உள்ளூர் செய்திகள்

வட திருத்தணியில் உலக அமைதிக்கு லட்ச்சார்சனை

தில்லிக்கு கிழக்கே 6 கி.மீ தொலைவில் சாகிபாபாத் லாஸ்பத் நகரில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வள்ளி, தெய்வானை உடனுறை முருகப் பெருமான் அருள்பாலித்து வருகிறார். வடதிருத்தணி என்று கருதப்படுகின்ற அருள்மிகு வடதிருத்தணி சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் முருகனுக்கு வைகாசி விசாகத் திருநாளை முன்னிட்டு நடைபெற்று வரும் 3 நாள் வைபவத்தின் 2 ஆம் நாளன்று காலை மகா அபிஷேகத்தைத் தொடர்ந்து உலக அமைதிக்காக சாகிபாபாத் சுப்ரமணிய ஸ்வாமி சேரிடபிள் டிரஸ்ட் சார்பில் லட்ச்சார்சனை மிகச் சிறப்பாக நடைபெற்றது. பகுதி வாழ் தமிழர்கள் சாதி இன பேதமின்றி ஒன்று கூடி நிகழ்வில் பங்கு கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி முடிவில் அன்னதானம் நடைபெற்றது. - நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !