பிரதோஷ வழிபாடு
புது தில்லி : சாலிமார் பாக் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், மாலை 6.00 மணிக்கு கிருஷ்ணபக்ஷ பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி ஸ்ரீ சுந்தரேஸ்வரர் மற்றும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில ஸ்ரீ சுந்தரேஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்