைப் பாடினார். இவர்களுடன் வயலினில் கேஷவ் மோகன் குமார், மிருதங்கத்தில் மனோகர் பாலச்சந்திரன் பக்க வாத்தியம் வாசித்தனர். ஆர் கே பி சவுத் இந்தியன் சொசைட்டி சார்பில் தலைவர் வாசன் வரவேற்றார், துணைத் தலைவர் எஸ்.கிருஷ்ணசாமி கலைஞர்களை அறிமுகம் செய்து வைத்தார். வெற்றி பெற்றவர்களுக்கு சண்முகானந்தா சங்கீத சபா இணைச் செயலர் கணபதி, மற்றும் குழு உறுப்பினர் விஜயா முத்துக்குமார், கோப்பைகள், சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கினார். இந்த சந்தர்ப்பத்தில், குழந்தை கலைஞர் ஸ்கந்தன் சுரேஷ்க்கு புல்லாங்குழல் வாசிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆர்.கே.பி நிர்வாகம் அவரையும் கவுரவித்து ஆசீர்வதித்தது. வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் (VPS) சார்பாக வி சிவராமன், வி வேதமூர்த்தி, Wg Cdr (Retd) S சந்திரசேகர் தலைமை விருந்தினர்களை கௌரவித்தனர். இந்நிகழ்வில் குரு அம்பிகா ஸ்ரீகாந்தும் கலந்து கொண்டார். விபிஎஸ் சார்பில் சுஜாதா கோபால், மற்றும் காயத்திரி வெங்கடராமன் ஆகியோர் கவுரவித்தனர். விபிஎஸ் தலைவர் ரவி பி சர்மா நன்றியுரை வழங்கினார். கலந்து கொண்ட இசை ஆர்வலர்கள் அனைவருக்கும் மகா பிரசாதம் வழங்கப்பட்டது. - நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்