உள்ளூர் செய்திகள்

நொய்டா கோவிலில் லலிதா லட்சார்ச்சனையுடன், நவராத்திரி விழா நிறைவு

நவராத்திரி திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் போல், இந்த வருடமும், நொய்டா செக்டர் 62 ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவிலில், அனைத்து நாட்களிலும் தினமும் காலையில் தேவி மஹாத்மியம் பாராயணம், மற்றும் மாலையில் தினமும் லலிதா சகஸ்ரநாமம், மூக பஞ்ச சதி, பக்தர்கள் பாராயணம் செய்தனர். இதைத் தொடர்ந்து மகா ஆரத்தி நடந்தது. அனைத்து பக்தர்களுக்கும் மஹா பிரசாதம், வழங்கப்பட்டது. பிரம்மஸ்ரீ ஸ்ரீராம் வாத்தியார் மற்றும் குழுவினர் மேற்பார்வையில் இந்த ஆண்டு நவராத்திரி விழாவின் சிறப்பம்சமாக சண்டி ஹோமம் நடைபெற்றது. மேலும், இந்த விழாவில், சுகாசினி மற்றும் கன்யா பூஜை செய்யப்பட்டது. இருவேறு நாட்களில் 2000 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்க கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்தனர். முதலாவதாக, டி ராகவாச்சாரியின் (ஹைதராபாத் பிரதர்ஸ்) கர்நாடக இசை கோவில் வளாகத்தில் நடை பெற்றது. பக்க வாத்தியத்தில் அரவிந்த் நாராயணன் வயலின், மற்றும் அபிஷேக் அவதானி மிருதங்கத்தில் ஆதரவளித்தார். பிறகு, நொய்டாவில் உள்ள பவானிஸ் பிரசன்னாலயா மாணவர்கள் பரதநாட்டியம் வழங்கினார். அதனை தொடர்ந்து, டாக்டர் சுசீலா விஸ்வநாதன் மற்றும் குழுவினர் 'கமலாம்பா நவவர்ணம்' வழங்கினார். கோவில் நிர்வாகம், இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு ஒரு நாள் அவர்களுக்கு மேடையில் அமர்ந்து பாட வாய்ப்பு அளித்தனர். இதில் பல இளம் கலைஞர்கள் தேவியைப் புகழ்ந்து பாடினார். நிறைவாக, ஐம்பதுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்புடன், 'லலிதா லட்சார்ச்சனை' செக்டர் 62 கோவில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நமது செழுமையான தென்னிந்திய பாரம்பரியம் மட்டுமின்றி, இளைய தலைமுறையினருக்கு ஆர்வத்தை வளர்க்கும் வகையில்,'கொலு', ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக கோவில் வளாகத்தில் வைக்கப்படுகிறது. அதே போல் நொய்டா செக்டார் 22 ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவில் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் தினசரி பாராயணமும் நடைபெற்றது. அனைத்து பூஜைகளும் மணிகண்டன் சர்மா, மோஹித் மிஸ்ரா, ஜெகதீசன் சிவாச்சாரியார் ஆகியோர் செய்தனர். இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை ஸ்பான்சர் செய்த சண்முகானந்த சங்கீத சபா, டெல்லி, ஸ்ரீ ஹயக்ரீவ, டெல்லி மற்றும் ராமகிருஷ்ணாபுரம் தென்னிந்திய சங்கத்திற்கு, கோயில் நிர்வாகம் நன்றி தெரிவித்தது. இரண்டு கோயில்களும் கடந்த முப்பத்தேழு ஆண்டுகளாக பக்தர்களுக்கு சேவை செய்து வரும் நொய்டா வேதிக் பிரசார் சன்ஸ்தானால் நிர்வகிக்கப்படுகிறது. - நமது செய்தியாளர் எஸ்,வெங்கடேஷ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !