விகாஸ்புரி ஸ்ரீ தேவி மூகாம்பிகை கோவிலில் லகுன்யாஸ ஏகாதச ருத்ர ஜப பாராயணம்
புதுதில்லி : விகாஸ்புரி சி பிளாக்கில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ தேவி மூகாம்பிகை கோவிலில் லகுன்யாஸ ஏகாதச ருத்ர ஐபம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, விகாஸ்புரி பிராத்தனா குழுவினர் செய்து இருந்தனர். ரித்விக்குகள் இதில் பங்கேற்று பாராயணம் செய்தனர். இதைத் தொடர்ந்து, சங்கல்பம், புண்யாஹவாசனம், கலச ஸ்தாபனம் லலிதா சகஸ்ரநாம பாராயணம் மற்றும் ஆரத்தியுடன் நிறைவுற்றது. பிள்ளையார், அம்பாள் மற்றும் சுப்பிரமணியர் திருவுருவச் சிலைகள் சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பிரதி மாதம் முதல் வாரத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை தோறும், ஏகாதச ருத்ர ஜபம் மற்றும் லலிதா சகஸ்ரநாம பாராயணம் இக்கோயிலில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்