உள்ளூர் செய்திகள்

மூஷிக வாகனத்தில் விநாயகப் பெருமான் வீதியுலா காட்சி

தடைகளை நீக்கி, புதிய தொடக்கத்தின் தெய்வமாக போற்றப்படும் யானைத் தலை கொண்ட விநாயகர் பிறந்த நாளான ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. புதுடில்லி ஷாலிமார் பாக், ஸ்ரீ மீனாட்சி கோவில் வளாகத்தில் மூஷிக வாகனத்தில் விநாயகப் பெருமான் வீதியுலா காட்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மூஷிக வாகனத்தை பிரார்த்தனை செய்து விநாயகரை வழிபட்டனர். மூஷிக வாகன மோதக ஹஸ்த சாமர கர்ண விளம்பித சூத்ர வாமன ரூப மஹேஸ்வர புத்ர விக்ன விநாயக பாத நமஸ்தே!! - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !