ஹரி நகர் நாராயணி மந்திரில் அன்னதானம்
ஏகாதசியை முன்னிட்டு, புதுதில்லி ஹரி நகர் நாராயணி மந்திரில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீ ராம நவமி மஹோஸ்தவ் சமிதி செய்திருந்தது. சமிதி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விநியோகம் செய்தனர். அன்னதானம் வழங்குவது ஒரு தொண்டு செயலாகவே கருதப்படுகிறது. பசியுற்றோருக்கு உணவளிப்பது சிறந்த மனிதப் பண்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. -- நமது செய்தியாளர் எம்.வி.தியகராஜன்